Wednesday 18 May 2011

+2 முடித்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?


+2 அடுத்தது என்ன?
+2 தேர்வு முடிவுகள் வந்து விட்டன, பல மாணாக்கர்கள் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி தெளிவான சிந்தனையோடு இருந்தாலும் சிலருக்கு துறையை தேர்ந்தெடுப்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தத்திற்குரியதே. வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது என்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் விதமாக பல இயக்கங்கள், கழகங்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற ஆரோக்கியமான கருத்தரங்கங்களை நடத்தினாலும் அது எல்லா இடத்திலேயும், எல்லா மாணாக்கர்களிடேயேயும் போய் சேறுகின்றதா என்று கேட்டால், நம்மால் 100 சதிவிகிதம் பாஸிட்டிவான பதிலை சொல்ல முடியவில்லை. 
சில காலம் முன்னர் வரை என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என்ற முடிவை பெற்றோர் துணையுடன் மாணாக்கர்கள் தேர்ந்தெடுத்தனர். அதே போல் கல்லூரியை தேர்ந்தெடுப்பதிலும் பெற்றோர்களின் துணையை நாடினர். ஆனால் இப்போது நான் இந்த கல்லூரியில் இந்த பாடப்பிரிவில் தான் படிப்பேன் என்று அடம்பிடிக்கும் நிலைக்கு மாணாக்கர்கள் வந்து விட்டனர். பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது பற்றி விழிப்புணர்வு சில பெற்றோர்களுக்கு அவர்களின் கல்வியின்மை காரணமாகவும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களாலும் இல்லாமல் இருக்கலாம். அதனால் மாணாக்கர்களே சில முடிவுகளை எடுக்க நேர்ந்திடும். என்ன பாடப்பிரிவு / எந்த கல்லூரி போன்ற முடிவுகளை மாணாக்கர்கள் எடுக்கும் போது கல்லூரியின் தன்மை, அதனுடைய ஆசிரியர்களின் தன்மை, ஆய்வுக்கூட வசதி, தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவின் நண்மைகள் மற்றும் அதனால் வரும் வேலைவாய்ப்பு போன்றவைகளை சிந்தித்து, தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும். 

பல நேரங்களில் மாணாக்கர்கள் தங்களின் வசதிக்கேற்ப பாட திட்டங்களையும், கல்லூரியையும் தேர்ந்தெடுப்பது, நண்பர்களுக்காக / காதலிக்காக கல்லூரி மற்றும் பாட பிரிவை தேர்ந்தெடுப்பது, நன்றாக ஊர் சுற்றலாம் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நினைப்புடன் கல்லூரியை தேர்ந்தெடுப்பது, ஈஸியாக பாஸ் பண்ணி விடலாம் என்ற நோக்கத்துடன் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது போன்ற முட்டாள்தனமான முடிவுகளால் மாணாக்கர்கள் தங்களின் வாழ்க்கையை வீணடிப்பதை பார்க்க முடிகிறது. ஒரு முறை தேர்ந்தெடுத்து விட்டால் அடுத்து வரும் ஐந்து வருடம் / நான்கு வருடம் / மூன்று வருடம் அந்த பாடப்பிரிவை தான் படிக்க வேண்டும், இல்லையென்றால் வருடம் மற்றும் பணம் வீணாகி போய்விடும், பெற்றோரின் கணவும் வீணாகி போய்விடும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து பாட பிரிவையும், கல்லூரியையும் தேர்ந்தெடுப்பது மாணக்கர்களின் கடமை. 

மேலே கூறியதல்லாமல் சமத்தாக படிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள் என்று இந்த இடத்தில் சொல்லிக் கொள்கிறேன்.   

தோழமையுடன்
அபு நிஹான்


No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...