Saturday 19 March 2011

தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் – பகுதி - 3


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

தேர்தல் சூழ்நிலை களைகட்டியிருக்கும் இச்சூழலில் மூன்றாம் அணியின் பயத்தை உணர்ந்து அதிமுக உஷாராக கேட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தங்களுடைய நிலையை தமிழக வரலாற்றில் நிலைநிறுத்த போராடிக் கொண்டிருப்பதையும், கூட்டணி உடைந்தால் வெற்றி நிச்சயம் என்று திமுக பகல் கனவு கண்டது வீணாகி தங்களுடைய நிலையை நினைத்து வருந்தி வருவதையும் அனைவரும் அறிவீர்கள். 

தொகுதிகள் பங்கீடு முடிந்து முஸ்லீம் கட்சிகளின் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் வெளிவந்துவிட்டன. முஸ்லீம் லீக், மமக, SDPI ஆகிய கட்சிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது எனவும் சகோதரர் பாக்கர் தலைமையில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத் வெளியில் இருந்து ஆதரவு தருவதென்றும் முடிவில் உள்ளன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு என்னெவென்று தெரியவில்லை.   
முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள் 

1) துறைமுகம் - திருப்பூர் அல்தாப் ஹுசைன் 
2) வாணியம்பாடி - முன்னாள் எம்எல்ஏ எச். அப்துல் பாசித் 
3) நாகப்பட்டினம் - எம். முஹம்மது ஷேக் தாவூத் 

மமக போட்டியிடும் தொகுதிகள் 

1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
2)ஆம்பூர்
3) இராமநாதபுரம் 

SDPI போட்டியிடும் தொகுதிகள் (மொத்தம் 10. தற்போது அறிவித்திருப்பது தமிழகத்தில் 5, பாண்டியில் 1, மற்ற தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்) 

1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) 


எது எப்படியாயினும், சொன்னது போல் மமகவும், முஸ்லீம் லீக்கும் நேரடியாக மோதிக் கொள்ளாமல் வெவ்வேறு தொகுதிகளை பெற்று தேர்தலில் நிற்பது மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கிறது, ஆயினும் SDPI கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும் துறைமுகம் பகுதியில் எதிரெதிரில் போட்டியிடுவதும், இராமநாதபுரம் பகுதியில் மமகவும் SDPI யும் எதிரெதிரில் போட்டியிடுவதும் மனதிற்கு கவலை அளிக்கிறது. ஒற்றுமை வேஷம் எல்லாம் ஒரு கூட்டத்தை எதிர்த்து போஸ்டர் அடிப்பதற்காக மட்டும் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

உபரி கேள்வி: 

ஏற்கனவே கேட்டது தான், அதாவது முஸ்லீம் லீக் கட்சி நிற்கும் 3 தொகுதிகளில் SDPI மற்றும் மமக யாருக்காக பிரச்சாரம் செய்யும், அதைப் போல் மமக நிற்கும் 3 தொகுதிகளில் SDPI மற்றும் முஸ்லீம் லீக் யாருக்காக பிரச்சாரம் செய்யும். அதே போல் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சகோதரர் பாக்கர் அதிமுகவிற்கு தங்களுடைய ஆதரவு என்றும் முஸ்லீம் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்களுக்கே ஆதரவு என்றும் கூறியிருக்கிறார், இராமநாதபுரம், மற்றும் துறைமுகத்தில் யாருக்கு தங்களுடைய ஆதரவு என்பதையும் சகோதரர் பாக்கர் தெளிபடுத்துவாரா?

தோழமையுடன்
அபு நிஹான்

6 comments:

  1. Salaams 2 U, சகோ.அபுநிஹான்.

    //உபரி கேள்வி://---இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா
    தெரியலை...? உபரி கேள்வியா இது..?

    சுயேட்சையாகவும், எதிரெதிர் அணியிலும் தேர்தலில் நிற்கும்
    முஸ்லிம் கட்சிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டம்
    காணச்செய்து உடைத்தெறியும் கேள்வி அல்லவா இது?

    பதிவின் ஆணிவேர் கேள்வி இது.

    ReplyDelete
  2. வேடந்தாங்கல் கருன் : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. சகோதரர் முஹம்மத் ஆஷிக், சுட்டிக்காடியமைக்கு நன்றி. தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. //ஒற்றுமை வேஷம் எல்லாம் ஒரு கூட்டத்தை எதிர்த்து போஸ்டர் அடிப்பதற்காக மட்டும் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.//

    சரியாக சொன்னீர்கள். பார்ப்போம். போகப் போக நிலைமை எப்படி மாறுகிறதென்று.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர் சுவனப்பிரியன் அவர்களே

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...