Monday 1 October 2012

என்னை கதற வைத்த சென்னை

எனக்கும் சென்னைக்கும் இடையேயான உறவு சிறு வயது தொடங்கி அதிகமாக ஏற்போட்டோடு முடிந்து விடும். ஆம், என்னுடைய உறவினர்களை அழைக்க விமான நிலையத்துக்கு சென்று அழைத்து விட்டு விமான நிலையத்தையே சென்னை என்று நினைத்து சிட்டிக்கு செல்லாமலே திரும்பி விடுவோம். பிறகு 6 ஆவது வகுப்பு கோடை விடுமுறை (என்று நினைக்கிறேன்) யில் என்னுடைய உறவினர் வீட்டில் தங்கி ஒரு வாரம் ஊர் சுற்றி பார்த்து விட்டு வழக்கமாக செல்லும் மெரீனா பீச், பாம்பு பண்ணை பார்த்து விட்டு திரும்பினேன். அது தான் என் முதல் சென்னை சுற்று பயணம்.

அதன் பிறகு கல்லூரி படிக்கும் காலத்தில் கஜெட்டில் என்னுடைய பெயர் மாற்றம் குறித்து சில விண்ணப்பங்கள் வாங்க சென்னை சென்று என்னுடைய குடும்ப நண்பர் வீட்டில் தங்கினேன். அந்த குடும்ப நண்பரை பற்றி சில சிவாரஸ்யமான தகவல்கள் உண்டு. அதை தனி பதிவாக போடுகிறேன். என்னுடைய வேலையை ஒரே நாளில் முடித்து கொண்டு ஊர் திரும்ப சென்னை பாரீஸ் பேருந்து நிலையம் வந்தடைந்தேன். அங்கு தான் சென்னை எனக்கு உண்மையான முகத்தை காட்டியது.

அது வரையில் சென்னையில் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கி பழக்கம். நடைபாதை கடைகளில் வாங்கியதில்லை. பஸ் எடுக்க சில மணிகள் ஆகும் என்பதால் பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள NSC போஸ் ரோட்டில் நடைபாதை கடைகளில் என்ன விற்கிறது என்று பார்க்க சென்றேன். அப்போது ஒரு கடையில் பெரிய சைஸ் வாட்சுகள், கருப்பு கண்ணாடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போய் பார்க்கலாம், பிடித்தால் வாங்கலாம் என்று நினைத்து போய் நின்றேன்.

NSC போஸ் ரோடு மற்றும் நடை பாதை வியாபாரிகள்
 நான் நின்றிருந்த சில நிமிடங்களில் என் அருகில் ஒருவன் வந்து பார்த்து கொண்டிருக்க அவனிடத்தில் கடைக்காரன் என்ன வேணும் சார்? என்று கேட்க, சும்மா தான் பார்க்க வந்தேன் என்று அவன் சொல்ல என்னது பார்க்க வந்தியா, ஏன் பார்க்க தான் நாங்க கடைய தொறந்து வச்சிருக்கொமா? எங்கள பாத்தா எப்படி இருக்கு என்று மிரட்டல் தொனியில் கூற எனக்கு அடி வயித்தில் சிறு ரசாயன மாற்றம் நிகழ்ந்தது, அதன் பின் இன்னொருவன் வந்து நிற்க அவனிடத்திலும் என்ன சார் வேணும் என்று கேட்க அவன் ஒரு வாட்சை காண்பிக்க அந்த வாட்சை பார்த்து விட்டு விலையை கேட்க 1,500 என்று சொன்னான். பி.ஆர். அண்டு சன்ஸ்ல கூட அவ்வளவு வெலை சத்தியமா சொல்லி இருக்க மாட்டான் அந்த வாட்சுக்கு. உடனே அவன் இல்ல, வேணாம் என்று கூற, எவ்வளவு தருவ என்று கேட்டான், பின்னர் அவன் 400 ருபாய்க்கு தருவிங்களா என்று கேட்க தர முடியாது என்று மெட்ராஸ் பாசையில் கொஞ்சம் கடுமையாக கூறினான். இதையெல்லாம் பார்த்தவுடன் எனக்குள் பயம் ஊடுருவிக் கொண்டது.

