Thursday, 23 December 2010

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? - பாகம் - 2

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால்.....

கடந்த பகுதியில் அதிகமாக மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் நன்மைகளையும், தேர்வில் சாதிக்க நமக்கு தேவையான பண்புகளையும் பார்த்தோம். இந்த வாரம் அதிக மதிப்பெண் எடுக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை பார்ப்போம்

தேர்வு எழுதும் முன்
தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்

Monday, 20 December 2010

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? - பாகம் - 1

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

Monday, 8 November 2010

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 மத்திய அரசு உதவி தொகை

scholarship
2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்குமாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

Sunday, 7 November 2010

மருந்து கொண்டு வந்தா மாட்டுவீங்க

தடை செய்ய்ப்பட்ட மருந்துகள்

அமீரகத்தின் ஷார்ஜாவில் சமீபத்தில்  நமது தாயகத்தை சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார். அவர் சில மருந்துகளை தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரி பயணியை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் விபரீதமாகிப் போனது. அவர் கொண்ட வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டார். 

Monday, 1 November 2010

விளம்பரங்கள்

sample advertisment

வியாபரத்திற்கு முக்கியமான மூலதனம் விளம்பரம். அந்த விளம்பரங்கள் மக்களிடம் எப்படி பிரபலமாகிரது என்று கணித்தாலே வியாபாரத்தின் வெற்றியை நாம் கணிக்கலாம். அந்த அளவிற்கு இன்று விளம்பரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விளம்பரங்கள் மக்களிடம் எப்படி சென்றடையும் என்று எல்லா வியாபாரிகளுக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்த சமயத்தில் தான் விளம்பர கன்சல்டண்ட்ன்னு சொல்லி ஒரு amount ஐ ஆட்டைய போட்டுருவாங்க. அப்புறம் அத விளம்பர பட எடுக்குற கம்பெணிட்ட சொல்லி விளம்பரத்த படம் புடிச்சு டிவியில ஒளிபரப்புவாங்க/வானொலியில் ஒலிபரப்புவாங்க. 

Thursday, 28 October 2010

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை - மைல்கல் - 3- கல்வியும் பெற்றோரும்

பெற்றோரும் கல்வியும்
என் மகன்/மகள் 10 ஆவது படிக்கிறான்(ள்), 12 ஆவது படிக்கிறான்(ள்). அவன்(ள்) இஷ்டத்திற்கு விட்டுட்டேன், அவன்(ள்) என்ன படிக்குனும்னு ஆசைப்படுறானோ(ளோ) அதையே படிக்கட்டும்னு நம்ம பெற்றோர்கள் பலர் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் என்ன படிக்க வேண்டும் அல்லது அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற ஞானம் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இது அவர்கள் கல்வி கற்காததால் வந்த பிரச்சனை. கல்வி கற்காமல் போனதற்கு நாம் அவர்களை குறை கூற முடியாது. ஆனால் இது பற்றி கல்வி கற்றவர்களிடம் ஆலோசனைக் கேட்கலாம். இது கேட்காமல் போனால் பிள்ளைகளை சரியான பாதைக்கு வழிகாட்டாமைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் ஆகிவிடுவர். 

சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்ற நபிமொழியில் உலகக் கல்வியின் அவசியத்தை நாம் அறியலாம். 

Sunday, 17 October 2010

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை - மைல்கல் - 2


GATE Exam

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை என்ற பதிவை முதலில் படிக்க வேண்டுகிறேன்.

பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு மேற்படிப்பு ப்அடிக்க இருக்கும் மாணவர்கள் பயப்படுவது, படிப்புக்கு அதிகம் சிலவாகுமே, ஆதலால் நாம் படிப்பை இதோடு நிறுத்துக் கொள்வோம் என்று முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எண்ணம் தவிடுபொடியாகும்படி அரசாங்கமே இலவசமாக படிப்புதவித் தொகை அளித்து உலக தரத்தில் ஒரு உயர்வான கல்வியையும் வழங்குகிறது. ஆனால் இது பெருமாலான மக்களுக்கும், கிராம வாழ் மாணாக்கர்களுக்கும் தெரியவில்லை என்பதே வருத்தமான விஷயமாகும். 

Saturday, 16 October 2010

தாய் என்பவள் …

தாய்
நம் வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம் குழந்தை பருவம். அந்த குழந்தைப் பருவத்தில் மிக முக்கிய பங்காற்றக் கூடியவர்கள் பெற்றோர்கள். தாயிடத்தில் அன்பையும் தந்தையிடத்தில் அறிவையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் சிலருக்கு தந்தையிடமே இரண்டும் கிடைக்கும். சிலருக்கு எதிர்மறையாக கிடைக்கும். ஆனால் எங்கள் வீட்டை பொருத்தவரை என்னுடைய தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் தந்தையிடமிருந்து பெற வேண்டிய அறிவும் தாயிடமிருந்தே கிடைத்தது. தந்தை வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தாலும் அவரிடம் பேசுவதற்கே எங்களுக்கு பயமாக இருக்கும். ஆனால் எங்களுடன் இருக்கும் போது பல விஷயங்கள் மலேசியாவை பற்றி சொல்லுவார்கள், மலாய் மக்களின் பாரம்பரியம், உணவு முறைகள், அவர்களின் கலாச்சாரம் என்று எங்களுடைய அறிவுத் தேவையை பூர்த்தி செய்வார்கள். இப்படி அவ்வப்போது எங்களுடைய அறிவுக்கு தீணியாக தந்தை இருந்த போதிலும், தாய் தான் எங்களை கூர்மையாக கவனித்து சிறு வயதில் தேவையானதை எங்களுக்கு சொல்லிக் கொடுத்து, பிறந்தது முதல் இப்போது வரை எங்களை சரியான முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. 

