Wednesday 25 August 2010

நகைச்சுவை


இரான் பாக்ஸ்
துபையில் என் நண்பருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஆஃபிஸ் பாயுடன் என் நண்பர் ஒர் ஷாப்பிங் மால் சென்றிருக்கிறார், அங்கு பொருட்கள் வாங்கினால் கூப்பன் கொடுத்து குலுக்கல் முறையில் பரிசுகள் உண்டு என்று அறிவிப்பு பலகையில் அறிவித்ததோடு என்னென்ன பரிசுகள் என்பதையும் அறிவித்திருந்தனர். அதில் ஒரு பரிசாக இரான் பாக்ஸ் அன்று ஆங்கிலத்தில் எழுதிருப்பதை கண்ட அந்த ஆஃபிஸ் பாய் என் நண்பரிடம் இரான் பாக்ஸ் என்றால் என்ன என்று கேட்க இவரும் குழம்பியவாறு அந்த அறிவிப்பு பலகையை பார்த்து அது இரான் பாக்ஸ் இல்லை, ஐயன் (Iron Box) பாக்ஸ் என்று விளக்கிவிட்டு அலுவலகத்தில் வந்து எல்லோரிடமும் சொல்லிவிட்டார். அதில் ஒருவர் விளையாட்டாக இரான் பாக்ஸுக்கு சொன்ன விளக்கம்: ஈரமான துணிகளை தேய்ப்பதால் (ஐயன் செய்வதால்) அது ஈரான் பாக்ஸ், அப்போது குறுக்கிட்ட ஒரு நண்பர் அப்போது சூடான துணிகளை தேய்த்தால் (ஐயன் செய்தால்) அதற்கு பெயர் சூடான் (Sudan) பாக்ஸா என்று கேட்டவுடன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். 

----------------------------- 


நான் எங்கள் ஊரில் தனியார் பள்ளியில் படித்து வந்தேன். என்னுடைய நண்பர்கள் அரசு பள்ளியில் படித்து வந்தார்கள். அப்போது அவர்கள் ரசித்த சுவாரஸ்யமிக்க சில செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். அதில் ஒன்று, வாத்தியார் காலையில் தாமதாமாக வரும் மாணவர்களை தண்டிக்கும் (அடிக்கும்) போது இனிமே லேட்டா வருவியா வருவியா? என்று சொல்லி அடிக்கும் போது, நம்மால் வர மாட்டேன் சார் வர மாட்டேன் சார் என்று பிரபுதேவாவிடமும், கலா மாஸ்டரிடமும் டான்ஸ் கத்துகிட்டது போல் ஆடிக்கொண்டே அவரின் அடியிலிருந்து தப்ப முயலுவான். அவரோ சரியாக அடி பிண்ணியெடுத்து விடுவார். தேர்வு முடிவுகள் வந்தது, நம் நண்பர்கள் இல்லையா, எப்போதும் போல் குறைந்த மதிப்பென்கள் எடுத்திருக்க, எப்போதும் போல் இனிமே நல்லா படிப்பியா படிப்பியா என்று ஆசிரியர் கேட்டு அடிக்க மாணவனும் எப்போதும் போல் படிக்க மாட்டேன் சார், படிக்க மாட்டேன் சார் என்று சொல்ல வாத்திக்கு கோபம் வந்து இன்னும் கம்பை விளாச, சார் படிக்கிறேன் சார் படிக்கிறேன் சார் என்று கூற வகுப்பு களை கட்டியது.

-----------------------------

ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் ஆங்கிலத்தில் இலக்கண வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். நம்ம ஆளுகளுக்கு ஆங்கிலம் என்றாலே பயம். ஆங்கிலம் என்றாலும் பயம், எஸ்ஸே (Essay)  என்றாலும் பயம், போயம் (poem) என்றாலும் பயம், இலக்கணம் என்றாலும் (Grammer) பயம், என்று தெணாலி ஸ்டைலில் புலம்புவார்கள்.

அப்படித்தான் நம்ம வாத்தி ஆங்கில இலக்கணம் எடுத்துக் கொண்டிருக்கும் போது Simple Present, Simple Past, Part Participle பற்றி நடத்திக் கொண்டிருந்தார்.

think, thought, thought என்று உதாரணங்களை கொடுத்து விட்டு, இப்போது நீ சொல்லு என்று ஒரு மாணவனை கேட்க அவனோ

தாவு, தாவுடு, தாவுடு என்று ஒரு புது உதாரணம் கொடுக்க, வகுப்பில் சிரிப்பொலி,   


----------------------------- 

படித்ததில் பிடித்தது - கலைஞரும் ஒபாமாவும்:

கலைஞரும் ஒபாமாவும்

கலைஞரும் ஒபாவும் அமெரிக்காவில் ஒபாவின் வீட்டில் சந்திக்கிறார்கள்.

கலைஞர்: உடன் பிறப்பே, உன்னுடைய வீடு நலம். நல்ல வசதியாகவும் பெரியதாகவும் இருக்கிறது எப்படி கட்டினாய்?

ஒபாமா: (உடன் பிறப்பா? விட்டா சொத்துல பங்கு கேட்பாரு போல) அதோ தெரிது பாருங்க ஒரு பாலம்

கலைஞர்: ஆமாம்

ஓபாமா: அந்த பாலம் கட்டும் போது அடிச்ச காசுல கட்டினது.

கலைஞர்: நீங்க ரொம்ப சமத்து.

கலைஞரும் ஒபாவும் இந்தியாவில் தமிழ்நாட்டில் கலைஞரின் வீட்டில் சந்திக்கிறார்கள்.

கலைஞர்: வாருங்கள் உடன் பிறப்பே, என்னுடைய சிறிய வீட்டை பாருங்கள், நாங்கள் அமெரிக்கா ஸ்டைலில் எல்லாம் கட்டவில்லை. ஏதோ தமிழ்நாட்டு ஸ்டைலில் கட்டி இருக்கிறோம்.

ஒபாமா: (இந்த உடன் பிறப்பு தொல்ல தாங்க முடியலையே) என்ன சிறிய வீடா? என்னுடைய வீட்டை விட பெரிதாக, வசதியாக இருக்கிறதே, எப்படி கட்டுனீர்கள்?

கலைஞர்: அதோ ஒரு பாலம் தெரிகிறதா?

ஒபாமா: இல்லையே

கலைஞர்: தெரியாது. அங்கு ஒரு பாலம் கட்டுவதற்காக ஒதுக்கிய பணத்தை அடித்ததில் கட்டியது தான் இந்த வீடு

ஒபாமா: ?????????
----------------------------- 

4 comments:

  1. படிக்கிறேன் சார் படிக்கிறேன்..கலக்கல்...

    ReplyDelete
  2. நல்ல நகைச்சுவை - இரான்/சூடான் பாக்ஸ் & படிக்க மாட்டேன்..

    ஒபாமா - கலைஞர் ஜோக் - மேட்டர் பழசு, இப்ப புது அவதாரம் போல!!

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரர் ரமேஷ் அவர்களே. எனக்கு அந்த பள்ளியில் படிக்கவில்லயே என்ற கவலை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரி ஹுஸைனம்மா. நீங்களும் நான் இது போன்ற பதிவுகள் எழுதுவதற்கு காரணம்.

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...