நாம் எப்படி இந்த இடத்தை விட்டு சேதாரம் இல்லாமல் போக போகிறோம் என்பதை பற்றியே மனதில் அலாரம் அடித்து கொண்டிருந்தது. அடுத்த ஆடு நீ தான் என்று மனதின் ஒரு ஓரத்தில் பயப்படலம் புயல் சின்னமாய் உருவாக “உனக்கு என்ன வேணும்” என்று என்னை பார்த்து கேட்டான். கொஞ்சம் பதறி போய் அந்த வாட்சு கொடுங்க என்று மற்றொருவன் பார்த்த அதே வாட்சை (அவன் தான் 400 ருபாய்க்கு தர மாட்டேங்கிறானே, அதனால அந்த வாட்ச பாத்துட்டு 400 ருபாய்க்கு கேட்டு விட்டு வந்து விடலாம்னு நினைச்சு) கேட்டேன். அவன் அதை கொடுத்தவுடன் பார்த்து விட்டு வேண்டாம் என்றேன், சொல்லுப்பா எவ்வளவுக்கு வேணும் என்று மிகவும் அனுசரணையாக கேட்டான்.

நம்மகிட்ட ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுறானே அப்படின்னு நினைச்சு அவர் கேட்ட ரேட்டுக்கு கொடுங்க அப்படின்னு சொன்னே, சொல்லிட்டு அந்த ரேட்டுக்கு தான் தர மாட்டேங்கிறிங்களே என்று அப்பாவியாக கேட்டேன், அதற்கு அவன் சொன்னான் பாருங்க ஒரு பதிலு, அதுல அப்படியே ஆடி போயிட்டேன். அவனுக்கு தர மாட்டேன், உனக்கு தருவேன் என்றான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. (ஏன்னா கையில மொத்தமே 350 ருபா தான் இருக்கு) இல்லங்க வேணாம் என்று சொன்னேன். உடனே அவன் அப்ப வேடிக்க பார்க்கத்தான் வந்தியா? வேடிக்க காட்டவா இங்க கடைய தொறந்து வச்சிருக்கோம், டே கணேஷு ஷட்டர இழுத்து மூடுறா (ஷட்டருக்கு வெளியில தானடா கடையே வச்சிருக்கே # மைன்ட் வாய்ஸ் :) ) , இவன புடிச்சு கட்றா என்று எங்கோ திரும்பி சொல்லிக் கொண்டிருந்தான். பின்னால் யாரும் அவன் சொல்வதை சட்டை செய்யவில்லை என்றாலும் எனக்கு சப்த நாடியும் ஒரு நிமிடம் அடங்கி விட்டது.

நல்ல வெயில் அடிக்கும் போது திடீரென்று மேகம் சுழ்ந்து வானம் இருட்டாகி மழைகொட்டுமே அது போல எனக்கும் உள்ளிருந்து திடீரென்று அழுகை வந்தது. அழுகையோடு என்னிடம் காசு இல்லை, நான் ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னேன். உடனே அவன் எங்க பர்ஸ காட்டு என்று சொல்ல உடனே குருவுக்கு கட்டுப்பட்ட சிஷ்யன் போல பர்சை காட்டினேன். என்னிடம் 350 ருபாய் இருந்தது. அண்ணே 350 ருபாய் தான் இருக்கு, தஞ்சாவூருக்கு போகணும், போற வழியில சிலவு இருக்கு, சாப்பிடனும் என்று சொல்ல, சரி ஏதாவது என் கடையில் வாங்கிவிட்டு போ என்று கொஞ்சம் மிரட்டலுடன் கூறினான். 75 ரூபாய் கொடுத்து ஒரு கருப்பு கண்ணாடி வாங்கனேன். (அப்போதும் நம்மை ஆரும் ஏமாத்த முடியாது என்று பார்கைன் பண்ணி தான் வாங்கினேன், வாங்கியதுக்கு அப்புறம் தான் 75 ருபாயே அதிகம் என்று தெரிந்தது :) ) mnc கம்பெனியில் சாப்ட்வேர் ப்ரோகிராம்மர் வேலை பார்ப்பவன் போல கை கொடுத்து என் பேரு கணேஷு (என்னாது ஓம் பேர் தான் கணேஷா?? :( ) நெக்ஸ்ட் டைம் வந்தா வாட்ச் வாங்க்கிக்கோ என்றான், (நெக்ஸ்ட் சென்னைக்கு ரெஸ்ட் என்று மனதில் நினைத்து கொண்டு) நடையை கட்டினேன்.