Wednesday, 13 October 2010

பெரியவர்கள்

old couple - sample
“இந்த பெரிசுக்கு வேலையே இல்லை, சும்மா கட பெரிசு, எப்ப பார்த்தாலும் எம்.ஜி.ஆர் பாட்டை போடுன்னு டி.வி. போட்டாலே சொல்லும், இதுல தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி நாங்கள்ளாம் அந்த காலத்துலனு ஆரம்பிச்சுருவ” அப்படின்னு நாம் பெரியவர்களை பார்த்து சலிப்ப டைவோம், ஆனால் அவர்களுக்கு இருக்கும் அனுபவத்தால் பெரிய பிரச்சனை எல்லாம் மிக இலகுவாக (லோக்கல் பாஷைல சொன்னால் பெரிய பிரச்சனைலாம் சப்பையா) முடியும் போது பல நேரங்களில் பெரிசுகளின் உதவி நமக்கு தேவை தான் என்று உணர முடிகிறது. 

ஏன் இப்ப திடீரென்று பெரிசுகள பத்தி பேச்சு, வயசாயிருச்சான்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்கிறது எனக்கு காதுல விழுது. 

Monday, 4 October 2010

பாய்ந்த ஈரான் பயந்த அமெரிக்கா

Mahmoud Ahmadinejad
நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று பட்டவர்த்தனமாக கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத். ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.

Wednesday, 29 September 2010

இணையதளத்தில் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

internet call - sample photo

சகோதர சகோதரிகளே 

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக 

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். 

Wednesday, 22 September 2010

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் - பகுதி 3

குருதி கொடை கொடுக்க நினைப்பவர்கள் அமீரகத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 

துபை:

குருதி கொடை மையம் – அல் வாசல் மருத்துவமனை – துபை –யு.எ.இ – 

(Blood Donation Center – BDC, Al Wasel Hospital, Dubai) 

தொலைபேசி எண்கள்: 04 – 2192331 

நேரம் : காலை 7:30 முதல் மாலை 6 மணி வரை (ஞாயிறு முதல் வியாழன் வரை) 

அல் பரஹா மருத்துவமனை – 04- 271 0000

குழுவாக இரத்த தானம் செய்ய அல்லது இரத்த தான முகாம்கள் அமைக்க அனுக வேண்டிய தொலைபேசி எண்: 04 2193338 

 அபுதாபி:

அபுதாபி இரத்த வங்கி (Abu Dhabi Blood Bank) 

தொலைபேசி எண்: 02 6656508 

நேரம் : காலை 7:00 மணி முதல் மாலை 8:30 மணி வரை (ஞாயிறு முதல் வியாழன் வரை) 

சனிக்கிழமை : காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை 

ஷார்ஜா:

ஷார்ஜா இரத்தம் மாற்றுதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (Sharjah Blood Transfusion and Research Center ) 

தொலைபேசி எண் : 06 5582111 

நேரம் : காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை (ஞாயிறு முதல் வியாழன் வரை) 

சனிக்கிழமை : காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை 

இரத்த தானம் குழுக்கள் அனுக வேண்டிய தொலைபேசி எண் - 06 – 5582111 

அல் அய்ன் 

இரத்த வங்கி, அல் தவாம் மருத்துவமனை, அல் அய்ன் – 03 – 7075212 

உங்களுக்கு அமீரகத்தில் இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் தன்னார்வத்துடன் இரத்தம் கொடையளிக்க விருப்பட்டாலோ www.UAEDonars.com என்ற இணையதளத்தில் உங்களுடைய விவரங்களை பதிய வைத்து பயனடையலாம்.

நன்றி : கல்ஃப் நியூஸ் இணையதளம் 

தோழமையுடன்

அபு நிஹான்

Monday, 20 September 2010

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் - பகுதி 2

இரத்தம் கொடுப்பவர்களை இரத்த கொடையாளர்கள் அல்லது குருதி கொடையாளர்கள் (Blood Donars) அன்று அழைப்பர். இரத்தம் கொடுக்க நினைப்பவர்கள் எல்லாம் கொடுக்க இயலாது. அதற்கு பல்வேறு விதமான சோதனைகள் செய்ய வேண்டும். இரத்தக் கொடையாளருக்கு முதற்கட்ட சோதனையாக இரத்த வகை கண்டறியப்பட்டு பின்னர் இரத்த அழுத்தம் சோதனை செய்யப்படும். இரத்த அழுத்த சோதனையிலோ அல்லது இரத்த அனுக்களின் சோதனையிலோ குறைந்த அல்லது அதிகமான அளவில் இருந்தால் இரத்தம் கொடுக்க முடியாது. உதாரணத்திற்கு ஹிமோக்ளோபின் (Hemoglobin) குறைவாக இருந்தாலோ அல்லது இரத்த அழுத்தம் குறைவாக (அ) அதிகமாக இருந்தாலோ தொற்று வியாதிகள், குணமளிக்காத வியாதிகள் இருந்தாலோ குருதி கொடையளிக்க முடியாது. 

