அடுத்தது என்ன? |
வந்தாச்சு +2 ரிசல்ட். பாஸ் செய்திருப்பவர்களின் அடுத்த இலக்கு பொறியியல் அல்லது மருத்துவப் படிப்புதான். பெற்றோர்களின் எதிர்கால கனவுளை நனவாக்கத் தயாராகும் மாணவர்களுக்கு கவுன்சலிங்தான் முதல் படிக்கல்.
இடம் கிடைக்குமா? என்ன கோர்ஸ்? எந்தக் கல்லூரியில் சேரலாம் என்கிற டென்ஷன்.
இந்தப் பரபரப்பு அவசியமில்லை. காரணம்... கடந்த ஆண்டே நிறைய இடங்கள் மீதம் இருந்தன. இப்ப புதுசா பொறியியல் கல்லூரிகள் தொடங்க பர்மிஷன் கொடுக்கப் போறாங்க! எடுத்த எடுப்பிலேயே பாஸிட்டிவ்வாகப் பேசுகிறார்கள். பிரபல கல்வியாளர்
வழக்கமாக அப்ளை செய்தவுடன் விண்ணப்பங்களுக்கு ரேண்டம் (RANDOM NUMBER) எண் கொடுப்பாங்க. தொடர்ந்து ரேங்க் பட்டியல் வெளியிடுவாங்க. அப்போதே கட் ஆஃப் மதிப்பெண் என்ன என்பது தெரிந்துவிடும். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு அப்ளை செய்திருந்தால் அதற்குரிய நகலையும் இணைத்து மனுச் செய்வது முக்கியம். இந்த நடைமுறை பொறியியல், மருத்துவப் படிப்பு இரண்டுக்கும் பொதுவானது! என்கிற கருத்தையும் பதிவு செய்கிறார். ஆனால் இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்கிற பயத்தில், பெற்றோர் சிலர் முன்பணமாக சில லட்சங்கள் கொடுத்து தனியார் கல்லூர்களில் சீட் வாங்குவது உண்டு. இந்த பயம் அவசியமா?
IIT, CHENNAI |
இதனை சீட் ரிசர்வில் என்று சொல்வார்கள். ஆனால் இந்த நடைமுறை இப்ப குறைஞ்சிருக்கு. கட் ஆஃப் மதிப்பெண்களில் மாற்றம், கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள்... என நிறைய காரணங்கள். அதனால் கவுன்சிலிங் வரை காத்திருப்பது நல்லது.
ANNA UNIVERSITY, CHENNAI |
இருந்தாலும் பொறியியல் கவுன்சலிங்கில் ஒரு சௌகரியம் உண்டு. அதாவது முதல் ஆண்டு கவுன்சலிங்கில் கலந்துகிட்ட மாணவர் ஏதோ ஒரு காரணத்தால் கல்லூரியில் சேராமல் போனால் அடுத்த ஆண்டு நடக்கும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும். ஆனால் மருத்துவப் படிப்பில் இதற்கு வாய்ப்பு இல்லை! என்கிறார்.
MMC, CHENNAI |
+2 மதிப்பெண்தான் கவுன்சலிங்கிற்கு அடிப்படை. அதனால் போட்டி கடுமையாகி கல்லூரியைத் தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும் என்கிறார்கள். இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலை பொறியியல் கவுன்சலிங் செயலாளர் டாக்டர் ரைமண்ட் உத்தரியராஜி.
இந்த பயம் தேவையில்லை. கவுன்சலிங்கிற்கு முன்பே பத்து கல்லூரிகளைத் தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம். அவற்றின் வசதி வாய்ப்பு, படிக்கும் சூழல் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். அடுத்து, கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொறுத்துத்தான் போட்டி அமையும். முந்தைய ஆணடு கட் ஆஃப் மதிப்பெண்களை இணையதளத்தில் பார்த்து எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை அறியலாம். இருந்தாலும் கோர்ஸை தேர்வு செய்யும்போது கவனம் அவசியம். உதாரணமாக தனித்துறையைத் தேர்ந்தெடுப்பதை விட கோர் குரூப்பாக எடுக்கலாம். இதன்மூலம் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் இருக்கும்! நம்பிக்கையுடன் சொல்கிறார் உத்தரியராஜ்.
கோர்ஸ் வாய்ப்புகள்?
கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஆப்டோமெட்ரி, நர்ஸிங், ரேடியோ பிஸிக்ஸ்,ஹாஸ்பிட்டல் மேனேஸ்மெண்ட்
தபால் வேண்டாம்
விளையாட்டுப் பிரிவில் (ஸ்போர்ட்ஸ் கோட்டா) பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கு அப்ளை செய்பவர்கள் விண்ணப்பத்தை தபால்மூலம் அனுப்பாமல் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். கால விரயம் தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
எங்கே கிடைக்கும்?
அண்ணா பல்கலை, குறிப்பிட்ட வங்கிகள். அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளில் தொழிற் கல்வி சேர்க்கை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
டிப்ஸ்... டிப்ஸ்...
- இடைத் தரகர்களை நம்ப வேண்டாம்.
- நெருங்கிய உறவினரோடு மட்டுமே கவுன்சலிங் செல்லவேண்டும்.
- கல்லூரியின் கோட் எண்ணை சரியாகத் தேர்வு செய்வது அவசியம்.
- கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையைப் பத்திரமாக வைத்திருக்கவும்.
- ஒரிஜினல் சர்டிஃபிகேட்டுகளின் நகல் உடன் கொண்டு செல்லலாம்.
- தனியார் பொறியியல் கல்லூரிகள் அமைத்திருக்கும் ஸ்டால்கள் பக்கம் போவதைத் தவிர்க்கலாம்.
டிஸ்கி: இது எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. பகிர்ந்து கொள்ளலாம் என்ற நோக்கத்திற்காக பதிகிறேன். இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.
நன்றி : பயனுள்ள தகவல்கள் குழுமம்
பயனுள்ள தகவல்.
ReplyDeleteநண்பருக்கு ஒரு சிறிய வேண்டுகோள்
எனது மகள் மும்பையில் +2 தேர்வு எழுதியுள்ளார், இன்னும் தேர்வுமுடிவு வரவில்லை அனேகமும் இந்தமாத இருதியில் வரவாய்ப்புண்டு.
இப்படி மும்பையில் படித்தவர்கள் தமிழகத்தில் MBBS/BDS/BVSC ( OR)BE போன்ற படிப்பில் சேர வழிமுறை என்ன என்பதினை விபரமாக தெறிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!
எனது மின்னஞ்சல் முகவரி:unmaivrumbi@webdunia.com
உண்மைவிரும்பி.
மும்பை.