நான் அந்த பொருட்கள் வாங்கும் போது அவன் விரட்டி அடித்த ஆட்கள் என் பக்கத்தில் நின்றார்கள். (அது அவனுடைய ஆட்கள், அது அப்போ நமக்கு தெரியல, தெரிஞ்சாலும் ஒன்னும் செய்ய முடியாது :( ) நம்மையும் இப்படி ஒருவன் ஏமாற்றி விட்டானே என்று ஆதங்கத்துடனே வீடு வந்து சேர்ந்தேன். பின்னர் என் நண்பர்களிடம் இதை பற்றி சொல்லும் போது அவர்கள் சொன்னது மிகவும் அதிர்ச்சியை தந்தது. பார்ப்பதற்கு வெளியூர் ஆட்களை போல் தெரிபவர்களை (நீங்கள் எவ்வளவு விவரமாக பேசினாலும் வெளியூர் ஆட்களை சில நடவடிக்கைகளை வைத்தே கண்டு பிடித்து விடுவார்கள்) இப்படி தான் நடைபாதை வியாபாரிகள் பலர் ஏமாற்றுவார்கள் என்றும் இரண்டு பேர் அவனிடத்தில் திட்டு வாங்கினார்களே அவர்களும் அவன் ஆள் தான் என்றும், தனக்கு வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காகவும், அடுத்தவர்களை பயமுறுத்துவதற்காகவும் இப்படி செய்வார்கள் என்று கூறியது உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. பிறகு கல்லுரி படிப்பு முடித்து விட்டு சென்னையில் வேலையில் இருக்கும் போது அதே NSC  போஸ் ரோட்டில் நடைபாதை கடையில்  விலை விசாரித்து விட்டு வேண்டாம் என்று வந்து விட்டேன், ஆனால் அப்போது யாரும் மிரட்டவில்லை, ஏன் நான் சென்னைவாசி என்று யாரும் சொல்லி விட்டார்களா தெரியவில்லை, ஆனால் அப்போது என்னை யாராவது இதை போல் சொன்னால் தைரியமாக போலிசுக்கு போவேன் என்று சொல்லி இருப்பேன், ஏன்னா நமக்கு அப்போ சென்னை பழகிருச்சு.

இது சென்னையை பத்தி எனக்கு கிடைத்த அனுபவம். இதை போல் பலருக்கும் பல அனுபவம். பஸ்ஸில், ஆட்டோவில், ரயில் நிலையத்தில், விமான நிலையத்தில். அதனாலே தான் சென்னைக்கு செல்கிறேன் என்று யாரேனும் சொன்னால் அவனிடத்தில் இப்படிலாம் ஏமாற்றுவார்கள் அப்படியல்லாம் ஏமாற்றுவார்கள் என்று ஒரு பெரிய லிஸ்டையே தருவார்கள். ஆனால் அதுவெல்லாம் தாத்தா காலத்துக்கு டெக்னிக்காக இருக்கும், பலரும் பல வகையில் ஏமாற்றப்படுவார்கள். இதனால் சென்னையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் அனைவருமே கெட்டவர்கள் என்று கூறவில்லை. எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடுத்தவர்களுக்கு பகரிந்து கொண்ட போது, அவர்களுக்கும் இதை போன்று பல்வேறு அனுபவங்கள் பஸ்ஸில், ரயிலில், ஆட்டோ ஓட்டுனர்களால், வியாபாரிகளால் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று உணர முடிகிறது. இதை போன்ற சில மோசமான நிகழ்வுகளால் சென்னை என்றாலே சிலர் தெறித்து ஓடுகின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பல நன் மக்களை கொண்டு இரவு பகலாக இயங்கும் சென்னைக்கே கெட்ட பெயர் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.

புதிதாக சென்னைக்கு சென்றாலோ அல்லது சென்னையை பற்றி அதிகம் அறியாமல் இருந்தாலோ இதை போல நடைபாதை கடைகளுக்கு செல்லாதீர்கள், உங்களுடன் உங்கள் சென்னை நண்பன் / உறவினர் யாராவது துணைக்கு இருந்தால் தைரியமாக வாங்கலாம். போலிசுக்கு போனால் நியாயம் கிடைக்கும் என்று எல்லா நேரமும் விவேகமாக சிந்திக்க கூடாது. பலர் போலிசுக்கு மாமஊல் கொடுத்து விட்டு தான் நடை பாதை கடைகளையே நடத்துகின்றனர்.    
வியாபாரம் சம்பந்தமாக இஸ்லாம் கூறியது

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 3:161)

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.   (அல்-குர்ஆன் 4:29)

''விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: “ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா?ஹராமா? என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்” என்று கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புஹாரி).

