Wednesday 19 November 2014

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 3


அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! - அல் குர்ஆன் 2:42


தொழில் செய்யும் இடத்தில் அரட்டை கூடாது:


சிலர் தொழில் செய்யும் இடத்தில் வீண் அரட்டை, அரசியல் என்று சகலமும் பேசுவார்கள். அவர்கள் கடையில் எப்போதும் ஒரு வெட்டி ஆஃபிஸர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. அரட்டை அடிக்கும் அப்பாடக்கர்கள், வேலை இல்லாத வெட்டி ஆஃபிஸர்களுக்கு பொழுது கழிக்க வேறு இடம் இல்லாததால் அவர்கள் உங்கள் கடையை நோக்கி வருகிறார்கள். முகதட்சனை பார்க்காமல் இங்கு கடை வியாபாரத்தை கெடுக்க வேண்டாம் என்று சொல்லி உங்கள் நண்பர்களுக்கு பறிய வையுங்கள். 
no chat

இப்படி எந்நேரமும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தால் உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து கொண்டே வருவார்கள்; எப்படி? 

அதாவது ஒரு சிலரிடத்தில் மாத கடைசியில் கையில் பணம் இருக்காது, அந்த நேரத்தில் உங்களிடத்தில் கடனுக்கு பொருட்கள் வாங்க வந்திருப்பர், ஆனா இருக்கும் கூட்டத்தை பார்த்து கடன் வாங்க வெட்கப்பட்டு உங்களிடத்தில் வியாபாரம் தொடர்ந்து செய்ய வரமாட்டார். இன்னொன்று பெண்கள் உங்கள் கடைக்கு வரும் போது வெட்டி ஆஃபிஸர்கள் கூட்டம் இருந்தால் அடுத்த தடவை உங்கள் கடைக்கு வருவதை தவிர்த்து விடுவார்கள். 

அலங்காரம்: 

தொழில் நடக்கும் இடத்தை / கடையை ஷோவாக வைத்திருக்க வேண்டும். கடை ஆரம்பிக்கும் முன்னே கடை அலங்கரிக்க வேண்டும். அதற்கென தனியாக நிதி ஒதுக்கி அழகாக வைத்து கொள்ள வேண்டும். தினமும் கடையை பெருக்கி / துடைத்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தவிர ஷோ கேஸ்கள், கண்ணாடிகள் போன்றவற்றை தினமும் துடைத்து வைத்து கொள்ள வேண்டும். தற்போது ஏற்படும் மின் தட்டுப்பாட்டை மனதில் வைத்து கொண்டு மின்தடையை ஈடு செய்யும் வண்ணம் பேட்டரி இன்வெர்ட்டர் / அல்லது ஜெனெரேட்டர் வைத்து கொள்ள வேண்டும்.

வியாபார தந்திரம்:

பொருட்களை கொள்முதல் செய்யும் போது பெரும்பாலும் கடனுக்கு பொருட்களை வாங்காமல் பணம் கொடுத்து  வாங்கினால் பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கும். அதே போல் குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட நாட்களில் விற்றால் அதிகமாக போனஸ் போன்று அந்த கம்பனியில் இருந்து கொடுப்பார்கள். உதாரணத்திற்கு மைலோ உன்கள்  மந்தமாக விற்றால் உங்களுக்கு மைலோ டீலர் இந்த மாதத்தில் 1000 மைலோ விற்றால் இரண்டாயிரம் ரூபாய் பணம் தருகிறேன் என்று சொல்வார். அப்போது விலையை குறைத்து, அல்லது அந்த இரண்டாயிரத்திற்கு ஏதேனும் பரிசு பொருட்களை தேர்வு செய்து மைலோ வாங்கும்  அனைவருக்கும் கொடுக்கலாம். இது போல் வியாபார நுணுக்கங்கள் மற்றும் தந்திரங்கள் தெரிந்து வைத்து கொண்டு வியாபாரம் செய்ய வேண்டும். நீங்கள் டீலர்ஷிப் எடுத்திருந்தால் உங்கள் டார்கட்டை விட அதிகமாக விற்க உன்கள் சப் டீலர்களுக்கு வெளி ஊர் சுற்றுலா போன்ற சலுகைகளை கொடுக்கலாம். உன்கள் கை கடிக்காமல் கிடைக்கின்ற இலாபத்தை ஷேர் செய்து கொடுத்தாலே உங்கள் சப் டீலர்கள் நீங்கள் நினைத்ததை விட அதிகமாக விற்று கொடுப்பார்கள்.

இப்படி வித்தியாசமாக யோசிக்காமல் என் புருஷனும் கச்சேரி போகிறான் என்று எல்லோரும் செல்லும் பாதையில் நீங்களும் சென்றால் கடைசி வரைக்கும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.  கடன் கொடுப்பது பற்றி உங்களிடமே விட்டு விடுகிறேன். ஏனெனில் கடன் கொடுப்பது, வாங்குவது, சூழ்நிலைக்கேற்பவும், வியாபாரத்திற்கேற்பவும் மாறுபடும். 

