Monday, 7 June 2010

இந்தியா ஒளிர்கிறது

இந்தியாவின் முன்னேற்றத்தை அகில உலகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்போதும் சிலர், இந்தியா ஓர் ஏழை நாடு, இங்கு எதிலும் நேர்மை இல்லை, தண்ணீர் சரியாக வரவில்லை,மின்சாரம் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை, ரேஷன் கடைகள் ஒழுங்காக இயங்குவதில்லை என்று குக்கிராமத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

பெரும்பாலும் இப்படி கூறுபவர்கள், நமது தாய்நாடான இந்தியாவில் பெரும்பாலான நகரங்களை காணாதவர்களாக இருப்பார்கள், அல்லது வெளிநாட்டிலே தங்களுடைய வாழ்க்கையை கழித்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்காகவும் தற்போது இந்தியா எந்த நிலைமையில் இருக்கிறது என்று வாசகர்களுக்கு எத்தி வைப்பதற்காகவும் இந்த பதிவை நான் இங்கு எழுதுகிறேன்.


இந்தியா முன்பு எப்போதையும் விட பண்மடங்கு உயர்ந்து நல்ல நிலைமையை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கின்றதுதற்போது வளைகுடா நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பொருளாதார கடும் வீழ்ச்சியின் காரணமாக பல பன்னாட்டு நிறுவணங்களுக்கு மூடுவிழா நடந்தவுடன் அந்த முதலாளிகளின் அடுத்த இழக்கு இந்தியாவாகத்தான் இருந்தது. தங்களுடைய நிறுவணத்தை தொடர்ந்து நடத்துவதற்க்கு ஒரு சிறந்த இடமாக உலக வர்த்தகத்திற்க்கு ஒரு மையமாக (World Business Centre) அவர்கள் இந்தியாவைத் தான் முதலில் பார்க்கின்றனர்.

1970 களில் சிங்கப்பூரை அனைவரும் தொழில் மாநகரமாக (Business City) நினைத்து அவர்களுடைய தொழிலை அங்கு ஆரம்பித்து, அவர்களின் முதலீடுகளை அங்கு அதிகமாக்கி பணம் பார்க்க நினைத்தனர். அதன் பிறகு U.A.E. என்று சொல்லப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (U.A.E.), துபை: தொழில் மாநகரமாக(Business City) மாறியது.   பின்னர் 2008 இறுதியில் அமெரிக்காவில் பெரும் பொருளாதார வீழ்க்சி ஏற்பட்டதன் காரணமாக அதனுடைய முதலீடுகளை மையமாகவும், தங்களுடைய முதலீடுகளை அதிகம் அமெரிக்காவில் செய்த வியாபார முதலாளிகள் இந்த திடீர் கடும் வீழ்ச்சிகண்டு செய்வதறியாது நின்றனர். அதோடு முடியாமல், பொருளாதார வீழ்ச்சி வரும் ஆண்டுகளில் தொடரவே தங்களுடைய வியாபாரத்தை வேறு நாடுகளில் ஆரம்பிக்க முடிவு செய்தனர். அப்போது அவர்களுடைய ஒரே தேர்வு இந்தியா மட்டுமே.