அநீதி சம்பந்தமாக இஸ்லாம் கூறியது 

அல்லாஹ் தன் திருமறையில்:

அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணி விடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான். (அல்குர்ஆன் 14:42)என்று கூறுகின்றான் மேலும்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியை குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 2448)

தோழமையுடன்
அபு நிஹான்

17 comments:

  1. #போலிசுக்கு போனால் நியாயம் கிடைக்கும் என்று எல்லா நேரமும் விவேகமாக சிந்திக்க கூடாது.#

    ஹா ஹா ஹா... சரியோ சரி

    ReplyDelete
  2. சென்னையின் இன்னொரு முகத்தை ஹதீஸ்களை மேற்கோள் காட்டி தோலை உரித்து உள்ளீர்கள்....

    ReplyDelete
  3. //இதையெல்லாம் பார்த்தவுடன் எனக்குள் பயம் ஊடுருவிக் கொண்டது. //

    அதெல்லாமும் பாத்தப்புறமும், ஏன் அங்கயே நின்னுகிட்டு இருந்தீங்க? அப்படியே நைஸா நழுவிருக்கலாம்ல....

    எனக்கும் இன்னிவரைக்கும் சென்னை (ஊரைத்தான்) பிடிக்காது. ஆனா, உங்களையே கதறவைத்தது என்பதை அறியும்போது, லைட்டா ஒரு பாசம் வருது சென்னை மேல!! :-)))))

    ReplyDelete
  4. அருமையான பதிவு சகோ!

    ஆனா படிக்க தான் நேரமில்லை... மேலோட்டமாக படித்தேன்.

    ReplyDelete
  5. என்ன பிரதர் பிழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க.கதறவைத்த சென்னை என்று தலைப்பிட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள்.இப்படிக்கூட இங்கும் ஆட்கள் உண்டு.

    ReplyDelete
  6. ஹா...ஹா...நல்ல அனுபவம்! எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.

    ReplyDelete
  7. சென்னை நடை பாதைக் கடையில், அச்சு அசலாக இதே மாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டது மைதீன்.

    ஒரு போலீஸ்காரரிடம் சொன்னேன்.

    “இந்த அளவுக்கு விட்டார்களே, சந்தோஷப்படுங்க”ன்னு சொன்னார்.

    பலருக்கும் பயன்படும் அருமையான அனுபவப் பதிவு.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  8. ஸலாம் ,
    எனக்கு பிடித்த சென்னையை அவமானப்படுத்திய உங்களை சென்னை ஏர்போர்ட் பக்கமே காலடி எடுத்து வைக்க கூடாது என்று உத்தரவு இடுகிறேன். போய் திருச்சி ஏர்போர்ட் பயன்படுத்தி கொள்ளுங்கள் ஹாஜா மைதீன்.
    அப்புறம் அன்றைக்கு நீங்க அழுதப்போ ஏதாச்சும் போட்டோ எடுத்துருக்கிங்களா? இல்லை அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டோவை பார்க்கலாம் என்று தான் கேட்கிறேன்.
    ரயிலில் புட்போர்ட் பயணம், பரபரப்பாய் இருப்பது, குட்டி குட்டி மலைகள் என ரசிக்க ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கு சென்னையில்.

    ReplyDelete
  9. மனிதனை மனிதனாக மதிக்காத சென்னையை எனக்கு எப்போதுமே பிடிக்காது. உங்கள் அனுபவமும் அதையே வலியுறுத்துகிறது!

    ReplyDelete
  10. உங்களுடைய அனுபவத்தை நன்றாக விவரித்துள்ளீர்கள். யப்பா.. கனேசு எங்கேப்பா இருக்கே???

    ReplyDelete
  11. உங்களுடைய அனுபவத்தை நன்றாக விவரித்துள்ளீர்கள். யப்பா.. கனேசு எங்கேப்பா இருக்கே???

    ReplyDelete
  12. சலாம் ஹாஜா மைதீன்..

    பாத்தீங்களா மறுபடியும் உங்க மூளை வேலை செய்யல... என் பேர சொல்லி எஸ்கேப் ஆகி இருக்கலாம்ல???? நீங்க சென்னைக்கு சரிப்பட மாட்டீங்க....

    ReplyDelete

  13. (ம்ம் திட்டகூடாது.

