Wednesday 17 October 2012

நீங்க சென்னையா தமிழ் நாடா?

எங்கு திரும்பினாலும் பவர் கட் பேச்சு தான். பவர் ஸ்டார் கைது பற்றி பரபரப்பு செய்தி பற்றி கொண்ட போது அதிகம் பற்றி கொண்டு எரிந்தது (பின்னே, இரண்டு பவரையும் ஒரே நேரத்துல கட பண்ணுனா சும்மா விடுவாய்ங்களா:)). சமீபத்தில் வந்த செய்திகளில் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் அறிவித்த / அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடந்து கொண்டு இருக்கின்றன சென்னையை தவிர. அப்ப சென்னை தமிழ்நாட்டுல இல்லையா?

DC & AC
 மொபைல் போன் வந்த புதிதில் நீங்கள் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு சென்றால் ரோமிங் என்பார்கள். சென்னையை விட்டு காஞ்சிபுரம் சென்றாலும் செங்கல்பட்டு சென்றாலும் ரோமிங் என்பார்கள். நம்பர் கேட்டால் சொல்லி விட்டு சென்னை நம்பர், தமிழ் நாட்டு நம்பர்னு நினைச்சிற போறிங்க அப்படின்னு சொல்லுவாய்ங்க, சென்னை நம்பருக்கு 0 முன்னாடி சேர்த்து தையல் பண்ண வேண்டும் என்பதற்காக. மொபைல் யுஸ் பன்னாதவிய்ங்களுக்கு ஒரே குழப்பமாயிடும் என்னடா இது, தமிழ்நாட்டு மொபைல் நெட்ஒர்க்ல இருந்து கிட்டே சென்னை நம்பர், தமிழ் நாடு நம்பர்னு சொல்றாயங்கலேன்னு. பிறகு மொபைல் எல்லோரிடத்திலும் பிரபலமாக பிரபலமாக மொபைல் ஜோனை இரண்டா பிரிச்சு வச்சிருக்காங்கன்னு விளங்குச்சு. அத மாதிரி இப்போ மின்சாரத்திலையும் சென்னையையும் தமிழ் நாட்டையும் இரண்டா பிரிச்சு வச்சு பாடா படுத்திராய்ங்கன்னு நினைக்கும் போது, சென்னைல இருக்குறவுங்களுக்கு வந்தா வேர்வை சென்னையை தவிர மத்த ஊர்ல இருக்குறவுங்களுக்கு வந்தா அது மினரல் தண்ணின்னு நினைக்குராய்ங்கலோனு தோணுது.

சென்னைல மட்டும் தான் என்னமோ வியாபாரம் நடக்குறா மாதிரியும், மத்த இடத்துல எல்லாம் வியாபாரமே நடக்காது போலவும் தமிழக அரசு நடந்து கொள்வது மிகவும் கண்டனத்துக்குரியது.
Night in chennai

தமிழகத்தில் வியாபாரம் சென்னையை தவிர மற்ற இடங்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்கிறது என்பதும், அதனால் அரசாங்கத்திற்கு எவ்வளவு இலாபம் கிட்டுகிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும். மின்சார துண்டிப்பால் இந்த வருமானம் தடைப்பட்டு அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுவதும், அதன் பலனாக மக்கள் மீதே அந்த சுமை ஏற்றப்படுவதும் ஜனநாயகத்துக்கே உரித்தான சட்டம் :(
 
தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு கப்பம் கட்டும் நிறுவனமும்  அந்த கப்பத்துக்காக உழைக்கும் மக்களும்  என்பதை மறந்து விட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

சில மாவட்டங்கள் மற்றும் அங்கு இருக்கும் தொழிற்சாலைகள் 
 
மதுரை மாவட்டத்தில் ரப்பர், ரசாயனம், கிரனைட் தொழிற்சாலைகள்
 
திருச்சி மாவட்டத்தில் BHEL, Ordnance Factory, விகேயென் தொழிற்சாலை, பொன்மலை தொடர்வண்டி பணிப்பட்டறை, TSRM, AMMAN போன்ற முறுக்கு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பல குட்டி எஞ்சினியரிங் தொழிற்சாலைகள், ?
 
திருப்பூர் மாவட்டத்தில் துணி சம்பந்தப்பட்ட தொழில் மற்றும் பல குட்டி எஞ்சினியரிங் தொழிற்சாலைகள்
 
கோவை மாவட்டத்தில் ஜவுளி வரப்படம், ஆட்டோ உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்
 
வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
 
நாகை மாவட்டத்தில் ONGC தொழிற்சாலை
 
கொடைக்கானல் ஊட்டி, தேனீ போன்ற பகுதிகளில் தேயிலை தொழில்கள், ஏலக்காய், மிளகு உற்பத்தி தொழில்கள்
 
தஞ்சை மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்படும் விவாசாய தொழில்கள் மற்றும் குருங்குளம் சர்க்கரை ஆலை, திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ள பல குட்டி இஞ்சினியரிங் தொழிற்சாலைகள் மற்றும் லேத் தொழிற்சாலைகள்.