Wednesday, 15 September 2010

விமானத்தில் ஸ்கை ரைடர் (Sky Rider in the Flight)

மாப்ள, ஃபிளைட்ல எடமே இல்லை, சரின்னு தொங்கிக்கிட்டே வந்துட்டேன்ன்னு பீலா உட்றவங்கள பார்த்திருப்பீங்க, சில பேர் அட போப்பா, வரும் போது ஃபிளைட்ல ஃபுட்போர்டு அடிச்சேன்னு சொல்வாங்க, இன்னும் அதிகமாக என்னுடைய நண்பர் ஒருவர் ஈராக்கிற்க்கு பிராஜக்ட் விஷயமாக சில மாதங்கள் சென்றிருந்தார். அது அமெரிக்க மிலிட்டரி பிராஜக்ட், ஒரு வழியா, பிராஜக்ட்ட முடித்துவிட்டு, துபாயிக்கு திரும்பி வந்துடலாம்னு பார்த்தா, டிக்கட் இல்லை, கம்பெனி டிக்கட் இப்ப தராது அப்படின்னு காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதற்குள் செய்தி துபாயில் உள்ள அவரது உறவினருக்கு தெரியவர, அவரும் இங்கிருந்தே அவருக்கு பக்தாத்-துபை டிக்கெட் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பிறகு மிலிட்டரி ஃபிளைட்டில் பக்தாதில் இருந்து துபைக்கு 5 பேர் அமரக்கூடிய ஃபிளைட்டில் ஆறாவது ஆளாக (ஆம்னி பஸ்ஸில் டிரைவருக்கு பின்னால் கேபினில் அமர்ந்து வருவது போல்) வந்து சேர்ந்தார்.

Wednesday, 8 September 2010

வீணடிக்கப்படும் பெருநாள் இரவு

அஸ்ஸலாமு அலைக்கும். 

புனித ரமலான் மாதத்தில் நோண்புகள் நோற்று இரவுத் தொழுகையை சிறப்புடன் நிறைவேற்றி பெருநாளுக்காக காத்து இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் மற்ற அனைத்து முஸ்லீம்களுக்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்கள். இந்த பெருநாள் கொண்டாட்டத்தின் ஆரம்பமாக பெருநாள் இரவில் இருந்தே சகோதர சகோதரிகள் தங்களின் கொண்டாட்டங்களை திட்டமிட்டு செய்கின்றனர். ஆனால் கொண்டாட்டமானாலும் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுவது என்பது அனைவருக்கும் தடுக்கப்பட்டுள்ளது. 

Monday, 6 September 2010

பெருநாள் – உணர்வது எப்போது?

Eid in Dubai
கடிதத்திலும் கார்டிலும் பெருநாள் வாழ்த்து - 1980
டெலிபோனில் பெருநாள் வாழ்த்து - 1990
செல்போனில் பெருநாள் வாழ்த்து - 1999
ஆன்லைனில் பெருநாள் வாழ்த்து - 2007
நேரில் வாழ்த்துவது எப்போது?
இதை நீ உணர்வது எப்போது?


சொந்தங்கள் இருந்தாலும் நீ அனாதை தான்
ஒவ்வொரு பெருநாளின் போதும்
இதை நீ உணர்வது எப்போது?

பெருநாள் தொழுகை முடிந்தவுடன்
துக்கம் நெஞ்சை அடைக்க
மனதில் அழுகையையும், முகத்தில் சிரிப்பையும் காட்டுகிறாய்
இதை நீ உணர்வது எப்போது?

Wednesday, 25 August 2010

அரசியல் வா(வியா)திகளின் 2010 தேர்தல் களத்தில் நகைச்சுவை:

கருணாநிதி : ஊழலைப்பற்றி விஜயகாந்த் பேசுவது வாய்விட்டுச் சிரிக்கும் கேலியாக இருக்கிறது. 

பி.கு: ஊழல் செய்தவர்கள் தான் ஊழலை பற்றி சொல்ல வேண்டும் என்று கூறுகிறாரோ என்னவவோ?

நகைச்சுவை


இரான் பாக்ஸ்
துபையில் என் நண்பருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஆஃபிஸ் பாயுடன் என் நண்பர் ஒர் ஷாப்பிங் மால் சென்றிருக்கிறார், அங்கு பொருட்கள் வாங்கினால் கூப்பன் கொடுத்து குலுக்கல் முறையில் பரிசுகள் உண்டு என்று அறிவிப்பு பலகையில் அறிவித்ததோடு என்னென்ன பரிசுகள் என்பதையும் அறிவித்திருந்தனர். அதில் ஒரு பரிசாக இரான் பாக்ஸ் அன்று ஆங்கிலத்தில் எழுதிருப்பதை கண்ட அந்த ஆஃபிஸ் பாய் என் நண்பரிடம் இரான் பாக்ஸ் என்றால் என்ன என்று கேட்க இவரும் குழம்பியவாறு அந்த அறிவிப்பு பலகையை பார்த்து அது இரான் பாக்ஸ் இல்லை, ஐயன் (Iron Box) பாக்ஸ் என்று விளக்கிவிட்டு அலுவலகத்தில் வந்து எல்லோரிடமும் சொல்லிவிட்டார். அதில் ஒருவர் விளையாட்டாக இரான் பாக்ஸுக்கு சொன்ன விளக்கம்: ஈரமான துணிகளை தேய்ப்பதால் (ஐயன் செய்வதால்) அது ஈரான் பாக்ஸ், அப்போது குறுக்கிட்ட ஒரு நண்பர் அப்போது சூடான துணிகளை தேய்த்தால் (ஐயன் செய்தால்) அதற்கு பெயர் சூடான் (Sudan) பாக்ஸா என்று கேட்டவுடன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். 