விளம்பரம்: 

விளம்பரம் செய்ய என்று பணத்தை ஒதுக்க வேண்டும். துண்டு பிரச்சாரங்கள், நோட்டிஸ்கள், லோக்கல் கேபிள் டிவியில் விளம்பரம், தேவைப்பட்டால் உங்கள் பதிப்பக தினசரி செய்தித்தாளில் விளம்பரம் என்று காலத்துகேற்றது போல் நாமும் மாற வேண்டும். 

புதிதாக கடை திறக்க இருக்கிறோம் என்றால் வெளிநாடுகளில் செய்வது போல் குலுக்கல் போடலாம். பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு கூப்பன் கொடுத்து பின்னர் ஒரு இரண்டு மாதம் கழித்து அந்த கூப்பனுக்குரிய குலுக்கல் நடத்தலாம். இதே போன்று ஆண்டு தோறும் நடத்தி (இது வியாபாரத்தை பொருத்தது) மக்களிடத்தில் நம் கடையின் பெயரை கொண்டு செல்லலாம். கிரிக்கெட் போட்டி, விளையாடு போட்டிகளின் ஸ்பான்ஸர் போன்ற விஷயங்களை விளம்பரத்துக்காக உபயோகித்து கொள்ளலாம். 

லாஸ்ட் பட நாட் லீஸ்ட் 

சிலர் வியாபாரம் செய்யும் வசதிகள் இல்லாது இருக்கலாம். ஊருக்கு சென்று செட்டிலாக போகிறோம் என்றால் வியாபாரம் தான் செய்ய வேண்டும் என்றில்லை. நமக்கு தெரிந்த வேலையை நம் ஊரிலேயே இல்லையேல் நம் இந்தியாவில் ஏதாவது ஓரிடத்தில் செய்து பிழைத்து கொள்ளலாம். நான் ஊருக்கு செல்லலாம் என்றிருக்கிறேன். ஆனால் வியாபாரத்திற்கு தான் முதல் இல்லை என்று சொல்பவர்களுக்காக இதை சொல்கிறேன். ஒரு சிலர் டிரைவராக இருப்பார், அவர் ஊரிலேயே வண்டி வாங்கி ஓட்டலாம். இல்லையேல் சம்பளத்திற்காக டாக்ஸி ஓட்டலாம். சிலர் தொழில்நுட்ப (எகட்ரீசியன், மேசன், பிளம்பர், கார்பெண்டர்) வேலை செய்திருப்பர். அவர்கள் அதே வேலையை ஊரிலேயே செய்யலாம். ஊரில் வந்து செட்டிலாகுவது என்பது பக்கா பேங்க் பேலன்ஸோடு, வியாபாரம் ஆரம்பிப்பது மட்டுமல்ல, எந்த வேலையாக இருந்தாலும் குடும்பத்தோடு இருப்பேன் என்று சொல்வது தான். 

இதில் சொல்ல மறந்த விஷயங்கள்: 

நீங்கள் இந்தியாவில் தொழிலை ஆரம்பிக்கும் முன் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் வரிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். விற்பனை வரி, சேவை வரி, VAT வரி, வெளிமாநிலங்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய மத்திய விற்பனை வரி என்று சொல்ல கூடிய CST- Central Sales Tax அதற்கு தேவையான உரிமங்களான (TNGTC License. for doing business in your state & CST License for doing business interstate) போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் வரும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு தடவையும் கப்பம் கட்ட வேண்டியதிருக்கும். எந்த தொழில் ஆரம்பித்தாலும் உங்கள் தொழிலின் பெயர் பிரபலமாக கூடிய வகையில் catchingஆ இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் தொழிலின் பெயர் இலகுவாக மக்களிடம் ரீச் ஆகும். 

நீங்கள் பெரிய வியாபாரி என்பதை காட்டிலும் வியாபார சட்டதிட்டங்களை சரியாக பேணி, ஹலால் ஹராம் விடயத்தில் பேணுதலாக நடப்பவர் என்பதில் தான் உங்களுக்கு மறுமையிலும் வெற்றி கிடைக்கும். 

அல்லாஹ் நம் முயற்சிகளை நிறைவேற்றி தருவானாக. 

கீழ்வரும் ஹதீஸ்கள் நாணயத்துடன் நடந்து கொள்ளும் வியாபரியை பற்றியும், வியாபாரத்தில் தர்மத்தை பற்றியும் கூறுகிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்” என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ). 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வியாபாரிகளே! ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்). 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேம்ப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி 6064 

---முற்றும்

தோழமையுடன்
அபு நிஹான்

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...