Thursday 29 September 2011

இருதயம் காப்போம்

டாக்டர் அனுராதா கிருஷ்ணன்


இதயத் தன்மை உள்ளவர்களே! உடலினை உறுதி செய்யும் நான்காம் படி நிலையான கொழுப்பின் இரகசியங்களை இன்னமும் புரிந்து கொள்வோம். இருதயத்தின் இயங்கு தன்மை என்பது இரத்த குழாய்களின் மென் தன்மையைப் பொருத்தது என்று சென்ற இதழில்பார்த்தோம். அன்பர்களே! நமது உடலில் 90,000 மைல்களுக்கு இரத்த குழாய்கள் பிரிந்து, கிளைத்து விரிந்து கிடக்கின்றன. இத்தனை மைல்களில் எங்கு கெட்ட கொழுப்பின் பிசிர் தட்டினாலும் இருதயத்திற்கு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தத்தை நீக்க நமது இருதயம் சற்று கூடுதலாக தன் பிழிந்து உறிஞ்சும் செயலை அதிகப்படுத்தி நீக்க முயற்சிக்கும். நாம் உண்ணும் உணவில் எவ்வித மாற்றங்களும் செய்யாது இருந்தும், பழக்க வழக்கங்களில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதாலும், கெட்ட கொழுப்பானது இரத்த குழாய்களில் துரு ஏறுவதுபோல் படிமமாக (Sedimentation) ஏறத்தான் செய்யும். நாம் முன்னமே பார்த்தது போல் கெட்ட கொழுப்பு கடினத்தன்மை கொண்டது என்று தெரியும் தானே? இதனால் இரத்த குழாய்கள் கடினத்தன்மையாக மாறி சுருங்கி விரியும் தன்மையை படிபடியாக இழக்கின்றன. இப்படிப்பட்ட குழாய்களில் இருந்து இருதயம் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். இந்த அதிகப்படியான பிரயத்தனமே இரத்த அழுத்தமாக இரத்த குழாய்களிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் உணர்கிறோம். இதன் காரணமாக ஒருவித அவசரத்தனமும் பதட்ட நிலையும் நம்முள்ளே ஏற்படுகிறது. இதனால் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் நிலைக்கு ஆளாகிறோம். இந்த நிலையில் தான் உங்களுக்கு ஆட இருப்பதாக கண்டறிகிறார்கள். உங்கள் மருத்துவரும் உங்களுக்கு ஆட மாத்திரைகள் கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்தப் பிரச்சனை எப்போது தீரும் என்று நீங்கள் கேட்கும்போது, உங்கள் மருத்துவர் கூறும் பதில் என்ன தெரியுமா? “Long Life வாழவேண்டுமானால், Long Life BP மாத்திரைகள் சாப்பிட வேண்டும்” என்பதே! இதில் உண்மை இருக்கிறதா? அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


நண்பர்களே! உங்களுக்கு கொடுக்கப் படும் ஆட மாத்திரைகள் உண்மையில் உங்கள் இரத்த குழாய்களையோ அதில் உள்ள கெட்ட கொழுப்புகளையோ சரிசெய்வதில்லை. உங்கள் ஆட மாத்திரைகள் உண்மையில் உங்கள் தரமான இரத்தத்தை நீர்த்துப்போக செய்கின்றன. இரத்தம் நீர்த்துப் போவதால், உடலின் இரத்த தேவை (Demand) இருதயத்திற்கும் சேர்த்து அதிகமாகிப் போகிறது. இதனால் நம் இருதயம் இரத்தத்தை விரைவாக பாய்ச்ச வேகம் எடுக்கிறது. அப்படி வேகம் எடுக்க நம் இருதயத்திற்கு வலுவில்லை யாயின் இரத்த ஓட்டத்தில் தேக்க நிலை ஏற்பட்டு கழிவுகள் தேங்க வழியாகிறது.
மருத்துவர் அனுராதா கிருஷ்ணன்
இதன் பயனாய் உங்கள் கால்களில் நீர் கோர்த்துக் கொண்டு வீக்கம் காண ஆரம்பிக் கிறது. இப்படி நீர் கோர்த்துக் கொண்ட நிலைக்கு உங்களுக்கு நீர் பிரியும் மாத்திரைகள் கொடுக் கிறார்கள். அது உங்கள் உடலில் உள்ள நீரை மட்டும் தான் வடிய வைக்கிறது. நீரோடு உள்ள உடற்கழிவை நீக்குவதில்லை. இப்படி நீர் பிரிக்கப்படுவதால் கழிவுகள் கெட்டிப்பட ஆரம்பித்து சிறுநீரகங்களை வறட்சி நிலைக்கு கொண்டு செல்கின்றனர். நண்பர்களே? ஒரு பக்கம் BP ஐ குறைக்க ஆட மாத்திரைகள் மூலம் இரத்தத்தை நீர்த்துப்போக (Dilution) செய்கிறார்கள். இன்னொரு பக்கம் கால் நீர் வடிய மாத்திரைகள் கொடுக்கிறார்கள். உங்கள் உடலோடு மற்றவர்கள் விளையாடும் விபரீதம் புரிகிறதா?