----------------------------- 

Sunday, 22 August 2010

அபராத பயத்தில் அமீரக (துபை) மக்கள்

Burj Khalifa
துபை என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிரமாண்டம் (உலகத்திலேயே உயர்ந்த கட்டடம் - புர்ஜ் கலீஃபா, உலகத்திலேயே பெரிய ஷாப்பிங் மால் – துபை மால், துபை மெட்ரோ) . சமீப காலங்களாக துபை என்றவுடன் நினைவுக்கு வருவது பொருளாதார பின்னடைவு, வேலையிழப்பு, கடுமையான கடனில் தவிக்கும் நிறுவணங்கள் & மக்கள் மற்றும் எங்கும் சோகத்துடன் கானும் வெளிநாடு வாழ் அமீரக மக்கள். 

இதையெல்லாம் தாண்டி ஒரு புதிய பீதியால் துபை மக்கள் பெரிதும் பயந்து போய் இருக்கின்றனர். ஆம் அது தான் அபராத பீதி. முன்னெல்லாம் வாகனங்கள் வைத்திருக்கக் கூடியவர்கள் மட்டுமே பயப்படும் ஒரு விஷயமாக இருந்த அபராதம் இப்போது அமீரகத்தில் குறிப்பாக துபையில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் பயப்படும் ஒரு விஷயமாக சமீப காலமாக மாறியிருக்கிறது. 

Wednesday, 18 August 2010

பார்வை ஒன்றே போதும்






ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ''இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்'' என்று கூறினேன்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், ''முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்'' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி),  நூல் : புகாரி 58

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக கொள்கைவாதிக்கு நன்மையைக் கருத வேண்டும்.  அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.  இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

Sunday, 15 August 2010

சாலையில் அதிவேக பயணம் – ஒரு சமூக பார்வை

model accident
சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. 

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 50 கிலோ மீட்டர் வேகத்திற்குமேல் செல்வது சட்டப்படி குற்றம். அவ்வாறு சட்டத்தைமீறி அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டினால் வழக்கு தொடரப்படும். இரண்டு முறைக்கு மேல் வழக்கில் சிக்கினால் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். 

ஆர்டிஓ அலுவலகம் மூலம் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தாமதம் ஏற்படுவதால் போலீசாரே அதனை ரத்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசை கோரியிருக்கிறோம். அரசு அது பற்றி பரிசீலித்து வருகிறது. அனுமதி கிடைத்ததும் அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.

Wednesday, 11 August 2010

90,000 ஆப்கனிஸ்தான் போர் ஆவணங்கள்

ஆப்கனிஸ்தான் போர் குறித்து கிட்டத்தட்ட 90,000 ரகசிய ஆவணங்களை இணையத்தில் மொத்தமாக வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ் என்னும் அமைப்பு. அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் குறித்த பல உண்மைகள் இதிலிருந்து கசிய ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா குறித்து இதுவரை வெளிவந்துள்ள ரகசியங்களில் இதுவே ஆகப் பெரியது என்கிறது விக்கிலீக்ஸ். அனைவருக்கும் விஷயம் போய் சேரவேண்டும் என்பதற்காக இந்த 90,000 ஆவணங்களையும் துறை வாரியாகப் பிரித்து, வகுத்து, சீர்படுத்தி அளித்திருக்கிறார்கள். எதையும் எடிட் செய்யவில்லை. அமெரிக்காவின் போர் தந்திரம், கொல்லப்பட்ட ஆப்கனிஸ்தான் மக்களின் சரியான எண்ணிக்கை, பாகிஸ்தானுடன் அமெரிக்கா செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தங்கள், சிஐஏவின் திரை மறைவு நடவடிக்கைகள், அரசியல் பேரங்கள், அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் என்று பலவற்றை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இணையத்தில் வெளியிடுவதற்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ், தி கார்டியன், டெர் ஸ்பீகல் (ஜெர்மன் பத்திரிகை) ஆகிய இதழ்களுக்கு இந்த ஆவணங்களைச் சில வாரங்களுக்கு முன்பே அனுப்பிவிட்டது விக்கிலீக்ஸ். ஒரு ரகசிய வெப்சைட்டில் ஆவணங்களை ஏற்றிவிட்டு, அவற்றை இறக்கிக்கொள்வதற்கான கடவுச்சொல்லை இந்தப் பத்திரிகைகளுக்குத் தனித்தனியே அளித்துவிட்டார்கள். 

Tuesday, 10 August 2010

கிலோபைட், மெகாபைட், ஜிகாபைட்……… ஜெட்டாபைட்

அப்பாவி அப்பாசாமி: அதென்ன ஜெட்டாபைட், ஏதாவது கராத்தே, கும்ஃபு மாதிரி சண்டையா?