இன்னும் சொல்லப்போனால்  மற்ற நாடுகளை விட இந்தியாவில் தொழில் நுட்பம் நிறைந்த தொழிலாளர்கள் மிகக் குறைந்த சம்பளத்திற்கு கிடைக்கிறார்கள், மின் கட்டணம், கட்டிட வாடகை அல்லது சொந்தக் கட்டிடம் வாங்க, என நிறுவணத்திற்கு ஆகும் செலவுகள் மிகக் குறைவாக இருக்கின்றது. தேவையில்லாத செலவுகளாக கருதப்படும் விசா செலவுகள், வருடம் ஒரு தடவை விடுப்பில் செல்ல விமான  பயணச்சீட்டு மற்றும் ஒரு மாத சம்பளம், தொழிலாளிகளுக்கு தங்கும் இடம் என அனைத்தும் இந்தியாவில் நிறுவணம் ஆரம்பித்தால் நிச்சயம் மிச்சம் என்று அறிந்த பன்னாட்டு நிறுவணங்கள் தங்களுடைய அலுவலகங்களை இந்தியாவில் நிறுவி வருகின்றனர் இவர்களின் வருகையால் மாநகராட்சிகள் தங்களை இன்னும் சிறந்த முறையில் தயார் செய்து கொண்டிருக்கின்றனர்போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை மேம்பாலங்கள், கூடுதல் ரயிலகள், கூடுதல் புறநகர் ரயில் நிலையங்கள், மெட்ரோ போன்ற திட்டங்கள் என்று அதிரடியாக பல திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லா மாநில அரசுகளும் எல்லா துறைககளுக்கும் இணயதள சேவைகளை ஆரம்பித்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். உதாரணத்திற்க்கு முன்பெல்லாம் ரயில் முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் தான் நிற்க வேண்டும். இப்போது இணயதள வசதி கொண்டு உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் ரயில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து முன்பதிவு, மாநகராட்சி  நிர்வாகம், மின்சார வாரியம், தொலைத்தொடர்பு துறை, குடிநீர் வாரியம் ஆகியவை இணையதள சேவையை நமக்கு அளிக்கிறது. இதனால் நம் வேளைகளை விட்டு விட்டு நேரம் ஒதுக்கி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் சென்றால் நமது கடன் அட்டை (CreditCredit CardCard) மூலம் நம்முடைய கட்டணங்களை (மின், குடிநீர், தொலைத்தொடர்பு கட்டணம்) செலுத்தி கொள்ளலாம். புறநகர பேருந்து களிலேயே குளிர்ட்டப்பட்ட வசதி செய்யப்பட்டிருப்பது மாநகராட்சியின் முன்னேற்றமே. தொடர்ந்து ஐ.டி. துறையில் இந்தியா பெரும்பான்மை வகிப்பது, வெளிநாட்டு நிறுவணங்களின் நேரடி கொள்முதல் மற்றும், ஏற்றுமதி, இறக்குமதி, பன்னாட்டு நேரடி முதலீடு ஆகியவை நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இந்த மாதிரி முன்னேற்றங்கள் மாநகராட்சியில் தானே என்று நீங்கள் நினைத்தால், கிராமப்புறங்களிலும் இது போன்ற முன்னேற்றங்களை கண்டிருக்கிறது என்பதை யவராலும் மறக்க முடியாது. அதிகபட்சம் எல்லா கிராமங்களிலும் ஏதாவது ஒரு செல்போன் டவர் எடுக்கிறது. இது இந்தியாவின் தொலைத்தொடர்பு முன்னேற்றத்தை நமக்கு உணர்த்துகிறது. இரண்டு சக்கர வாகனம் முன்னெப்போதையும் விட இப்போது அனைத்து ஊர்களிலும் அதிகமாக காணப்படுகின்றது. இது தனி நபர் வளர்ச்சியை காட்டுகிறது. பல இடங்களில் நான்கு சக்கர வாகனம் அதிகம் காணப்படுகின்றது. முன்பெல்லாம் Tata Sumo  போன்ற கார்களை கிராமப்புறங்களில் பார்ப்பது அரிதாக இருக்கும், ஆனால் இப்போது நமது பாரம்பரிய காரான அம்பாஸிடரை கிராமப்புறங்களில் கூட பார்ப்பது  அரிதாகி விட்டது. ரயில் போக்குவரத்து அகல ரயில் பாதையின் துணையால் சுலபமாகிவிட்டதுபேருந்தும் அதிகமான இடங்களில் நல்ல முறையில் இயக்கப்படுகின்றது. விமான போக்குவரத்து அதிகமான நடுத்தர வர்க்கத்தினர்களால் (Domestic-உள்நாட்டு) சேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.  இதற்கு முன்னுள்ள காலத்தில், அரசு அலுவலகங்களில்  புகார் கொடுக்க புகார் அலுவலக விலாசம் மட்டுமே எழுதி இருக்கும். ஆனால் இப்போது அந்த அலுவலருடைய கைபேசி எண்ணும் கொடுக்கப்படிருக்கிறதுஇதனால் புகார் கொடுப்பது கூட மிகவும் சுலபமாகிவிட்டது. இதனால் எல்லா அரசு இயந்திரங்களும் சரியான முறையில் இயங்குகிறது என்று நான் கூறவில்லை. மாறாக முன்னர் இருந்ததை விட இப்போது பரவாயில்லை என்று கூறுகிறேன். SHG (Self Help Groups) என்று சொல்லக்கூடிய சுய உதவி குழுக்களின் உதவியால் இன்று அதிகமான கிராமங்களில் சொந்த தொழில் செய்யக்கூடிய பெண்கள் அதிகமாகி விட்டனர். சுய-உதவி குழுவில் இருக்கும் பெண்களின் அந்தஸ்து, வாழ்க்கை தரம் உயர்ந்-துள்ளது. மன் பொருள் செய்தல், கூடை பின்னுதல், மன் புளு வளர்த்தல், ஊறுகாய், பொம்மை, முறுக்கு சுடும் தொழிலை அடுத்து ஆடு, மாடு, கோழி வளர்க்கும் தொழில், பால் பண்ணை என்று பெரிய தொழிலை செய்ய முன்வாருங்கள், வங்கிகள் கடனுதவி செய்யும் என்று அரசு முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் விபரம் அறிய

