Sunday, 22 August 2010

அபராத பயத்தில் அமீரக (துபை) மக்கள்

Burj Khalifa
துபை என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிரமாண்டம் (உலகத்திலேயே உயர்ந்த கட்டடம் - புர்ஜ் கலீஃபா, உலகத்திலேயே பெரிய ஷாப்பிங் மால் – துபை மால், துபை மெட்ரோ) . சமீப காலங்களாக துபை என்றவுடன் நினைவுக்கு வருவது பொருளாதார பின்னடைவு, வேலையிழப்பு, கடுமையான கடனில் தவிக்கும் நிறுவணங்கள் & மக்கள் மற்றும் எங்கும் சோகத்துடன் கானும் வெளிநாடு வாழ் அமீரக மக்கள். 

இதையெல்லாம் தாண்டி ஒரு புதிய பீதியால் துபை மக்கள் பெரிதும் பயந்து போய் இருக்கின்றனர். ஆம் அது தான் அபராத பீதி. முன்னெல்லாம் வாகனங்கள் வைத்திருக்கக் கூடியவர்கள் மட்டுமே பயப்படும் ஒரு விஷயமாக இருந்த அபராதம் இப்போது அமீரகத்தில் குறிப்பாக துபையில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் பயப்படும் ஒரு விஷயமாக சமீப காலமாக மாறியிருக்கிறது. 

சாலையின் நடுவில் பாதசாரிகள் (pedestrians) சாலையை கடந்தால் அபராதம், துபை மெட்ரோ ரயில் நிலையங்களில் அடித்து பிடித்து அவசரத்தில் ரயிலில் ஏறினால் அபராதம், கைலி கட்டிக் கொண்டு தமிழ் பஜார் போன்ற இடங்களில் உலவிக் கொண்டிருந்தால் அபராதம் என்று விதிகளால் மக்கள் தினமும் பாதிக்கப்படிருக்கின்றனர். அதிலும் அதிகம் பாதிக்கப்படுவோர் கடை நிலை ஊழியர்கள் (Labours) என்பது மனதிற்கு மிகவும் வருத்தம் தரக்கூடிய செய்தியாகும். இதுவெல்லாம் மக்களின் நன்மைகளுக்காகவே நாங்கள் செய்கின்றோம் என்று கூறுகிறார்கள் துபை போக்குவரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள். 

இதில் பெரிதும் பாதிக்ககூடிய பாதசாரிகள் சாலை அபராதம் குறித்து கீழே காண்போம். அதாவது 80 கி.மீ வேகம் செல்லக்கூடிய சாலையில் பாதசாரிகள், சிக்னலிலோ அல்லது பாதசாரிகள் கடக்கும் வழியிலோ (pedestrian crossing or zebra crossing) தான் கடக்க வேண்டும். அப்படி கடக்காமல் நடு ரோட்டில் நாம் சாலையை கடந்தால் நமக்கு கிடைக்கும் வெகுமானம் 210 திர்ஹத்திற்கு ஓலை (அபராதம்). சரி 210 திர்ஹம் தானே, கட்டி விட்டு சென்று விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது மட்டும் முடியாது. உங்களுடைய பத்தாக்காவை (Labour Card) துபை காவல் துறை வாங்கிக் கொண்டு உங்களுக்கு ஒரு அபராத (Fine) சீட்டு கொடுத்து விடும். நீங்கள் டேரா துபையில் பிடிப்பட்டால் டேரா போக்குவரத்து அலுவலகத்திலும் (Deira Dubai Murur) அல்லது பார் துபையில் பிடிப்பட்டால் பார் துபாய் போக்குவரத்து அலுவலகத்திலும் (Bur Dubai Murur) சென்று பணம் கட்டி உங்களுடைய பத்தாக்காவை (Labour Card) வாங்கிக் கொள்ளலாம். 



காலை, மாலையில் தான் அபராதம் விதிக்கிறார்கள் என்று நினைக்கும் நம் போன்ற சகோதரர் ஒருவர் இரவு 1:30 மணிக்கு இந்த ரமலானில் டேரா யுனைட்டட் ஹைப்பர் மார்க்கெட் அருகே சாலையை கடந்திருக்கிறார். அப்போது பெர்முடாஸும் T-ஷர்ட்டும் அணிந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து அவருடைய பத்தாக்காவை வாங்கி அபராதம் விதித்தது அதிகாரிகளின் தொழில் பக்தியை காட்டுகிறது. 