5 வருடங்களுக்கு முன்னர் யாரிடமாவது (கனிப்பொறி அடிப்படை தெளிவு இல்லாதவர்களிடம்) கிலோபைட் என்றால் “ஏதோ படித்தவுங்க சொல்றிங்க, நமக்கு இந்த பைட் எல்லாம் தெரியாதுப்பா” என்று சொல்லிவிடுவர். ஆனால் இப்போது மொபைல் உபயோகிக்கும் அனைவரிடமும் புதிய மொபைல் வாங்கி இருக்கிறேன் என்று சொன்னால், எத்தனை GB கார்டு போடலாம்னு சொல்லு, wifi இருக்குதா, எத்தனை Mega Pixel கேமரா என்று விலாவாரியாக நம்மிடம் கேட்கின்றனர். 



அப்போது இந்த KB, MB, GB, TB (Tuberclosis இல்லை, இது வேற TB) அலகுகள் எதற்கு பயன்படுகின்றன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. 

பொறியியல் கல்லூரி கலந்துரையாடல் (கவுன்சிலிங்)

நம் சமுதாய மக்கள் சிலருக்கு இன்னும் பொறியியல் / மருத்துவக் கல்லூரிகளில் சேருவது என்பது பெரும் மலைப்பாக இருக்கும். கிராமத்தில் படிக்கும் மாணவமணிகளுக்கு எந்த கல்லூரியில் சேர வேண்டும், எந்த பாடத்தில் சேர வேண்டும் என்பதில் பெரும் சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். பொறியியல் கல்லூரி கலந்துரையாடல் என்றால் என்ன? அதற்கு எப்படி நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழே காண்போம்.

கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவ-மாணவிகளில் (அவர்களின் பெற்றோரும் கூட) நிறைய பேர் பெரும்பாலும் முதன்முறையாக சென்னையைப் பார்க்கிறார்கள். கிராமப்புற வெள்ளந்தித்தனம் அசலாக வெளிப்படுகிறது. 'அக்கம் பக்கத்துலே கடை கண்ணியே இல்லியே? பட்டணத்துலே இருக்கறவங்க ஆத்திர அவசரத்துக்கு ஒரு சோடா குடிக்கக்கூட பஸ் ஏறி ரொம்ப தூரம் போவணுமோ?’ என்று பட்டணக்காரர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். கிண்டி காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அருகில் குடியிருக்கும் ஒரே நபர் மாட்சிமை தாங்கிய கவர்னர் பெருமகனார் மட்டும்தான். எனவேதான் இங்கே கடை, கண்ணிக்கு வாய்ப்பேயில்லை.

இன்றைய சூழலில் முஸ்லீம் பெண்கள்

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் மனதிற்கு கவலை அளிக்கின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் நடந்து வரும் முஸ்லீம்களே முஸ்லீம்களை அழிக்க நினைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. தென் மாவட்டங்களில் (தூத்துக்குடியில் சிறுவன் கழுத்தறுத்துக் கொலை, நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பாலியல் சம்பவங்கள்) சமீப காலத்தில் கடன் சம்பந்தமாக இருவேறு சகோதரிகள் சீரழிக்கப்பட்டு, வீடியோ படம் எடுத்து மிரட்டக்கூடிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. அரசியல் பலம், அதிகார பலம், அடியாள் பலம், காவல்துறை பலம் என்று பலவிதமான பலங்களைக் கொண்டும் இந்த வேலையை செய்யும் அக்கிரமக்காரர்கள் எந்த செயலை செய்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கூச்சப்படும் சந்தர்ப்பத்தை பயண்படுத்தி தப்பித்துக் கொள்கின்றனர். 

Monday, 9 August 2010

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க


உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:


முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும். 

உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும். 

பின்குறிப்பு: 

நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும். 



நன்றி : இந்நேரம். காம்


Sunday, 8 August 2010

ஹஜ் பயணிகளுக்கு - விஷேஷ பாஸ்போர்ட்

காவல் துறை நிரூபண - சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு 8 மாத பாஸ்போர்ட்

முதல் பாஸ்போர்ட் சென்னையில் 15 நாளில் வழங்கப்பட்டது

காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது. 

வழக்கமாக பாஸ் போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து ஒரு நிரூபண சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப் படையிலேயே பாஸ் போர்ட் வழங்கும் அலுவ லகம் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும். இந்த முறையில் கால தாமதம் ஏற்படுகிறது. 

சமீபத்தில் சவுதி அரேபியா சர்வதேச பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள்தான் தங்கள் நாட்டிற்கு ஹஜ்பயணம் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்தது 

இந்த நிலையில், ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்க மத்திய அரசு காவல் துறையின் நிரூ பண சான்றிதழ் இல்லாமலேயே 8 மாதம் செல்லத் தக்க தற்காலிக பாஸ் போர்ட்டுகளை வழங்கும்படி அனைத்து பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wednesday, 4 August 2010

யெஸ் மெண் குழுவினர்

நம்பியவர்கள் ஏமாற்றப்படுவார்கள்! 


Yes Men? அப்படியென்றால் என்ன? திரைப்படம் போலல்லவா இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். திரைப்படங்களில் செய்யும் அனைத்து ஹீரோயிஸத்தையும் இரு நண்பர்கள் இணைந்து செயல்படுத்தி காட்டி கொண்டிருக்கிறார்கள். 