முன்பைவிட இப்போது பொதுமக்கள் அதிகம் விழுப்புனர்வோடு இருக்கிறார்கள். புகார் கொடுக்க யாரும் பயப்படுவதில்லை, யோசிப்பதில்லை. இது இந்தியா வளருவதற்கு ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். இப்படி இருப்பதால் அரசு இயந்திரங்கள் ஓரளவுக்கு ஒழுங்காக இயங்குகிறது. இதுமட்டுமல்லாது இந்தியாவின் கல்வித்துறையின் முன்னேற்றத்தால் வெளிநாட்டு மாணவர்களின் வருகை கனிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் வருடங்களில் இறைவன் நாடினால் அருகில் இருக்கும் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வேலை தேடி வருவார்கள் என்பதில் ஐயமில்லை.

நம் இந்தியா திருநாட்டில் லஞ்சம் இருந்தும், சில அரசியல்வாதிகளின் சரியில்லாத தலைமை இருந்தும், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தும், மத வேறுபாடுகள் இருந்தும், இன வேறுபாடுகள் இருந்தும், மொழி வேறுபாடுகள் இருந்தும், சாதி வேறுபாடுகள், தீவிரவாதிகளின் அச்சுரத்தல்கள்,  நக்சலைட்டுகளின் ஊடுருவல் இருந்தும் இவ்வளவு சீக்கிரம் நம்மால் வளர முடிகிறது என்று சொன்னால் நம்முடைய நாடு சுத்தமாக இருந்தால் நம் நாடு என்றோ ஒரு வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

என்னதான் வியாபாரத்திலும் தொழில் நுட்பத்திலும், உயர்ந்து கொண்டே போனாலும் நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் (நலிவடைந்து வரும்) விவசாயம், பட்டு உற்பத்தி தொழில், கைத்தறி தொழில் ஆகியவைகளை அரசாங்கம் கவனிக்கத் தவறியது வருத்தத்திற்குரியது. அந்த தொழில்களிலும் அதிகம் வருமானம் வர தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் மூலம் மக்களுக்கு சொல்லி நலிவடைந்த மக்களின் துயர் தீர்க்க அரசு முயற்சி செய்யும் என்று இறைவனை பிரார்த்திப்போமாக! விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படும் அவலநிலை மாற வேண்டும். விளைநிலங்கள் வீட்டு மனைகளாக விற்கப்பட்டால் அரசு அந்த நிலங்களை கையகப்படுத்தப்படும் என்ற விதியை இந்தியாவில் இயற்ற வேண்டும். நலிவடைந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி போன்ற சலுகைகளை அரசு அளித்து வருவது நாம் அறிந்ததே. அதற்கு பதிலாக மாவட்ட வாரியாக விளையும் பயிர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆலோசனைகளையும் அதிகாரிகள் மூலமாக அளித்தால் விவசாயிகள் சந்திக்கும் தேவையில்லாத பிரசசனைகளை தடுக்க முடியும்.
வாழ்க ஜனநாயகம், வாழ்க இந்தியா

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...