Thursday 31 March 2011

தேமுதிக தேர்தல் பிரச்சாரம் – எகிப்தில் கடாஃபிக்கு(?) எதிரான போர் பற்றி கேப்டன்




கேப்டன்
 அதாவது விஜயகாந்த் வேட்பாளர் அடித்தது பெரிய பிரச்சனையாகும் என்று அடித்த கேப்டனும் நினைத்து இருக்க மாட்டார், அடி வாங்கின பாஸ்கரனும் தான் இவ்வளவு ஃபெமிலியர் ஆவோம் என்று நினைத்திருக்க மாட்டார், அந்தளவிற்கு பிரச்சனையை மக்கள் தொலைக்காட்சி கொண்டு சென்று விட்டது.

அது ஒருபுறம் இருக்க உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமல் கேப்டன் உளறுவது கேப்டனின் புகழை மேலும் உச்சிக்கு கொடு சென்று விடும் போலிருக்கிறது. அரியலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கேப்டன் அவர்கள் எகிப்தில் தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி உருவானது போல் தமிழகத்திலும் கருணாநிதி ஆட்சிக்குஎதிராக மக்கள் புரட்சி உருவாக வேண்டும் என்று கூறியுள்ளார், அதையும் பத்திரிக்கையில் (தட்ஸ்தமிழில்) அப்படியே வெளியிட்டுள்ளனர். எகிப்தில் நடந்தது ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான புரட்சி, லிபியாவில் நடந்து கொண்டிருப்பதி கடாஃபிக்கு எதிரான புரட்சி என்று கூட கேப்டனுக்கு தெரியாமல் போனது உச்சகட்டம். 
 
வரலாறு தெரியாமல் சில தலைவர்கள் மேடையில் பேசினால் அது எல்லோராலும் தவறா அல்லது சரியா என்று ஆராய்ந்து பார்க்க தெரியாது, ஆனால் நடப்பு விஷயத்தில் இப்படி பேசினால் தேமுதிக தொண்டர்களே கேப்டனுக்கு தவறை சுட்டிக் காட்டி விடுவார்கள். பிரச்சாரத்திற்கு போகும் போது தெளிவாக (அந்த தெளிவு இல்லப்பா) உலக விஷயங்களை படித்து என்ன பேசப் போகிறோம், எந்த தொகுதியில் வாக்கு சேகரிப்ப போகிறோம், வேட்பாளர் பெயர் என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டு செல்வது கேப்டனுக்கு நல்லது.

நன்றி : http://thatstamil.oneindia.in/news/2011/03/31/vijayakanth-asks-people-voteout-dmk-aid0091.html

தோழமையுடன்
அபு நிஹான்
 

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...