Andy Bichlbaum, Mike Bonanno இருவரும் The Yes Men குழுவைச் சேர்ந்தவர்கள். உலகின் பணக்கார நிறுவனங்களுக்கு இவர்கள் எதிரிகள். பிபிசி தொடங்கி நியூ யார்க் டைம்ஸ் வரை பல செய்தி நிறுவனங்கள் இவர்களைக் கண்டு அலறியிருக்கிறது. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய அசாதாரணமான விஷயங்களை இந்த இருவரும் நிஜ வாழ்வில் நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.

எது பிடிக்கவில்லையோ அதுவாக மாறிவிடு என்பதுதான் இவர்களது சித்தாந்தம். புஷ்ஷின் அராஜக ஆட்சி பிடிக்கவில்லை என்பதால் அவர் பெயரில் கிண்டலாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தார்கள். (www.gwbush.com என்னும் முகவரியில் தொடங்கப்பட்ட அந்தத் தளம் தற்போது உபயோகத்தில் இல்லை.) என்னை அபாண்டமாகவும் அநியாயமாகவும் விமரிசனம் செய்கிறார்கள் என்று புஷ்கூட வருத்தப்பட்டுக்கொண்டார்.

Tuesday, 3 August 2010

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

அமெரிக்க அதிபர் "பராக் ஹுசைன் ஒபாமாவுடன்" விவாதம் செய்ய நான் ஆவலாக உள்ளேன் என ஈரான் அதிபர் "அஹ்மத் நிஜாத்" கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்: "நான் ஒபாமாவை சந்திக்க விரும்புகிறேன். நான் வரும் செப்டெம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்க்காக அமெரிக்கா வருகிறேன்.

அந்நேரம் நான் அங்கு பராக் ஒபாமாவை சந்தித்து அவருடன் உலக பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்: உலகளாவிய ஊடகங்களுக்கு மத்தியில் இவ்விவாதம் நடைபெறவேண்டும் எனவும், யாருடைய கருத்தை மக்கள் அதிகம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்". இவ்வாறு அஹ்மத் நிஜாத் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

ஈரான் மீது பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஒபாமாவிற்க்கு அஹ்மத் நிஜாத் விவாதத்திற்க்கு அழைப்பு கொடுத்திருப்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : இந்நேரம்.காம்

Monday, 2 August 2010

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் - பகுதி 1

ஏக இறைவனின் திருப்பெயரால் 

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, 'எனது தாயார் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்' என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், 'உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?' என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் போது, 'எனது இரத்தப் பிரிவும் அது தான். எனினும் நான் இதுவரை இரத்தம் கொடுத்ததில்லை. பயமாக இருக்கின்றது' என்று மகன் கூறுகின்றார். 

இது போல், மனைவிக்குப் பிரவச வேதனை, அறுவை சிகிச்சை என்று ஓடோடி வரும் கணவனிடம், நீங்கள் உங்கள் இரத்தத்தைக் கொடுத்து விட்டு, நீங்கள் கேட்கும் இரத்தப் பிரிவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அந்தக் கணவனின் முகத்தில் இறுக்கம் ஏற்பட்டு விடுகின்றது. அம்முகத்தில் பேயறைந்தாற்போல் ஒரு தோற்றம்! 

பிளாக் பெர்ரி போன்களுக்கு சவுதி, அமீரகத்திலும் தடை ?

துபாய் : பாதுகாப்பு காரணங்கள் கருதி ஏற்கனவே இந்தியாவில் பிளாக் பெர்ரி போன்களை தடை செய்ய இந்தியா பரீசிலித்து வருவதை இந்நேரத்தில் பிரசுரித்திருந்தோம். தற்போது அதே காரணங்களை கூறி வரும் அக்டோபரில் இருந்து பிளாக்பெர்ரி போன்களை தடை செய்ய போவதாக ஐக்கிய அரபு அமீரகமும் அதனை தொடர்ந்து சவூதி அரேபியாவும் கூறியுள்ளது.
இது பற்றி கருத்து கூறிய ஐக்கிய அரபு அமீரக தொலை தொடர்பு அதிகாரி பிளாக்பெர்ரியின் மின்னஞ்சல், அவுட்லுக் மற்றும் பிற வசதிகள் அரசின் கண்காணிப்பில் கொண்டு வர முடியாத படி கனடாவில் உள்ள சர்வரோடு இணைக்கப்பட்டிருப்பதால் நாட்டின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாய் உள்ளது என்று கூறினார்.
இது இறுதி முடிவு என்று கூறிய அவ்வதிகாரி பிளாக்பெர்ரி தங்கள் நிபந்தனைகளுக்கு கட்டுபட்டால் அவை அனுமதிக்கப்படும் என்றும் அதன் போட்டியாளர்களான் நோக்கியா, ஸாம்ஸங் போன்களில் எப்பிரச்னையும் இல்லை என்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் எடிஸலாட், தூ இரண்டும் இம்முடிவை ஆதரிப்பதாகவும் சொன்னார்.
அமீரக முடிவு பற்றிய செய்தி வெளியான சிறிது நேரத்தில் சவூதி அரசாங்கமும் பிளாக்பெர்ரியை தடை செய்வது குறித்து பரீசிலித்து வருவதாக சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பாதையை பிற வளைகுடா அரசுகளும் பின்பற்றினால் பிளாக்பெர்ரிக்கு பெரும் பிரச்னை ஏற்படும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி: இந்நேரம்.காம்

Monday, 26 July 2010

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை

சகோதர சகோதரிகளே, இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது  உண்டாகட்டுமாக! 

