Thursday 21 July 2011

Drunken Drive - ஒழிக்க என்ன வழி?

Dont drunk & Drive
தமிழ்நாட்டில் விபத்துகள் அதிமாகி கொண்டே வருகின்றன. அதை பற்றி தேவையான அளவு பல பதிவர்கள் எழுதியும் விவாதித்தும் விட்டார்கள். Drunken Drive என்று சொல்லக்கூடிய மது குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது கூடாது என்று மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது. 
மோட்டார் வாகன சட்டத்தில் 185 ஆம் விதியில் மது அல்லது போதைப் பொருளை உட்கொண்டு போதையில் வாகனம் ஓட்டினாலோ அல்லது ஓட்ட முயன்றாலோ அவர்க்கு சட்டரீதியாக கடுமையான தண்டனை தர வேண்டும். தண்டனை விதிப்பதற்காக அவர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவரிடம் செய்யப்படும் மூச்சு பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள மதுவின் அளவு 30 மில்லிகிராமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் இருப்பதைக் கண்டுபிடித்தால் முதன் முறையாக அவர் அந்த தவறைச் செய்திருந்தால் அவரை 6 மாதங்கள் ஜெயிலில் அடைக்க வேண்டும். அல்லது ரூ 2 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்க வேண்டும். அல்லது இந்த 2 தண்டனைகளையும் சேர்த்து விதிக்க வேண்டும். இதே குற்றத்தை அந்த நபர் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் செய்தால் அவர்க்கு 2 ஆண்டுகள் ஜெயிலில் தண்டனை விதிக்க வேண்டும். அல்லது 3 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். அல்லது 2 தண்டனையையும் சேர்த்து விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
மது உட்கொண்டிருக்கிறாரா என்று சோதிக்கும் காவல்துறை
அன்பான சகோ, சட்டம் மிக கடுமையாக தான் இருக்கிறது. இதை போல் எல்லா குடிமகன்களையும் இந்த சட்டத்தை பயன்படுத்தி காவல்துறை தண்டிக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

இது ஒரு புறமிருக்க, காவல்துறை இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் என்ன? 

TASMAC கடைகளில் வாகனத்தில் வந்து மது அருந்துபவர்களுக்கும், மது வாங்குகிறவர்களுக்கும் மது விற்கப்படாது என்று சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் Drunken Drive பண்ணுவதை குறைக்கலாம். அப்படி சொல்லாமல் அரசாங்கமே பார் நடத்த அனுமதி அளித்தால் குடிமகன்கள் மது அருந்தி விட்டு Drunken Drive செய்யத்தான் செய்வார்கள். இதை போன்ற Drunken Drive செய்து அதனால் விபத்து நேர்ந்தால் அரசாங்கம் தான் காரணம். அரசாங்கமே ஒரு விளைவுக்கு காரணகர்த்தாவாக இருந்து அந்த விளைவு நடந்தவுடன் அதற்கு தண்டனையையும் கொடுக்கிறது. ஆக அரசாங்கம் எதை முதலில் செய்ய வேண்டும் என்று தெரியாமல் செய்கிறது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான தண்டனை என்று சொல்லும் அரசாங்கம், மதுவை தமிழ்நாட்டில் முழுவதுமாக தடை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று போட்டு விட்டால் அரசாங்கத்தின் கடமை முடிந்து விட்டது என்று நினைத்து கொண்டிருக்கிறது. 

பொன்முட்டை போடும் வாத்தை அறுக்கவும் மனமில்லை. சட்டத்தையும் கடுமையாக இருப்பது போல் காட்ட வேண்டும். 

ஆண்டுவாரியாக டாஸ்மாக் மூலம் கிடைத்த வருமானங்கள்

2003-04 - 3,639 கோடி, 
2004-05 - 4,872 கோடி, 
2005-06 - 6,030 கோடி, 
2006-07 - 7,473 கோடி, 
2007-08 - 8,821 கோடி 
2008-09 - 10,601 கோடி 
2009-10 - 12,491 கோடி. 

அதாவது, 1983-ம் ஆண்டு வெறும் 183 கோடியாக இருந்த மது விற்பனை, இன்றைக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது. பணவீக்கம், விலை ஏற்றம் ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும்... தமிழ்க் குடும்பங்களில் அரசாங்க மதுபானம் எப்படி வெள்ளமாக ஓடுகிறது என்பது புரியும்! (http://tntjsalem.blogspot.com/2011/02/tasmac.html

இப்படி செய்வதனால் மெல்ல மனிதவளம் மக்கள் தொகையாக மாறிக் கொண்டிருக்கும் அவல நிலையை காண முடிகிறது. மக்கள் தொகை மற்றும் மனித வளம் பற்றி படிக்க  

