Monday, 23 May 2011

தலைவலியும் காய்ச்சலும் (கனிமொழியும் ஸ்பெக்ட்ரமும்)

கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பின் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட, முழுக்க முழுக்க காவல்துறையின் தலைமையில் நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பல கோடி முஸ்லீம்களின் சொத்துக்கள் நாசமாகின. ஆனால் கலவரத்தை தடுக்க வேண்டிய காவல்துறையோ கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது. சமுதாய மக்கள் கொத்து கொத்தாக மடிந்ததை பார்த்து அகமகிழ்ந்தது. 
இதற்கு அப்போது முதல்வராக இருந்த முஸ்லீம்களின் காவலன், நல்லிணக்க நாயக விருது பெற்ற அஞ்சுக செல்வன், கலைஞர் மு. கருணாநிதி எந்த விதமான முஸ்லீம்களுக்கு ஆதரவான செயல்களையும் செய்யவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ஆறுதல் சொல்லகூட அவருக்கு பாவம் நேரமில்லை. அவரை கோவை முஸ்லீம் ஜமாத்தார்கள் பார்க்க நினைத்த போதும் அதை அவர் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் தஞ்சை பெரிய கோவிலில் நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உடனே ஹெலிகாப்டரில் வந்தவர் தான் இந்த கலைஞர் மு. கருணாநிதி (ஆறுதல் தெரிவிக்க போக கூடாது என்று நான் கூறவில்லை). இப்போது ஏன் இந்த பிரச்சனையை பற்றி பேசுகிறேன் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தன்னுடைய மகள் கனிமொழி கைதானதை தொடர்ந்து இன்று கருணாநிதி டெல்லி சொல்கிறார். கணிமொழி குற்றமற்றவர் என்று நிரூபிப்பேன் என்று சூளுரைத்திருக்கிறார். ஏன் இந்த கரிசனம் கோவையில் பாதிக்கப்பட்ட மக்கள் விஷயத்தில் இல்லை. 

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்களே, அது இது தானா?? 

கோவை கலவரத்துக்கு பிறகு விசாரனை கைதிகளாகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் எம் சமுதாய மக்களை அண்ணா நூற்றாண்டு
கைதிகள் விடுதலையில் விடுதலை செய்யாமல் காலம் கடத்திய கருணாநிதிக்கு இது ஆரம்பமே, இன்னும் போக போக தெரியும், பூகம்பத்தை தாங்க சக்தி இருக்கிறதா என்று. பொருத்திருந்து பார்ப்போம்.

கொசுரு செய்தி:

தன்னுடைய மகள் கனிமொழியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிரபல வழக்குரைஞர் ராம் ஜெத்மலாணி அவர்கள் ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை தொடர்பான முழு சதித்திட்டத்திற்கும் அப்போதைய அமைச்சர் ராசா தான் காரணம் என்றும் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதுவரை திமுக பெயர் கெடக்கூடாது என்று நினைத்த கலைஞர் தன்னுடைய மகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தங்கள் கட்சியின் பெயருக்கும், தங்கள் கட்சியின் பிரதிநிதிக்கும் கெட்ட பெயர் வந்தால் கூட பரவாயில்லை என்று நினைத்து விட்டார் போலும். 

படங்கள் : கூகிள்

தோழமையுடன்
அபு நிஹான்2 comments:

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

ஸலாம் உண்டாகட்டும் சகோ ஹாஜா...
இவர் இதற்கு முன்னர் டெல்லி சென்றது... மந்திரி சபை அமைக்கும்போது.., தன் மகன் அழகிரிக்கு மந்திரி சீட் வாங்க...
இப்போது... இந்த விஷயத்துக்கு... பிறர்நலத்துக்காக பாடுபடுதல் அரசியல்வாதிகளின் இலக்கணம் என்பது போய்... சுயநலவாதிகள்தான்தான் இவர்கள் என்று மாறி வெகுகாலம் ஆகிவிட்டது சகோ.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

தங்களின் வருகைக்கும், மேலான கருத்துக்கும் நன்றி சகோ

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template