இங்கு தான் பாதசாரிகள் சாலையை கடக்க வேண்டுமாம். 

signal crossing
zebra crossing



அபராதம் விதிக்கப்பட்ட 15 நாளைக்குள் சென்று நம்முடைய பத்தாக்காவை அபராதத்தை கட்டி நாம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் குறைந்தது 4 நாட்கள் கழித்து சென்று வாங்கிக் கொள்வது நலம். 

இதைப் பற்றி போக்குவரத்து விபத்து துறை இயக்குனர் மேஜர் உமர் மூஸா அஷோர் (Major Omar Mousa Ashour) அவர்கள் குறிப்பிடும் போது “இந்த வருடத்திற்கான முதல் 6 மாதக் காலங்களில் மட்டும் 12,000 பாதசாரிகள் சாலையை கடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 6,805 அபராதங்கள் டேரா துபை காவல்துறையாலும், 6,134 அபராதங்கள் பார் துபை காவல்துறையாலும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 80 கி.மீ வேகம் செல்லக்கூடிய சாலையை முறையாக கடக்காவிட்டால் இந்த அபராதம் விதிக்கப்படும் என்றும், 50 திர்ஹத்திலிருந்து 200 திர்ஹம் வரை அபராதத்தை உயர்த்தியதால் தான் துபையில் பாதசாரிகளால் ஏற்படும் விபத்துகள் கனிசமாக குறைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். 

ஆனால் அபுதாபியில் இந்த வருடத்தில் மட்டும் 4,010 பாதசாரிகள் சாலையை கடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாதசாரிகள் கடக்க சாலையில் நிற்கும் போது அவர்களுக்கு வழி விடாமல் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் 6 கரும்புள்ளிகள் (6 Black Points) அபரதமாக விதிக்கப்படும் என்று அமீரக போக்குவரத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நம்மில் பலர் தினமும் பாதயை கடக்கின்றோம். ஒரு முறை கடக்கும்முன் உங்கள் குடும்பத்தை பற்றியும் உங்கள் வாழ்க்கையை பற்றியும் யோசியுங்கள். 20 சதகித விபத்துகள் பாதசாரிகள் சாலையை கடக்கும் போது ஏற்படுகின்றது என்கிறது ஒரு புள்ளி விபரம். ஆகவே இது போன்ற அபராதங்களினால் ஏற்படும் பண இழப்பையும், விபத்துகளினால் ஏற்படும் உயிர் மற்றும் உறுப்புகளின் இழப்பையும் தடுக்க முயர்சி செய்வோமாக! 

தோழமையுடன் 

அபு நிஹான்

5 comments:

  1. அருமையான எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

    ReplyDelete
  2. சகோதரர் காதர் அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. தலைவா...

    என்ன சொல்றீங்க....

    நைட் 1.30 மணிக்கு கடமை கந்தசாமி வசூல் பண்ணினாரா...

    அவரு நம்ம கலைஞர விட வசூல் வீராசாமியா இருப்பார் போல இருக்கே...

    ReplyDelete
  4. சகோதரர் கோபி அவர்களுக்கு,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. மக்க்ளிடம் கேட்டால் துபை அரசிடம் பணம் இல்லை, ஆதலால் தான் இதைப் போல் வசூலிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள், துபை அரசாங்கமோ நாங்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம் ஆதலால் தான் இப்படி அபராதம் விதித்து விபத்துகளை த்டுக்கிறோம் என்று கூறுகிறார்கள், எது எப்படியோ வசூல் செய்கிறவருக்கு கமிஷன் மட்டும் நிச்சயம். ஆதலால் தான் அவர்கள் இரவு பகல் பார்க்காமல் தொழில் பக்தியை காட்டுகிறார்கள்

    ReplyDelete
  5. சகோ பதிவு அருமை....நல்லாவே சொல்லி இருக்கீங்க..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...