Monday 8 November 2010

+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 மத்திய அரசு உதவி தொகை

scholarship
2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்குமாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.




மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும் . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்

பூர்த்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம், கல்லூரி சாலை
சென்னை - 600006

மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.

தகவல் 

S.சித்தீக்.M.Tech


தோழமையுடன்
அபு நிஹான்

5 comments:

  1. இணையத்தில் இடம்பெறும் தகவல்களை உடனுக்குடன் copy & paste செய்யும் தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!

    இந்த வருகையாளரின் சிந்தனை (உண்மை) இடம்பெறுமா ?

    - பஞ்சாயித்துடையார்

    ReplyDelete
  2. பஞ்சாயத்துடையாரே, ஏன் உண்மையான பெயரில் வர மறுக்கிறீர்.

    //இணையத்தில் இடம்பெறும் தகவல்களை உடனுக்குடன் copy & paste செய்யும் தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!! //

    உங்களுக்கு நான் copy & paste பண்ணிய பதிவுகள் மட்டும் தான் கண்ணில் படுமா? அல்லது நான் எப்போது copy & paste பண்ணுகிறேன் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டு கமெண்டுகளை அள்ளி வீசுகிறீறா?

    copy & paste செய்கிறோமோ அல்லது சொந்தமாக எழுதுகிறோமோ முக்கியமில்லை, அது எத்துனை பேருக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதே முக்கியம்.

    //இந்த வருகையாளரின் சிந்தனை (உண்மை) இடம்பெறுமா ?//

    தவறான தகவல்கள் தருகிறோமோ என்று நினைப்பவர்களுக்குத் தான் இந்த பயம் இருக்கும். உண்மையை (வருகையாளரின் சிந்தனையை) உறக்க சொல்லி விட்டீர்கள் பஞ்சாயத்துடையாரே, உங்களுக்கு இந்த பெயர் நன்றாக பொருந்துகிறது.

    தொடர்ந்து வாருங்கள். எழுதிய எல்லா தலைப்பிற்கும் கமெண்ட் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. //பஞ்சாயத்துடையாரே, ஏன் உண்மையான பெயரில் வர மறுக்கிறீர்//

    அபுநிஹான் என்பது உங்கள் நிஜப்பெயரா?

    //copy & paste செய்சிறோமோ அல்லது சொந்தமாக எழுதுகிறோமா
    முக்கியமில்லை,//

    பதிவு ஆக்கங்களுக்காக அல்லும் பகலும் உழைத்தவனுக்குச் சொல்லும் பதிலா இது(?)

    எத்தனை பதிவுகள் தாங்கள் சொந்தமாக பதிவு செய்தது(?) - பட்டியலிடுங்கள்,

    //அது எத்துனை பேருக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதே முக்கியம்//

    தாங்கள் copy & paste செய்த எத்தனை பதிவுகள் பிறருக்கு உதவியாக இருந்தது(?)

    //தொடாடந்து வாருங்கள், எழுதிய எல்லா தலைப்பிற்கும் கமெண்ட் எழுதுங்கள்//

    கண்டிப்பாக, தாங்கள் சொந்தமாக எழுதும் எல்லா தலைப்பிற்கும் உண்மையான கமெண்ட் எழுதுவேன், ஏற்கனவே தாங்கள் எழுதிய விளம்பரங்கள்(தாங்கள் தேடிக்கொள்வதைப் போல) பதிவு, வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டிருந்தாள் நன்றாக இருக்கும்,

    தோழமையுடன்

    -பஞ்சாயித்துடையார்

    ReplyDelete
  4. அபு நிஹான் என்பது உங்கள் நிஜப்பெயரா?//

    அபுநிஹான் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. உங்களைப் போல் யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்திற்காக தான் இராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) என்று என்னுடைய பிளாக்கிற்கு பெயர் வைத்திருக்கிறேன். நிஹானின் தந்தை என்பதே அபு நிஹானின் விளக்கமாகும். பஞ்சாயித்துடையார் - இதற்கு என்ன விளக்கம்? கேள்விக்கு கேள்வியே பதிலாக அமையாது.

    உணமையான பெயரில் வர பயமா? இல்லை சொல்வது உணமையான கருத்தாக இல்லை என்ற சந்தேகத்திலா?

    //பதிவு ஆக்கங்களுக்காக அல்லும் பகலும் உழைத்தவனுக்குச் சொல்லும் பதிலா இது(?) //

    பதிவு ஆக்கங்களுக்காக அல்லும் பகலும் உழைத்தவனுக்காகத் தான் அவர்களுடைய பெயரையோ அல்லது அவர்களின் இணையதள முகவரியையோ நான் போட்டு விடுவேன். பதிவு ஆக்கங்களுக்காக அல்லும் பகலும் உழைத்தவர்களுக்காக பெயர் சொல்ல தைரியம் இல்லாத பஞ்சாயித்துடையாருக்கு என்ன கவலை.

    //எத்தனை பதிவுகள் தாங்கள் சொந்தமாக பதிவு செய்தது(?) - பட்டியலிடுங்கள்,//

    நீங்களே பட்டியலிட்டு கொள்ளுங்கள்.

    //தாங்கள் copy & paste செய்த எத்தனை பதிவுகள் பிறருக்கு உதவியாக இருந்தது(?)//

    இது நீங்கள் படித்தவர்களிடம் கேட்க வேண்டியது. எனக்கு தெரிந்து இணையதளத்தில் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட், முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !, தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009, அதிகமான மக்களை சென்றடைந்தது.

    //கண்டிப்பாக, தாங்கள் சொந்தமாக எழுதும் எல்லா தலைப்பிற்கும் உண்மையான கமெண்ட் எழுதுவேன், ஏற்கனவே தாங்கள் எழுதிய விளம்பரங்கள்(தாங்கள் தேடிக்கொள்வதைப் போல) பதிவு, வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டிருந்தாள் நன்றாக இருக்கும்,//

    விளம்பரங்கள் பதிவில் நீங்கள் கூறியது போல் ஆபாசமாக ஏதும் எழுதவில்லை. அதைப் போல் ஆபாசமாக எழுதக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். குறை சொல்லும் நோக்கோடு எதையும் பார்க்காதீர்கள்.

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...