Thursday 7 April 2011

பிள்ளைகளுக்கு விடுமுறை – என்ன செய்ய போகிறீர்கள் பெற்றோர்களே?




summer coaching classes (பெரிது படுத்தி பார்க்க படத்தை கிளிக்குங்கள்)
 மாணவ மணிகளுக்கு வரும் தேர்தலுக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு முடிவெடுத்து ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி தேர்வுகளும் முடுவுக்கு வந்து விடும். வழக்கம் போல் பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன்(?) கருதி அவர்களை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்க ஏதாவது கம்ப்யூட்டர் வகுப்பு/ ஸ்விம்மிங் வகுப்பு / கராத்தே பயிற்சி / aptitude class / abacus class / painting class/ music class / dance class பயிற்சி என்று சேர்த்துவிட எண்ணும் பெற்றோர்கள் அதிகம் என்பேன். மணிதன் சுதந்திரமாக / சந்தோஷமாக எந்தவித கவலையுமின்றி இருக்கும் காலங்கள் மாணவப்பருவம் தான், அதிலும் காத்துக் கிடந்து பெற்ற வரம் போல் கிடைக்கும் விடுமுறைக் காலங்கள் தான் அவர்களுக்கு சுதந்திரத்தையும், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் தரும் காலங்கள். அப்போது அவர்கள் எந்தவித கவலையுமின்றி ஆசிரியரின் தொல்லையின்றி / வீட்டுப்பாடங்களின் தொல்லையின்றி / ரெக்கார்ட் தொல்லையின்றி / அசைன்மெண்ட் (assignment) தொல்லையின்றி பவனி வரும் நாட்கள்.

அப்படிப்பட்ட சந்தோஷ காலத்தையும் பல விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் பிள்ளைகளை பல வகுப்புகளில் சேர சொல்லி கட்டாயப்படுத்தும் போது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மீதே வெறுப்பு வர வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நகரத்திலோ அல்லது மாநகரத்திலோ இருக்கிறார்களா? உங்கள் உறவினர்கள் வீடு கிராமத்தில் இருந்தால் உங்கள் பிள்ளைகளோடு விடுமுறையில் ஒரு பகுதியை அங்கு கழியுங்கள். இயந்திர வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் அது மிக பெரிய மாற்றமாக இருக்கும். பெற்றோர்கள் இருவரும் பெரும்பாலும் மாநகரத்தில் வேலை செய்வபவர்களாக இருந்தால் பிள்ளைகள் விடுமுறை காலங்களில் வெளியில் சுற்றினால் கெட்டு போய்விடும் என்று பயந்தே பிள்ளைகளை ஏதாவது சம்மர் கோச்சிங் கிளாஸில் சேர்த்து விடுகிறார்கள், இப்படி யோசிக்கும் பெற்றோர் தங்களுடைய வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலும் பெற்றோர்கள் இருவரும் அலுவலகத்திற்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்து அந்த பொன்னான நேரத்தை உங்கள் பிள்ளைகளுடன் கழியுங்கள். டூர், உறவினர்கள் வீட்டிற்கு செல்லுதல் என்று உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இரண்டு பேரும் ஒரு சேர காலம் விடுப்பு எடுத்து கொள்ள முடியவில்லை என்றால் முதல் 15 நாள் ஒருவரும், அடுத்த 15 நாள் மற்றவரும் விடுப்பு எடுத்து உங்கள் குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடுங்கள். 
6 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி

கிராமத்து குழந்தைகள்
பிள்ளைகளுக்கு வீடியோ கேம்ஸ் வாங்கி கொடுப்பதாலோ அல்லது அவர்கள் விரும்பும் இன்ன பிற பொருட்கள் வாங்கி கொடுப்பதாலோ நல்ல பெற்றோர்களாக ஆகிவிட முடியாது. அவர்களோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை பொருத்தே உங்களை அவர்கள் நேசிப்பார்கள். விடியோ கேம்ஸ், லேப்டாப் என்று எலக்ட்ரானிக் பொருட்களையே நண்பர்களாக இந்த காலத்து பிள்ளைகள் ஆக்கிக் கொண்டிருக்க விடுமுறை நாட்களையாவது இந்த எலக்ட்ரானிக் பொருட்கள் இல்லாத உலகத்திற்கு உங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று அவர்களை இயற்கையோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் நகரத்திலோ / மாநகரத்திலோ இருக்கும் பெற்றோர்கள் விடுமுறை நாட்களில் தங்களின் கிராம வீட்டிற்கு சென்று விடுமுறையை கழிக்க திட்டமிடுவர். ஆனால் சில பெற்றோர்கள் அப்ரைஸல் இருக்கு/ ப்ரொமோஷன் டிலே ஆகும் / ஆடிட்டிங் இருக்கு என்று காரணம் சொல்லி அலுவலகத்தில் விடுப்பு எடுக்காமல் தங்களின் பிள்ளைகளையும் அந்த சந்தோஷத்தை அடைய விடாமல் கோச்சிங் கிளாஸ், (பெரும்பாலும் கம்ப்யூட்டர் கோச்சிங் கிளாஸ்) / கராத்தே கிளாஸ் / மியூஸிக் கிளாஸ் என்று படுத்தும் பெற்றோர்களுக்காக இந்த பதிவு.

இதே போல் கிராமத்திலேயும் கோச்சிங் கிளாஸுக்கு போக சொல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்றாலும் கிராமங்களில் வெறும் கம்ப்யூட்டர் கிளாஸோடு முடிந்துவிடுகிறது என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. அவர்களும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தோழமையுடன்
அபு நிஹான்

4 comments:

  1. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அபுநிஹான்,
    எந்த ஒரு நேரத்தையும் எப்படி பணமாக மாற்றலாம் என்று உலகம் சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆறுதலாய்... முற்றிலும் வித்தியாசமான சிந்தனை கொண்ட பதிவு..!
    மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.

    ReplyDelete
  2. இப்ப நிறைய பெற்றோர்கள், பிள்ளைகளின் பள்ளி விடுமுறையை விணாக்காமல் குடும்பத்தோடு டூர் செல்வதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். இருந்தாலும், விடுமுறைக் காலமான இரண்டு மாதங்களும் டூர் செல்வது முடியாதது. அதில் சம்மர் கேம்ப் போன்ற பயிற்சிகளுக்கு அனுப்புவதும் நல்லதே, வீட்டில் டிவி/கம்ப்யூட்டர் முன் நேரத்தைக் கழிப்பதைவிட இது பெட்டர்.
    யோசிக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  3. அலைக்கும் சலாம் (வரஹ்) சகோ ஆஷிக்

    இதை போல் பொதுவான விஷயங்களை பற்றி எழுதவும் சிந்திக்கவும் காரணமாயிருந்த சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு என் நன்றிகள்.

    உங்களின் சீறிய சிந்தனைமிக்க கருத்துக்கள் தான் என்னை இது போல் எழுத தூண்டுகின்றன.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

    தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள், குறைகளை சுட்டிக் காண்பியுங்கள்.

    ReplyDelete
  4. நீங்கள் கூறுவது உண்மை தான் சகோ ஹுஸைனம்மா,

    ஆனால் கிராமத்தில் பிள்ளைகள் பொழுது போக்க நிறைய விஷயங்கள் இருந்தும் அவர்களையும் கோச்சிங் கிளாஸ் என்று அனுப்புவதும், பிள்ளைகளை அந்த ஒரு மாதமும் விடாமல் அழுத்தம் கொடுப்பதையும் குறைத்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

    //அதில் சம்மர் கேம்ப் போன்ற பயிற்சிகளுக்கு அனுப்புவதும் நல்லதே, வீட்டில் டிவி/கம்ப்யூட்டர் முன் நேரத்தைக் கழிப்பதைவிட இது பெட்டர். //
    ஆமோதிக்கிறேன்.

    தங்களின் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி சகோதரி

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...