அரசாங்கம் என்பது மக்களின் வளர்ச்சியில், மக்களின் உடல் ஆரோக்கியத்தில், மக்களின் நலனின் அக்கறை கொண்டு ஒவ்வொரு முடிவையையும் எடுக்க வேண்டும். மக்களை தீய வழியில் வழி நடத்தக்கூடிய எந்தவொரு திட்டமானாலும் அது எவ்வளவு நல்ல இலாபகரமான திட்டமானாலும் அதை அரசாங்கம் தொடங்கி வைக்கக்கூடாது. TASMAC என்பது அரசாங்கத்திற்கு மாபெரும் இலாபம் தரக்கூடிய விஷயமாக இருக்கலாம், அதனால் பட்ஜெட்டையே மாற்ற நினைக்கலாம். மக்களின் இரத்தத்தை உறுஞ்சி மக்களுக்காக போடப்படும் பட்ஜெட்டை யாரும் விரும்பவில்லை. 

மது அருந்துபவர்கள் TASMAC கில் மட்டும் அருந்துவதில்லை. வீட்டில் மது அருந்துபவர்கள், ஹோட்டலில், பப்பில், பார்ட்டியில் அருந்துபவர்களும் மது அருந்தி வாகனம் ஓட்டத்தான் செய்கிறார்கள். இவர்களை எப்படி தடுப்பது? ஆக முதலில் மக்களை கெடுக்கும் மதுவை ஓழித்துவிட்டு மது அருந்தி வாகனம் ஓட்டினால் சிறை என்று அரசாங்கம் சொல்லட்டும். 
மது அருந்திய வாகன் ஓட்டியால் விபத்துக்குள்ளான பெண் (உள்படம் - விபத்துக்கு முன் உள்ள ஒரிஜினல் முகம்)
மக்களை காப்பதற்கே அரசு, தவிர தவறுகளை செய்ய தூண்டி அதன் பிறகு மக்களை காக்கிறேன் என்று சொல்லி தண்டனை தருவது அல்ல. 

மது அருந்தி வாகனம் ஓட்டி அதனால் ஏற்படும் விபத்தை தடுக்கத்தான் அரசாங்கம் முயற்சி செய்கிறதே தவிர விபத்தை ஒருபோது ஒழிக்க முயற்சி செய்யவில்லை.

தோழமையுடன்
அபு நிஹான்

6 comments:

  1. ஊத்தியும் கொடுத்து குடிக்க கூடாதுன்னு சொல்றாங்களோ? :)

    பதிவு அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தீண்டாமை பெரும் குற்றம் என்று சொல்லும் அரசு பாப்பாரபட்டியை என்னசெய்ய முடிந்தது?

    சாதிகள் இல்லை என்று சொல்லும் அரசு, பள்ளிகளிலேயே சாதிசான்றிதழை கேட்பது போலத்தான் மதுவும்!

    ReplyDelete
  3. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ”அளவில்லாத கடன்கள்” தந்த ரிஸஷன் புரட்டிப் போட்டது என்றால், தமிழ்நாட்டை ‘டாஸ்மாக்’ நார்நாராகக் கிழித்துப் போட்டுவிடும்போல இருக்கு!!

    ReplyDelete
  4. சகோ ஆமினா,

    சரியாக சொன்னீர்கள் சகோ

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. சகோ மு. ஜபருல்லாஹ்,

    //தீண்டாமை பெரும் குற்றம் என்று சொல்லும் அரசு பாப்பாரபட்டியை என்ன செய்ய முடிந்தது?

    சாதிகள் இல்லை என்று சொல்லும் அரசு, பள்ளிகளிலேயே சாதிசான்றிதழை கேட்பது போலத்தான் மதுவும்!//

    சாதிகளை வைத்து நம் தலைவர்களுக்கு அரசியல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அந்த தலைவர்கள் ஆட்சியாளர்களானால் சாதியை ஒழிக்கவே நினைக்கமாட்டார்கள். ஏனென்றால் சாதியை ஒழித்து விட்டால் மக்களை தங்கள் நினைத்தது போல் பொம்மலாட்டம் ஆட வைக்க முடியாது.

    சரியான உதாரணம் சகோ

    ReplyDelete
  6. //அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ”அளவில்லாத கடன்கள்” தந்த ரிஸஷன் புரட்டிப் போட்டது என்றால், தமிழ்நாட்டை ‘டாஸ்மாக்’ நார்நாராகக் கிழித்துப் போட்டுவிடும்போல இருக்கு//

    நாட்டு மக்கள் எந்த நிலைமையில் போனால் என்ன? நம் நாடுக்கு தான் அதனால் அதிகமாக வருவாய் வருகிறதே என்ற எண்ணம் தான் இதற்கு காரணம். அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கிற்கு வழி செய்வோம் என்று கூறியவர்கள் கூட இன்று அம்மாவை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள்.

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...