Sunday, 7 November 2010

மருந்து கொண்டு வந்தா மாட்டுவீங்க

தடை செய்ய்ப்பட்ட மருந்துகள்

அமீரகத்தின் ஷார்ஜாவில் சமீபத்தில்  நமது தாயகத்தை சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார். அவர் சில மருந்துகளை தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரி பயணியை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் விபரீதமாகிப் போனது. அவர் கொண்ட வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டார். 
தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வந்தவருடைய தகவல் தெரியாமல் அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரின் குடும்பத்தினரும் குழப்பத்திலிருக்க, பிறகு விசாரனைக்காக அழைத்து செல்லப்படிருக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன், அதிர்ச்சியடைந்தனர். 

அதன் பிறகு பலகட்ட விசாரனைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இருந்தபோதிலும் பயணியின் கடவுச்சீட்டை (Passport) காவல்துறையினர் தரவில்லை. மருந்துச்சீட்டை இந்தியன் கவுன்சலேட் அட்டெஸ்ட் செய்தவுடன் தான் தர முடியும் என்று சொல்லிவிட, கவுன்சலேட் அதிகாரிகள் அந்த மருந்து சீட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் கொடுக்கப்ட்ட பின்னரே அட்டெஸ்ட் செய்து தர முடியும் என்று தெரிவித்தனர். இதனால் பலவாறு அலைகழிக்கப்பட்டு பிறகு ஒருவழியாக விடுவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மருந்து சீட்டை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் வாங்கின பிறகு வெளிநாட்டிற்கு மருந்து கொண்டு வந்தால் பிரச்சனை இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இது மாநகரத்தில் (சென்னையில்) இருப்ப்வருக்கே பெரிய வேலையாக இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் இருந்து வெளிநாட்டிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு வரும் அன்பர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு மருந்துகளை எடுத்து வாருங்கள். 

அபராதம், சிறை தண்டனை போன்ற பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் அமீரகத்தில் தடை செய்ய்ப்பட்ட மருந்துகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத மருந்துகள் (காய்ச்சல், வயிற்று போக்கு மருந்துகள், குறிப்பாக இருமல்-ஜலதோஷம் தொடர்பான மருந்துகள், pain killer மருந்துகள் வாங்கி வருவதை தவிர்த்திடுங்கள்) ACTIFED compound linctus, ACTIFED DM, ADOL cold, ADOL COLD HOT THERAPY போன்ற மருந்துகள் அமீரகத்தில் தடை செயப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது. 

இந்தியாவில் அதிக மருந்துகள் அரசாங்கத்தால் தடை செய்ய்ப்பட்ட போதிலும் சரியாக கவனிக்காததால் அந்த மருந்துக்கள் இன்றும் விற்பனையில் உள்ளன. என்னென்னெ மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அமீரகத்தின் அமெரிக்கா எம்பஸி (American embassy of UAE) வெளியிட்டுள்ளது. 

இத்தகவலை உங்கள் தெரிந்த நபர்களுக்கும், நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்து உதவி புரியுங்கள். 


இதைப் பற்றி 20 ஜூலை 2009 அன்று வெளிவந்த கல்ஃப் நியூஸ் நாளிதழில் வந்ததை படிக்க 

தோழமையுடன் 
அபு நிஹான் 



2 comments:

ஹுஸைனம்மா said...

நானும் அந்தக் கடிதத்தைப் படிச்சு, நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன். பயனுள்ள பதிவுங்க.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

நன்றி ஹுஸைனம்மா.

இந்த செய்தியை கலீஜ் டைம்ஸ் நாளிதழில் எழுதியது எங்கள் நிறுவணக் குழுமத்தின் முக்கிய பொறுப்பிலிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template