Sunday 12 February 2012

காங்கிரஸின் இட (வாக்கு) ஒதுக்கீடு


நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமுதாயத்தினரை முன்னேற்றும் விதமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்று 23 டிசம்பர் தேதி நாளிட்ட செய்திகளில் வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. 


என்ன அக்கரை சிறுபான்மை சமூகத்திடம் என்று கேட்கிறீர்களா? நாட்டின் மொத்த முஸ்லீம்களும், சிறுபான்மையின சமூகமும் சேர்ந்து போராட்டம் நடத்தினாலும் கொடுக்காத இட ஒதுக்கீட்டை இப்போது கொடுக்க காரணம் ஐந்து மாநில தேர்தலை கணக்கில் வைத்து தான். இப்போது கொடுத்திருக்கும் 4.5% இட ஒதுக்கீடும் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களான முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் அனைவருக்கும் சேர்த்து கொடுக்கப்பட்டதே. 

இந்த இட ஒதுக்கீடு விரைவில் மத்திய அரசின் உத்தரவு மூலம் உடனடி அமலுக்கு வரும் என்றும் மதம் மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது என்றும் கூறப்பட்டது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் சொன்ன போதெல்லாம் தோணாத இட ஒதுக்கீடு இப்போது மட்டும் தோண்றியதென்றால் அதற்கு காரணம் மாநிலத் தேர்தல்கள் தான் என்பதை தான் நிரூபிக்கிறது இந்த இட ஒதுக்கீடு கோஷம். 
முஸ்லீம்களுக்காக போராடும்(??) சல்மான் குர்ஷீத்
முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்பது சதமாக உயர்த்தப்படுமென்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷீத் கூறியிருப்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பிய போது, அதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷீத் "தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டது தான் அது" என்று கூறியுள்ளார். 

தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டது என்றால் அதை செயல்படுத்துவதற்கு என்ன தயக்கம்?. இப்போது கூட இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று தான் சொல்லி இருக்கிறீர்கள், எப்போது உயர்த்தப்படும் , எவ்வளவு சதவிகிதம் உயர்த்தப்படும் என்று சொல்லவில்லை. 

கேக்கிறவன் கேனையனா இருந்தா எலி ஹெலிகாப்டர் ஓட்டுதுன்னு சொல்லுவீங்களே??

வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு கேட்கும் நிலை போய் இட ஒதுக்கீடு எனும் அஸ்திரத்தை எடுத்து கொண்டு ஓட்டு (பிச்சை) கேட்க தொடங்கி விட்டனர்.

5 comments:

  1. சலாம் சகோ.

    அரசியல்வாதிகள் வேறெதைச் சொல்வார்கள்.

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.ஹாஜா,
    ///இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது///

    அதாவது, 100 வேலை இடம் இருந்தால்,
    அதில் 27 பிற்பட்டவருக்கு.

    அதில் 4.5 இடம் சரி, (5 என்றே சொல்வோம்) சிருபான்மையோருக்கு என்றால்...

    பஞ்சாப்பில் ஒரு நேர்முகத்தேர்வு நடக்குமாயின், அந்த ஐந்து பெரும் சீக்கியர்களாகவே இருந்து விடுவார்களா..? முஸ்லிம்கள் கேட்டால் உங்கள் கோட்டாவில் ஐந்து பேருக்கு தந்து விட்டோம் என்பார்களா..?

    இல்லை அந்த 4.5 இல் ஒவ்வொரு சமயத்தவரும் தனித்தனியாக இத்தனை இத்தனை என்று ஏதும் ஷரத்து உள்ளதா..?

    'இப்போது இட ஒதுக்கீடு இல்லாமல் இருக்கும் நிலையில், 1% அல்லது 2% தான் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர்... எனவே, முஸ்லிம்களுக்கு மட்டும் 10% இடஒதுக்கீடு தரவேண்டும்' என்று மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிஷன் எல்லாம் பரிந்துரைக்க...

    அதை விட்டுவிட்டு, சிறுபான்மைக்கு இட ஒதுக்கீடு எதற்கு தருகிறார்கள்..?

    ஆக, கடைசியில், இடஒதுக்கீடு இல்லாமல் கிடைத்து வந்த அந்த 2% க்கும் ஆப்பு வைக்கிறார்களா...?

    என்ன அரசியல் இது..?
    புரியவில்லையே..!

    ReplyDelete
  3. சகோ வாஞ்சூரார்,

    தங்களின் வருகைக்கும், சுட்டிக்கும், நன்றி.

    சகோ சுவனப்பிரியன்,

    அரசியல்வாதிகளின் செயல்களை தோலுரிப்பதற்காக எழுதப்பட்ட பதிவு தான் சகோ.

    ReplyDelete
  4. அலைக்கும் ஸலாம் சிட்டிசன் ஆஃப் வேர்ல்டு,

    அப்ப இட ஒதுக்கீடு கொடுத்தது இருக்கிற இட ஒதுக்கீட புடுங்கிறதுக்குத்தானா? நல்லா இருக்குய்யா உங்க இலகுன(?) மனம்?? இதுக்குத்தான் இவ்வளவு சீனா? அப்படியானால் சிறுபான்மை இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களை நீக்க சொல்லி முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்போம்.

    இன்று இல்லை என்றாலும் நம் சமுதாயம் என்றாவது பயனடையும் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  5. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...