அப்பாவி அப்பாசாமி: அதென்ன ஜெட்டாபைட், ஏதாவது கராத்தே, கும்ஃபு மாதிரி சண்டையா?
5 வருடங்களுக்கு முன்னர் யாரிடமாவது (கனிப்பொறி அடிப்படை தெளிவு இல்லாதவர்களிடம்) கிலோபைட் என்றால் “ஏதோ படித்தவுங்க சொல்றிங்க, நமக்கு இந்த பைட் எல்லாம் தெரியாதுப்பா” என்று சொல்லிவிடுவர். ஆனால் இப்போது மொபைல் உபயோகிக்கும் அனைவரிடமும் புதிய மொபைல் வாங்கி இருக்கிறேன் என்று சொன்னால், எத்தனை GB கார்டு போடலாம்னு சொல்லு, wifi இருக்குதா, எத்தனை Mega Pixel கேமரா என்று விலாவாரியாக நம்மிடம் கேட்கின்றனர்.
அப்போது இந்த KB, MB, GB, TB (Tuberclosis இல்லை, இது வேற TB) அலகுகள் எதற்கு பயன்படுகின்றன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது.
கனிப்பொறியில் நீங்கள் எதை டைப் செய்தாலும் (Alphabets, Numeric, Special Characters) அது உள்ளே போய் பதிவாகும் போது 0,1 ஆகத்தான் பதிவாகும். அது எப்படி A, B என்று டைப் செய்தால் 0,1 என்ற ரேன்ஜில் பதிவாகும் என்று கேட்கிறார்களா? அதாவது கனிப்பொறிக்கு தெரிந்த மொழி 0,1 மட்டுமே. அதனால் நீங்கள் input கொடுக்கும் அனைத்திற்கும் கோடு, முட்டை, முட்டை, கோடு,முட்டை,கொடு, கோடு (1001011) என்பது போன்று பதிவாகும். இந்த 0 அல்லது 1ஐத்தான் Bit என்று சொல்கின்றனர். இந்த பிட் (Bit) கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது
1 Bit = 0 அல்லது1
1Byte (Octet) = 8 Bits1024 Bytes = 1KB
1024 KB = 1 MB
1024 MB = 1GB
.
.
Name (Symbol) | Standard SI | Ratio SI/Binary | Name (Symbol) | Value | |
103 | 210 | 0.9766 | 210 | ||
106 | 220 | 0.9537 | 220 | ||
109 | 230 | 0.9313 | 230 | ||
1012 | 240 | 0.9095 | 240 | ||
1015 | 250 | 0.8882 | 250 | ||
1018 | 260 | 0.8674 | 260 | ||
zettabyte (ZB) | 1021 | 270 | 0.8470 | 270 | |
1024 | 280 | 0.8272 | 280 |
Source : Wikipedia
SI - International System of Units
IEC - International Electrotechnical Commission (IEC 60027)
இப்போதைக்கு ஜெட்டா பைட் வரைக்கும் தான் நம்ம ஆளுக வந்திருக்காங்கலாம். அதுக்கே எத்தனை சைபர் போடுறதுன்னு தெரியல. (படிக்கும் போது நிறைய சைபர் வாங்கன நமக்கே(?) எத்தனை சைபர் போடுறத்ன்னு தெரியல)
1 ஜெட்டா பைட் (Zetta Byte) = 1,000,000,000,000,000,000,000 பைட்கள் (தலை சுத்துதா, அப்ப இப்படி போட்டுக்கலாம், அதாவது 1ZB = 1021 Bytes.
இதுவரை மனித இனத்தின் மொத்த டிஜிடல் வெளியீடு சுமார் எண்பது லட்சம் பெட்டா பைட்டுகளாக உள்ளது. (ஒரு பெட்டா பைட் என்பது ஒரு மில்லியன் கிகா பைட்டுகள்) ஆனால் இது இந்த வருடம் 1.2 ஜெட்டா பைட்களைக் கடந்துவிடும் என்று கருதப்படுகிறது.
டிஜிட்டல் தகவல் உலகின் இந்த அதிவேகப் பெருக்கத்திற்கு சமூக வெப் சைட்டுகள், ஆன்லைன் வீடியோ, டிஜிட்டல் போட்டோக்ராபி மற்றும் மொபைல் போன்கள் ஆகியவையே காரணம் என்று உலகின் டிஜிடல் வெளியீட்டினை கவனிக்கும் IDC சொல்கிறது. உலகின் எழுபது சதவிகித தகவல்கள் தனி நபர்களால் உருவாக்கப்படுபவையே என்றும் யூ டியூப், பிளிக்கர் போன்ற நிறுவனங்கள் அவற்றை சேமிக்கின்றன என்றும் இந்த IDC தொழிநுட்ப நிறுவனம் தெரிவிக்கிறது
சில சுவாரஸ்ய செய்திகள்: § மென்பொருள்: டெராடேட்டா டேட்டாபேஸ் (Teradata Database) 12 குறுக்கப்பட்ட 50 பெட்டாபைட் அளவு தரவுகளை சேமிக்கவல்லது. § இணையம்: ஒவ்வொரு நாளும் கூகுள், 24 பெட்டாபைட் (Peta Byte) தரவுகளை கையாளுகிறது. isohunt என்ற டொரண்ட் தளம் (Torrent Website) ஜூன் 2010-ல் 10.8 பெட்டாபைட் (அளவுள்ள?) கோப்புகளை வரிசைப்படுத்தியுள்ளது. § தொலைதொடர்பு: 19 பெட்டாபைட் (Peta Byte) தரவுகளை ஒவ்வொரு நாளும் AT&T கையாளுகிறது. § திரைப்படம்: 'அவதார்' திரைப்படத்தின் முப்பரிமாண காட்சி உருவாக்கத்திற்கு Weta Digital-ல் 1 பெட்டாபைட் (Peta Byte) சேமிப்பகம் தேவைப்பட்டது. Source : Wikipedia |
நன்றி : இந்நேரம்.காம், Wikipedia (ஆக்கம் இடம்பெற உதவியமைக்காக)
தோழமையுடன்
அபு நிஹான்
No comments:
Post a Comment
உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்