    ஐய்யே...இன்னாபா . ஒரு தபா சென்னைக்கு போய் வந்து இப்படி கதறினா எப்படி.

    மீன் மார்க்கெட்டில் மட்டும் தான் இப்படி பேசுவார்கள்
    மற்ற இடங்களில் அவ்வளவாக

    வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை பா

    சில நல்ல நடை பாதை விற்பனையாளர்களும் இருக்கின்றனர்.

    ஒரு வேளை புதுமுகமுன்னு கண்டுபிடிக்கும் அளவுக்கு பதிங்கி நின்றீர்களோ)

    ReplyDelete
  14. ஹதீஸ் விளக்கத்துடன் பதிவு போட்டது அருமை
    நிறைய விபாரிகளுக்கு பயன் படும்

    ReplyDelete
  15. ஹதீஸ் எல்லாம் படிக்க நன்றாக இருக்கிறது.

    ஆனால் சாதாரண வாழ்க்கையில் முஸ்லீம்கள் அடுத்தவர்களை ஏமாற்றச் சிறிதும் தயங்குவதில்லை என்பது எனது அனுபவப் பாடம்..

    பணம் இல்லாவிட்டால் நாளை காலை மகளின் திருமணம் நடைபெறுவது தடைப்படும் என்று சொல்ல வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டால், நீ முடிந்தால் வாங்கிக் கொள் என்று சொல்கிறார் ஒரு முஸ்லீம் வியாபாரி.

    பலமுறை கேட்டு நொந்து போன பின்னர், ஜமாத்தில் முறையிட்டால், அவர்கள் விசாரித்து வாங்கிக் கொடுப்பார்கள் என்று சொன்னதில், அங்கு போய்ச் சொன்னால், வியாபார விதயங்களை ஜமாத் விசாரிக்காது என்று கூசாமல் சொல்லி விட்டார்கள்..

    இது போன்ற ஊருக்கு உபதேசம் செய்யும் முஸ்லீம்களைப் பார்த்து அலுத்து விட்டது. :((

    உடனே பொங்கி எழுந்து பின்னூட்டமிடப் போகும் அன்பர்கள், அந்தக் கடனை திரும்ப வாங்க என்ன வழி என்று சொல்வது உத்தமம்.

    ReplyDelete
  16. அன்பின் சகோ அறிவன்,
    நீங்கள் கடன் கொடுத்த நபர் எந்த ஊர்? அவரிடம் நீங்கள் கொடுத்த கடனுக்கு தக்க ஆதாரம் இருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அவரிடம் பேசி உங்களின் கடனை வாங்கி தருகிறோம். ஏனெனில் இப்படிப்பட்ட மோசடிகளில் ஈடுபடுவர்கள் மறுமையை குறித்து அஞ்சுவதேயில்லை. எனவே நீங்கள் தக்க ஆதாரங்களை வைத்திருப்பின் தயங்காமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை ஏமாற்றியவனிடமிருந்து உங்களின் பணத்தை இன்ஷா அல்லாஹ் பெற்று தருகிறோம்.

    ReplyDelete
  17. சகோதரர் அறிவன்,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    உங்களின் நிலைக்காக மனம் வருந்துகின்றேன், கூடிய விரையில் தாங்கள் இதிலிருந்து மீளவும் வேண்டுகின்றேன். நான் இஸ்லாமிர்க்குள் வந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று முஸ்லிம்களின் உதவி செய்யும் மனப்பாங்கை கண்டு தான். இன்று அந்த சமூகத்தின் மீது இப்படியான குறை சுமத்தப்படும் போது அது என்னை மிகவும் பாதிக்கின்றது.

    நான் சொல்ல வந்ததை ஷேக் தாவுத் சொல்லிட்டார். தாங்கள் எனக்கு இது குறித்த ஆதார விபரங்களை அளித்தால் மேற்கொண்டு இதில் என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் (aashiq.ahamed.14@gmail.com)

    அப்படி எதுவும் பயனளிக்காவிட்டால், நீங்கள் சொல்லும் கடன் தொகை எங்களின் வரம்பிற்கு உட்பட்டு இருந்தால் சகோதர முஸ்லிமிற்காக அதனை நாங்கள் செலுத்தி விடுகின்றோம்.

    இன்ஷா அல்லாஹ் தாங்கள் இது குறித்த ஆதாரங்கள் மற்றும் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

    உங்கள் குடும்பத்தினரும் தாங்களும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வாழ பிரார்த்தித்தவனாக,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...