Sunday 12 June 2011

அமீரகத்தில் வெயில் கால மதிய இடைவேளை

Ministry of Labour - Midday break Icon

அமீரகத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து வெயில் காலத்திற்கான மதிய இடைவேளை (12.30 – 3.00) ஆரம்பிக்க இருக்கிறது. நான் இந்தியாவில் இருந்து அமீரகம் வந்தவுடன் பல விஷயங்களை பார்த்து வியந்து இருக்கிறேன். அடுக்குமாடி கட்டிடங்கள் என்னை பெரிதும் வியப்படைய செய்யவில்லை. ஆனால் அமீரகத்தில் குறிப்பாக துபையில் நாம் வாழ்வது இந்தியாவில் வாழ்வது போன்ற தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. எங்கு திரும்பினாலும் இந்தியர்கள், அரசு அலுவலகங்களில் கூட இந்தியர்கள், இந்தி பேசும் அமீரக குடி உரிமைகள் என பல விஷயங்களில் இந்தியாவை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். வெற்றிலை முதல் மல்லிகைப்புவை வரை இங்கு கிடைப்பது பல இந்தியர்களுக்கு ஆச்சர்யமளிக்கும்.

இந்தியர்கள் அதிகமாக தொழில் துறையில் செழித்து வளர்ந்த காரணத்தாலும் பல துறைகளில் நாம் சாதனை படைத்துள்ளதாலும் பல நிறுவணங்களை நாம் வழிநடத்துவதாலும் பெரும்பாலும் அமீரகத்தில் இந்தியர்களுக்கு சற்று கூடுதல் மரியாதை கிடைக்கும். சில இடங்களில் விதிவிலக்கு. இங்கு என்னை பெரிதும் கவர்ந்தது வெளிநாட்டு தொழிலாளர்கள், குறிப்பாக கடைநிலை ஊழியர்கள் மீது அமீரக அரசு காட்டும் அக்கறை. மற்ற வளைகுடா நாடுகளை ஒப்பிடும் போது அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு பல சலுகைகளை அமீரக அரசு செய்து கொடுத்துள்ளது. அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் பாஸ்போர்ட்டை கையில் வாங்கி கொண்டு டிக்கெட் எடுத்தால் ஊருக்கு போய்விடலாம். இது மற்ற எந்த வளைகுடா நாடுகளில் இல்லாத ஒரு வசதி. ஆதலால் இரவு எந்த நேரமானாலும் நம் பணிபுரியும் நிறுவணத்தில் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளும் வசதி இருந்தால் போது, ஊருக்கு சென்று விடலாம். 

அமீரகத்தில் வெயில் காலம் தொடங்கியவுடன் மதிய உணவு இடைவேளையை அதிகரித்து மதியம் 12:30 முதல் 3:00 வரை கடை நிலை ஊழியர்களுக்கும், கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இந்த (summer mid day break) சட்டத்தை அமீரக அரசு இயற்றியது. அதாவது வெளியில் கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பொறியியாளர்கள், சூப்பர்வைசர்கள், கடைநிலை ஊழியர்கள் அனைவரும் குறிப்பிட்ட 12:30 – 3:00 மணி வரை எந்த வேலையும் செய்யக் கூடாது. Site office இல் இருப்பவர்கள் வேலை செய்யலாம் என்று சட்டத்தை இயற்றியது. சட்டத்தை இயற்றி விட்டதோடு நிறுத்தாமல் (நம்ம தமிழ்நாடு ஹெல்மெட் சட்டம் மாதிரி இல்லாமல்) அடுத்தடுத்த ஆண்டுகளில் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள், மற்றும் அபராதமும் விதித்து என்றுமே அரசு பணக்கார முதலாளிகளின் துணைவன் இல்லை, தொழிலாளர்களின் துணைவன் தான் என்பதை நிரூபித்தது. 
ஓய்வெடுக்கும் தொழிலாளி
முதல் வருடத்தில் 75% சதவிகித நிறுவணங்கள் முழுமையாக வெயில் கால இடைவேளை சட்டத்தை பின்பற்றினர். அடுத்து வந்த காலங்களில் 99% சதவிகித நிறுவணங்கள் சட்டத்தை பின்பற்ற தயாராகினர். இதற்கான முக்கிய காரணம் அரசாங்கம் எந்தவித பாரபட்சம் இன்றி நிறுவணங்களை கண்டிப்பதே. 
ஓய்வெடுக்கும் தொழிலாளர்கள்
சட்டத்தை மீறினால்: முதல் தடவை சட்டத்தை மீறினால் 10,000/- திர்ஹம் அபராதம். அதோடு நிறுத்தாமல் நிறுவணங்களுக்கான தர வரிசையை (ranking- A,B,C) குறைத்து C தரவரிசைக்கு தள்ளி விடும். இதன் காரணமாக அரசாங்க ப்ராஜக்டுகள், பெரிய நிறுவண ப்ராஜெக்டுகள் கிடைக்காமல் போய்விடும் நிலை ஏற்படலாம். அடுத்த தடவை மீறினால் 20,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறுமாத கால நிறுவண வேலைகளுக்கு (சம்பந்தப்பட்ட கட்டிட வேலைகளுக்கு) தடை, முன்றாவது தடவை மீறினால் 30,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஒரு வருட காலத்திற்கு வேலை செய்ய தடை என்று கடுமையான சட்டத்தால் அமீரகத்தில் 99% சதவிகித நிறுவணங்கள் இந்த வெயில் கால இடைவேளை சட்டத்தை பின்பற்றுகின்றனர். இதனால் கடுமையான வெயிலில் வேலை செய்யும் நிலையிலிருந்து கடைநிலை ஊழியர்கள் மட்டுமின்றி, சூப்பர்வைசர்கள், இஞ்சினியர்கள், மற்றும் அனைவரும் பயனடைகின்றனர். அந்த மதிய இடைவெளியில் நல்லுள்ளம் கொண்ட முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தங்கி ஓய்வெடுக்க குளிரூட்டப்பட்ட அறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர் என்பது கூடுதல் செய்தி. ஆனால் எப்படியியாயினும் 8 மணி நேர வேலையை நேரத்தை குறைக்க முடியாது. ஆதலால் காலையில் சீக்கிரமாக ஆரம்பித்தோ அல்லது மாலையில் தாமதாமாக முடித்தோ 8 மணி நேரம் வேலை செய்தாக வேண்டும். 

இதை போன்ற வெயில் கால மதிய இடைவேளை சவூதி, குவைத், பஹ்ரைன், கத்தார் போன்ற நாடுகளிலும் நடைமுறைபடுத்துவது குறிப்பிடத்தக்கது.

தோழமையுடன்
அபு நிஹான்

3 comments:

  1. அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்...
    அருமையான தகவல்கள். நல்ல விளக்கங்கள்.
    //பாஸ்போர்ட்டை கையில் வாங்கி கொண்டு டிக்கெட் எடுத்தால் ஊருக்கு போய்விடலாம்.//--ஆஹா..!
    நன்றி சகோ.அபுநிஹான்.

    ReplyDelete
  2. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...