Sunday 7 October 2012

இஸ்லாமிய எதிர்ப்பும், முஸ்லீம்களின் கடமையும் - தாவா தொடர்

அஸ்ஸலாமு அலைக்கும்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மனதை காயப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் மற்ற மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது. யார் இந்த நபர்? ஏன் இவருக்காக நாடு ரோட்டில் நின்று போராடுகிறார்கள் என்று மக்கள் ஆச்சர்யபடுகின்றனர் (ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலும், போது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், மற்ற மக்களின் சொத்துக்கோ, உயிருக்கோ பாதகம் ஏற்படும் வகையிலும் போராடியவர்களுக்கு எமது கண்டனங்கள். ஏனெனில் அது இஸ்லாம் கற்று தந்த வழி இல்லை)

சரி விஷயத்திற்கு வருவோம். அல்ஹம்துலில்லாஹ் ஜனநாயக முறைப்படி போராடியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி கொடுப்பான் இன்ஷா அல்லாஹ்.  ஆனால் அதோடு முடிந்து விடுகிறதா நம் கடமை. சில நாட்கள் போராடி விட்டு இணையதளங்களில் / சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை / கண்டனங்களை பதிந்து விட்டு அடுத்த வேலைக்கு தயாராகிறோம். நபி (ஸல்) அவர்களுக்காக கண்டன குரல்கள் எழுப்பிய நாம் எந்தளவிற்கு எத்துனை பேர் அவர்கள் கற்று தந்த வழிமுறைப்படி நம் வாழ்க்கையை அமைத்து கொண்டிருக்கிறோம். எந்த நபியை களங்கப்படுத்தி விட்டார்கள் என்று நாம் கூப்பாடு  போட்டோமோ அந்த நபி கற்று தந்த வழிமுறைப்படி வாழ்ந்து காட்டி, இது தான் எங்கள் நபியின் வழி, இந்த அயோக்கியர்கள் எப்படி திரித்து படம் எடுத்து விட்டார்கள் பார்த்தீர்களா? என்று மாற்று மத அன்பர்கள் முன்பு வாழ்ந்து காட்டி இருக்கிறோமா? சிந்தித்து பாருங்கள். எத்துனை பேர் நபி (ஸல்) அவர்களை பற்றி மாற்று மத அன்பர்களிடம் சொல்லி இருக்கிறோம்?
இஸ்லாம் மார்க்கம் தான் எங்கள் மார்க்கம் என்று பேச்சளவில் சொல்லி கொண்டு இஸ்லாத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஏராளம் ஏராளம். இது தான் நபி அவர்கள் மீது நாம் காட்டுகின்ற மதிப்பா? மரியாதையா? அன்பா? பாசமா? எப்படி நபி அவர்களின் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் எடுத்த படத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வததற்காக முயற்சி செய்தோமோ அதே போல் அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அப்படி வாழ முயற்சி செய்கிறோமா? அல்லது அவர்களின் வழிமுறைகள், அவர்களின் வாழ்க்கை எப்படி அமைந்தது? என்பதை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்தோமா?

கலிமா சொல்லி முஸ்லிம் ஆகிவிட்டு, தொழுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது போன்றவைகள் மட்டும் மார்க்கமல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். நாம் வாழும் வாழ்க்கையில் இஸ்லாம் இருக்க வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்க செல்லும் வரை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எப்படி எல்லா வேலையும் செய்ய வேண்டும் / எல்லா விஷயத்தையும் நாம் எப்படி அணுக வேண்டும் என்று கற்று தந்த மார்க்கம் இஸ்லாம். வாழ்ந்து காட்டியவர்கள் நபி (ஸல்) அவர்கள். அந்த நபி காட்டி தந்த வழியில் நாம் வாழ்ந்து காட்டுவது மட்டுமே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையும், கண்ணியமும் ஆகும். 

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (அல்குர்அன் 5:3)

மேலே குறிப்பிட்டுள்ள அல் குர்ஆண் வசனம் பற்றியும், அதன் வழியாக எவ்வாறு முஸ்லிம் தன்னுடைய வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ். 
தாவா தொடரும்  ...

தமிழ்மணத்தில் ஓட்டு போட

தோழமையுடன்
அபு நிஹான்

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //கலிமா சொல்லி முஸ்லிம் ஆகிவிட்டு, தொழுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது போன்றவைகள் மட்டும் மார்க்கமல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். நாம் வாழும் வாழ்க்கையில் இஸ்லாம் இருக்க வேண்டும்.//

    நச்...நச்...

    தொடருங்கள்...

    ReplyDelete
  2. சலாம்!

    சிறந்த பதிவு! தொடருங்கள்.

    ReplyDelete
  3. // எந்த நபியை களங்கப்படுத்தி விட்டார்கள் என்று நாம் கூப்பாடு போட்டோமோ அந்த நபி கற்று தந்த வழிமுறைப்படி வாழ்ந்து காட்டி, இது தான் எங்கள் நபியின் வழி, இந்த அயோக்கியர்கள் எப்படி திரித்து படம் எடுத்து விட்டார்கள் பார்த்தீர்களா? என்று மாற்று மத அன்பர்கள் முன்பு வாழ்ந்து காட்டி இருக்கிறோமா? //

    உங்கள் கேள்வி என்னை வெட்கப்பட வைக்கிறது.... வாழ்ந்து காட்டி மாற்று மதத்தவர்களுக்கு புரிய வைப்பது தான் சிறந்த எதிர்ப்பாக இருக்க முடியும்...

    நடு மண்டைல அடிச்ச மாதிரி கேட்டு இருக்கீங்க சகோ....

    ReplyDelete
  4. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்

    Azhahi.Com

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...