உங்கள் இருதயம் வலுவானதாக இருப்பின், கடினமாகிப் போய்விட்ட இரத்த குழாய்களில் இருந்து இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ள அதிகமாக உழைக்கத் தொடங்குகிறது. உண்மையில் உங்கள் இருதயம் பாழ்பட்ட இரத்தக்குழாய்களின் கடினத்தன்மையை மீறி சிறப்பாக செயல்பட்டு உங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இருதயத்தை தட்டிக் கொடுப்பதற்கு பதிலாக இரசாயன மாத்திரைகள் மூலம் கண்டிக்கச் செய்வது நியாயமா? உண்மையில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இரத்த குழாய்களில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்லக் கொழுப்பை கொடுத்து, அவற்றை பழையபடி இலகுவாகவும் இளமைத் துடிப்புடனும் இயங்கச் செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் எவ்வளவு காலம் BP மாத்திரைகளும், இருதய மாத்திரைகளும் சாப்பிட்டாலும் BP கட்டுக்குள் அடங்காது.

நண்பர்களே! உங்கள் இரத்த குழாய்களில் 70% அடைப்பு ஏற்படும் வரை உங்கள் வலுவான இருதயம் சமாளித்துக் கொள்ளும். ஆனால் 70% அடைப்பைத் தாண்டும் போது உங்களுக்கு லேசான இருதய அடைப்பு (Heart attack) ஏற்படும். நாம் இப்போது தான் அவசரமும் ஆபத்தையும் உணர்ந்து மருத்துவமனைக்குப் போகிறோம். இந்த நிலையில் கூட உங்கள் இரத்தக் குழாய்களில் படிந்துவிடட கெட்டக் கொழுப்புகளை நீக்கும் செயல் செய்யப்படுவ தில்லை. உங்களுக்கு உண்மையில் நடப்பது வேறு மருந்துகளால் உங்கள் இரத்தக் குழாய்கள் ஊரப்போடப்பட்டு ஊறுகாய் போல் பதப் படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் இரத்த குழாய்கள் தளர்ச்சி (கவனிக்கவும் தளர்வு அல்ல தளர்ச்சி) அடைகிறது. உங்கள் உடல் பாதிப்பு நிலையை மூளைத் தெரிவிக்கும் நரம்புகளை தளர்ச்சியடைய வைக்கிறார்கள். இதனால் மூளையும் பிரச்னை எதுவும் இல்லை என்று இருதயத்தை அதிகப்படி வேலை வாங்குவதை குறைத்துக் கொள்கிறது. இதன் பயனாய் நீங்கள் பெயருக்கு உயிருடன் இருக்கவும், நடை பிணமாய் இயங்கவும் தயார் செய்யப்படுகிறீர்கள். இப்போது உங்களுக்கு BP இருக்காது ECG-யும் பரவாயில்லை என்று காட்டும். ஆனால், உங்களுக்கு வெறுப்பும், விரக்தியும் உடல் சோர்வும், கால்களில் நீர்கோப்பும் அடிக்கடி ஏற்படும்.

நண்பர்களே! நீங்கள் அவசரம் என்று தான் மருத்துவமனைக்குப் போகிறீர்கள். அவர்களும் உங்கள் ஆபத்தை உங்கள் மூளை உணராத அளவில் பார்த்துக் கொள்கிறார்கள். உங்களை வீட்டுக்கு அனுப்பும்போது ஒன்றை தவறாமல் சொல்லி அனுப்புவார்கள். “இரண்டாவது அட்டாக் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று. நண்பர்களே நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அப்புறம் எதற்காக ஆபத்து என்று மருத்துவமனைக்குப் போனோம்?

நண்பர்களே! உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாமல் உங்கள் உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல், உங்களை எவராலும் காப்பாற்ற முடியாது. நீங்கள் மாறவில்லை யென்றால் உங்கள் இருதய நோய் உங்களை வேறு மாதிரி மாற்றிவிடும். உங்கள் சம்பாத்தியம் அறுவை சிகிச்சைக்காக கரைந்து போக நிற்பீர்கள்.

4 comments:

  1. சகோதரர் ஹாஜா மைதீன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நல்லதொரு பகிர்வு...ஜசாக்கல்லாஹு க்ஹைர்

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    BP மாத்திரைகள் பற்றி இப்போதுதான் புரிந்தது. இவற்றை சாப்பிடுவோருக்கு காலில் நீர் கோர்த்து வீங்குவதும்... நீர் பிரிய மாத்திரைகளும்... அப்பப்பா... பல விஷயங்களை புரியவைத்தது இந்த இடுகை. இதில் அலோபதி மருத்துவத்தின் கையாலாகத்தனத்தையும் சமாளிப்பையும் தொளுரித்தது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி அபுநிஹான்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    BP மாத்திரைகள் பற்றி இப்போதுதான் புரிந்தது. இவற்றை சாப்பிடுவோருக்கு காலில் நீர் கோர்த்து வீங்குவதும்... நீர் பிரிய மாத்திரைகளும்... அப்பப்பா... பல விஷயங்களை புரியவைத்தது இந்த இடுகை. இதில் அலோபதி மருத்துவத்தின் கையாலாகத்தனத்தையும் சமாளிப்பையும் தொளுரித்தது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி அபுநிஹான்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    நல்ல பயனுள்ள பதிவு சகோ தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன் சகோ

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...