Wednesday, 15 September 2010

விமானத்தில் ஸ்கை ரைடர் (Sky Rider in the Flight)

மாப்ள, ஃபிளைட்ல எடமே இல்லை, சரின்னு தொங்கிக்கிட்டே வந்துட்டேன்ன்னு பீலா உட்றவங்கள பார்த்திருப்பீங்க, சில பேர் அட போப்பா, வரும் போது ஃபிளைட்ல ஃபுட்போர்டு அடிச்சேன்னு சொல்வாங்க, இன்னும் அதிகமாக என்னுடைய நண்பர் ஒருவர் ஈராக்கிற்க்கு பிராஜக்ட் விஷயமாக சில மாதங்கள் சென்றிருந்தார். அது அமெரிக்க மிலிட்டரி பிராஜக்ட், ஒரு வழியா, பிராஜக்ட்ட முடித்துவிட்டு, துபாயிக்கு திரும்பி வந்துடலாம்னு பார்த்தா, டிக்கட் இல்லை, கம்பெனி டிக்கட் இப்ப தராது அப்படின்னு காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதற்குள் செய்தி துபாயில் உள்ள அவரது உறவினருக்கு தெரியவர, அவரும் இங்கிருந்தே அவருக்கு பக்தாத்-துபை டிக்கெட் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பிறகு மிலிட்டரி ஃபிளைட்டில் பக்தாதில் இருந்து துபைக்கு 5 பேர் அமரக்கூடிய ஃபிளைட்டில் ஆறாவது ஆளாக (ஆம்னி பஸ்ஸில் டிரைவருக்கு பின்னால் கேபினில் அமர்ந்து வருவது போல்) வந்து சேர்ந்தார்.

Sky Rider
சரி விஷயத்திற்கு வருவோம், அதாவது இத்தாலி நாட்டை சேர்ந்த ஏவியன் இண்டீரியர்ஸ் என்ற கம்பெணி விமானங்களுக்கு இருக்கை வடிவமைப்பதில் வல்லவர்கள். அவர்களின் புதிய இருக்கை வடிவமைப்பு விமான இருக்கை அமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விமானத்தில் அதிக இருக்கை, மற்றும் குறைந்த சிலவில் விமான பயணச்சீட்டு ஆகிய இரண்டு அம்சங்களை முன்வைத்து புதிய விமான இருக்கை வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். சமிபத்தில் ரையான் ஏர் என்ற விமான நிறுவணத்தின் உரிமையாளர் திரு மைக்கேல் ஒலியரி (Michael O'Leary - படிக்க கஷ்டமாயிருக்கா) ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டிக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் ஏவியன் இண்டீரியர்ஸ் நிறுவனத்தார். 

“Sky rider” - இது தான் அந்த இருக்கைகளுக்கு பெயர். அதாவது குதிரையில் அமர்வது போன்ற இருக்கையை உருவாக்கி அதில் பாதி உட்கார்ந்து நின்று கொண்டே செல்வது போல் அதாவது கவ் பாய் (Cow Boy) பயணம் செய்வது போல் இருக்கை அமைந்துள்ளார்கள். சாதரணமாக பட்ஜெட் விமானங்களில் 30 இன்ச் கால் வைக்ககூடிய இடம் (legroom) இருக்கும். அது போல் இந்த sky rider இருக்கைகளில் 23 இன்ச்கள் கொண்ட கால் வைக்ககூடிய இடம் (legroom) அமைத்து விமான இருக்கை வசதிகளிலும் எந்த குறையும் வந்திடாதவாறு வடிவமைத்துள்ளனர். இந்த இருக்கை வசதிகள் பட்ஜெட் விமானங்கள் என்று சொல்லக்கூடிய சிக்கன விமானங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றும் இது அதிகம் லாபம் தரக்கூடியதாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஏவியன் இண்டீரியர்ஸ் நிறுவணத்தார். 

எது எப்படியோ இது அதிகபட்சம் 3 மணி நேரம் பயணம் செல்லக்கூடிய தூரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழமையுடன்

அபு நிஹான்


1 comment:

Anonymous said...

அறிய தகவல்கள் கொண்ட தங்கள் பதிவுகளை(?) படித்தேன், பயன்பெற்றேன்.சில பதிவுகள் (courtesy) நன்றி இல்லாமல் இருப்பது குறையே!

பதிவு செய்தவர் - பஞ்சாயித்துடையார்(பால்டாயில்)

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template