தலைப்பை படித்தவுடன் முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது பற்றி இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். இதில் அரசாங்க கல்லூரிகளின் சலுகைகள் பற்றி, நம்மவர்கள் அதில் கவனம் செலுத்தாதது பற்றியும் விரிவாக காணலாம். சமீபத்தில் நான் படித்த செய்தி இந்த பதிவு எழுதுவதற்கு உந்தியது. 

Wednesday, 14 July 2010

மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்ராயம் கொள்வதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன்:33:36) 

இந்த ஒரு அத்தியாயம் மட்டுமே போதும், மார்க்கத்தின் உரிமை அல்லாஹ்விற்கே உரியது என்று சொல்வதற்கு. இறைவனுடைய சொல்லையே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்) அவர்களுக்கே மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை என்றால், இன்று மவ்லவிகள், இமாம்கள், ஷெய்குமார்கள் என்று சொல்லக் கூடியவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில்லாமல் மார்க்கத்தின் அதிகாரத்தில் கை வைக்க, மார்க்கத்தில் புதிதாக ஒரு விஷயத்தை இபாதத் என்று சொல்லவோ அல்லது மார்க்கத்தில் சொல்லப்பட்ட இபாதத்களை நீக்கவோ, திருத்தம் செய்யவோ என்ன அதிகாரம் இருக்க முடியும். 

எத்தனையோ விஷயங்களில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தாலும் இமாம்களின் பெயரால், மவ்லவிகளின் பெயரால், 7 வருடம் ஓதியவர்கள் என்ற பெயரால் எவ்வளவு அனாச்சாரங்களை நாம் நித்தம் நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு விஷயம் இபாதத் என்று முடிவு செய்வதற்கு அதிகம் தகுதியானவன் அல்லாஹ். அவன் அல்லாது அவனுடைய திருத்தூதருக்கே தனிப்பட்ட முறையில் அல்லாஹ்விடமிருந்து வஹி வராமல் எதையும் இபாதத் என்றோ அல்லது மார்க்கம் என்றோ முடிவு செய்ய அனுமதி இல்லை. 

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படாத அதிகாரம் 

“லவ்லாக லமா கலக்துல் அஃப்லாக்” – உம்மைப் படைக்கும் நோக்கமில்லாது இருந்தால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்”. (ஹதீஸ் குத்ஸி) என இறைவனே நபி பெருமானாரை சிறப்பித்துக் கூறியுள்ளான். 

அப்படி சிறப்பு வாய்ந்த நபிக்கே மார்க்கத்தில் சொந்த கருத்தைக் கூற அனுமதி இல்லை என்னும் பட்சத்தில் நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு / ஷெய்குமார்களுக்கு எப்படி அனுமதி/அதிகாரம் இருக்க முடியும். நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு/ ஷெகுமார்களுக்கு அனுமதி / அதிகாரம் இல்லை என்று சொன்னால் இமாம்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று சிலர் கூறுகின்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மார்க்கத்தில் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கப்படவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று யாராலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வே நபி(ஸல்) அவர்களை தனிப்பட்ட முறையில் தன்னிடம் இருந்து வஹி வராமல் மார்க்க அதிகாரத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறான். 

இதற்கு சான்றாக நிறைய சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் உள்ளது. 

Tuesday, 13 July 2010

திட்டச்சேரியிலிருந்து ஒரு சர்வதேச சாதனைச் செல்வி


உலகம் முழுவதிலும் கேம்ப்ரிட்ஜ் IGCSE தேர்வு முறையைப் பின்பற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெற்ற ஏறத்தாழ 2000 பள்ளிகளின் மாணவ-மாணவியர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மருள் ஒருவராகக் கல்வியில் வாகை சூடுவது என்பது - அதிலும் "அ" தாரகை(A Star) ஆக ஜொலிப்பதென்பது - சாதாரணச் செயலன்று.

இந்த அசாதாரண சாதனையை, நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த செல்வி சல்மா புரிந்திருக்கிறார்.

ஆண்டுதோறும் கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழக உலகளாவியத் தேர்வுகள்(University of Cambridge International Exams - CIE)' மையம் நடத்தும் 'உலகளாவிய உயர்நிலைப் பள்ளிக் கல்வி(International General Certificate of Secondary Education)'யின் 2009ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் கடந்த அக்டோபர் 2009இல் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் கடந்த பிப்ரவரி 2010இல் வெளியாகின. உலகளாவிய ஒப்பீட்டு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகியுள்ளன.

மேற்காணும் உலகளாவிய தேர்வுக்கு, மூலாதாரப் பாடத்திட்ட (The core syllabus) முறையில் 5 கட்டாயப் பாடங்களைத் தேர்வு செய்து "இ" படிநிலை விருதை வெல்லும் எளிய வழியையே பெரும்பாலான மாணவ-மாணவியர் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், "அ-தாரகைப் படிநிலை விருதை வென்றெடுப்பதற்காக ஆழமான படிப்புத் தேவைப்படும் பத்துப் பாடங்கள் அடங்கிய மீநிலைத் (Advanced syllabus) திட்டத்தை எனது தேர்வாகக் கொண்டேன்" என்கிறார் சல்மா.

