Sunday 24 January 2010

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009

கட்டாய திருமண பதிவுச் சட்டம் தமிழக அரசால் 24.11.2009 அன்று இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருவதை அனைவரும் அறிவீர்கள். 

அதைப் பற்றி சில மேலதிக விவரங்கள்:

“தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009” 24.11.2009 முதல் அமலுக்கு வருகிறது.
                                                                                                                                     
திருமணம் ஆன 90 நாளைக்குள் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச்சட்டம் 1872, சிறப்புத் திருமணச்சட்டம் 1954, முஹம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்து இருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன்  கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.     

இத்திருமணங்கள், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள், திருமணம் நடைபெற்ற எல்லைக்குட்பட்ட சார்பதிவாளரிடம் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும் என வரையறுக்கப்படுள்ளது. இத்தகு திருமணப்பதிவிற்க்கான குறிப்பானை மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்படிவம் இலவசமாக அனைத்து பதிவு அலுவகங்களிலும் வழங்கப்படும்.

எங்கு எப்படி வின்னப்பிக்கலாம்?

திருமணப்பதிவிற்க்கான குறிப்பானை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை இரட்டையில் எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து

1.    திருமணம் நடைபெற்றதற்க்கான ஆதாரம்,
2.    இருப்பிட மற்றும்
3.    வயது தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆதார ஆவணங்களுடன்,
4.    ரூ 100 கட்டணத்துடன்
திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் அளிக்கவோ அல்லது அனுப்பவோ வேண்டும். இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் இல்லாத/ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத/கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள் திருமணப்பதிவாளரால் குறை சரிசெய்ய மனுதாரருக்கு திருப்பப்படும். தமிழ்நாடு திருமணப்பதிவு விதிகளின்படி திருமணம் நடைபெறவில்லை என திருமணப்பதிவாளரால் உணரப்படின், அத்தகைய திருமணப்பதிவுகள் மறுக்கப்படும்.

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் அனைத்து திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ள அல்லது விதி மீறல் இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், தண்டனை விதிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு


தொலைபேசி தொடர்பு : பதிவுத்துறைத்தலைவர் அலுவலகம்  - 044-24640150 Ext.: 220

அன்புடன்  
அபு நிஹான்

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...