Sunday, 20 June 2010

தான்ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

ராஜகிரி தான் ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,​ பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளிச் செயலாளர் ஏ.​ சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.​ ஆர்.டி.பி.​ கல்விக் குழுமத் தலைவர் எம்.ஏ.​ தாவுத் பாட்சா,​​ மருத்துவர் பரீதா பஷீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

​விழாவில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ,​​ மாணவிகள் பாராட்டப்பட்டனர்.​ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ள,​​ பள்ளியின் முன்னாள் மாணவிகள் எம்.​ சமீமா,​​ எம்.​ சைமா,​​ பி.​ மோசினா உள்ளிட்டோருக்கு பள்ளித் தலைவர் என்.ஏ.​ அப்துல் மஜீது நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

​முன்னதாக பள்ளி ஒருங்கிணைப்பாளர் எம்.​ முகமது உமர் வரவேற்றார்.​ நிறைவாக அரபி ஆசிரியை ஷகீலா பானு நன்றி கூறினார்.

விழாவில் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முகமது பாரூக்,​​ ஆர்.ஏ.​ நூர் முகமது,​​ நிர்வாக அதிகாரிகள் எம்.கே.​ அப்துல் ஹமீது,​​ பி.ஏ.​ முகமது பாரூக்,​​ பள்ளி முதல்வர் எஸ்.​ கஸ்தூரி,​​ துணை முதல்வர் பூங்கோதை,​​ வணிகவியல் ஆசிரியர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நன்றி : ராஜகிரி ஆன்லைன் இணையதளம்

Monday, 7 June 2010

இந்தியா ஒளிர்கிறது

இந்தியாவின் முன்னேற்றத்தை அகில உலகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்போதும் சிலர், இந்தியா ஓர் ஏழை நாடு, இங்கு எதிலும் நேர்மை இல்லை, தண்ணீர் சரியாக வரவில்லை,மின்சாரம் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை, ரேஷன் கடைகள் ஒழுங்காக இயங்குவதில்லை என்று குக்கிராமத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

பெரும்பாலும் இப்படி கூறுபவர்கள், நமது தாய்நாடான இந்தியாவில் பெரும்பாலான நகரங்களை காணாதவர்களாக இருப்பார்கள், அல்லது வெளிநாட்டிலே தங்களுடைய வாழ்க்கையை கழித்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்காகவும் தற்போது இந்தியா எந்த நிலைமையில் இருக்கிறது என்று வாசகர்களுக்கு எத்தி வைப்பதற்காகவும் இந்த பதிவை நான் இங்கு எழுதுகிறேன்.


Thursday, 3 June 2010

காலம் கடந்து

உள்ளூரில் விலைப் போவாததால் 
வெளி நாட்டில் நான்!
வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென 

முத்திரையிட்டால் 
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

Thursday, 27 May 2010

ராஜகிரி தான்ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் பள்ளி 97 சதம் தேர்ச்சி

இப் பள்ளியின் மாணவிகள் 
ஏ. ஆமீனா நஸ்ரின் 1103, 
எம். புஷ்ரா,1080, , 
கே. சலோபர் சிபாயா 1075 
மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

Wednesday, 26 May 2010

விபத்து

சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த சில நாட்களாகவே நமது தஞ்சை மாவட்டத்தில், அதிலும் நம் பாபநாசம் வட்டத்தில் அதிகம் விபத்து நடப்பது நாம் அறிந்ததே.

1.    இரண்டு மாதங்களுக்கு முன்னர் சூஃபி நகரில் ஒரு வாலிபர் விபத்துக்குள்ளாகி, 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்து பின்னர் இறந்தது நம் ஊர் மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Sunday, 23 May 2010

ஏட்டுச் சுரைக்காய்


கலாச்சாரச் சீரழிவு
அல் ஜுமுஆ எனும் ஓர் இஸ்லாமிய ஆங்கில மாத இதழ், பெருமளவிலான அமெரிக்க, ஐரோப்பிய முஸ்லிம் வாசகர் வட்டத்தைக் கொண்டது. தரமானதோர் இதழ். அண்மையில் வாசகர் மத்தியில் ஹிஜாப் பற்றியதான ஓர் ஆய்வை இது மேற்கொண்டிருந்தது. அதனையெல்லாம் தொகுத்தும், அதன் அடிப்படையிலும் கட்டுரையெல்லாம் எழுதி வெளியிட்டிருந்தார்கள். அவர்களுடைய ஆய்வுக் கேள்விகளுக்கு பதில் அனுப்பும்போது, அமெரிக்கப் பல்கலை ஒன்றில் இறுதி ஆண்டு பயிலும் சகோதரி ஒருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை), அந்த ஆய்வுக்கான தனது பதிலுடன் கடிதம் ஒன்றும் இணைத்து அனுப்பியிருந்திருக்கிறார். அதனைக் கட்டம் கட்டி பிப்ரவரி/மார்ச் 2010 இதழில் வெளியிட்டிருந்தது அல்-ஜுமுஆ.

Thursday, 6 May 2010

2010 ஹஜ்


ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.
                                                -அல்குர்ஆன் 2:196 

ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா

இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.

Wednesday, 28 April 2010

முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !



முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !


குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்' என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...