காவேரி ரியல் எஸ்டேட் மாவட்டங்கள் :
 
ஆத்துல தண்ணியும் விடாமா? போர் போட்டு மோட்டார் செட் பண்ணி வச்சா அதன் மூலமா தண்ணீர் பாய்ச்சிறதுக்கு மின்சாரமும் கொடுக்காம, மழைய மட்டுமே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் விவசாயிகள் ஒரு பக்கம்), இதன் காரணமா விவசாயமே வெறுத்து போய் மருதம் என்று சொல்ல கூடிய வயலும் வயல் சார்ந்த இடங்களில் வயலையே பார்க்க முடியவில்லை. முன்பெல்லாம் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் போது வயல்வெளி இயற்கை அழகை கண்டு கொண்டே நேரம் போவது தெரியாமல் தஞ்சாவூர் சேர்ந்து விடலாம். ஆனால் அப்போது பார்த்து ரசித்த இடங்களெல்லாம் இப்போது மனைகள் விற்பனைக்கு என்று பலகையில் எழுதப்பட்டு பார்ப்பதற்கு கஷ்டமாக போகும் தூரத்தை கூட்டி காட்டுகிறது.

"காவேரி டெல்டா மாவட்டங்கள் இப்போது ரியல் எஸ்டேட் மாவட்டங்களாகி கொண்டிருப்பதற்கு" அரசாங்கத்தின் இது போன்ற நடவடிக்கைகளும் காரணமாக அமைகிறது. விவசாயம் பன்னவே வழி இல்லை, இதுல விலைவாசிய வேற ஏத்தி விட்டா விவசாயத்த தவிற வேறு தொழில் தெரியாதவர்கள் என்ன தான் செய்வார்கள். "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி, ஆனா விவசாயிக்கு திரும்பிய பக்கமெல்லாம் இடி விழுது".

பெரிய கொடுமை என்னென்னா தண்ணீர் கொடுக்காம பிரச்சனை பண்றவுங்க கூட தஞ்சாவூர் பொண்ணி அரிசி தான் வேணும்னு கேட்டு வாங்குறது தான் :( தஞ்சாவூர் பொண்ணி அரிசி வேணும்னு கேட்கருவிய்ங்க தந்ஜாவூர்ல என்ன நிலைமைன்னும் விசாரிச்சுக்கங்க, ஏன்னா பின்னடி பொன்னியோ, PT அரிசியோ கிடைக்காம பிட்சா, பர்கர், கட்லட், ஸ்பிரிங் ரோல் மட்டுமே திங்க வேண்டி இருக்கும். 
 
சில நேரத்துல நம்ம குஜராத்துல இல்லாம தமிழ்நாட்டுல இருக்கோமேன்னு சந்தோஜப்பட (No spelling mistake) வேண்டி  இருக்கு. 
 
  • ஏன்னா குஜராத்துல ஒரு அமைச்சரு விவசாயிகள் தற்கொலை செஞ்சத பத்தி கேட்டா அது அவர்களின் விதி என்கிறார். பார்க்க 
  • இன்னும் விவசாயிகளின் நிலைமை பற்றி ஆளும் வர்க்கத்தினர் முன்னுக்கு முரணான தகவலை சொல்றாய்ங்க. 
விவசாயிகள் தவிர்த்து பிளம்பர்கள், தச்சு வேலை போன்ற கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர்கள் எல்லாரும் தங்களுடைய வேலைக்கு மின்சாரத்தை நாடியுள்ள நிலைமையில் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மின்சாரத்தை ஒரு நாளைக்கு பல மணி நேரம் சென்னையை தவிர மற்ற இடங்களில் துண்டிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

சென்னைக்கு மட்டும் கொடுக்க கூடிய முக்கியத்துவத்தை மற்ற மாவட்டங்களுக்கும் கொடுங்கள், மற்ற மாநிலத்தாரையும் மனிதர்களாக மதியுங்கள்

இதையெல்லாம் படித்து விட்டு சிறிது நேரத்தில் சயிப் அலி கானுக்கும், கரீனா கபூருக்கும் கல்யாணம் ஆயிடுச்சாமே என்றோ? அல்லது மாற்றான் படம் சுமாரா தான் இருக்காம் என்றோ நீங்கள் பேசி கொண்டால் கன்பார்மா நீங்க தமிழக பகுதியை (இது சென்னையையும் சேர்த்து :)) சேர்ந்தவர்கள் தான். ஏனெனில் இந்த மறதி தான் தமிழக அரசியலுக்கு பெரும் முதலீடு.

இன்று வெளியிட்ட செய்தியின் படி ஆழியாறில் கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படியில் தான் என்றாலும் தமிழகமே வாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது கொஞ்சம் ஓவர் தான் !! சுப்ரிம் கோர்ட் சொன்னாலும் நிறைவேற்ற மாற்றோம் என்று சொன்ன சிப்பாய்கள் இதிலிருந்து பாடம் கற்று கொள்வார்களா?
 
நம்மால் முடிந்தது : 
 
முடிந்த வரை குறைவாக மினாரத்தை உபயோக படுத்துவோம். மற்றும் அதை போல் உபயோகிக்க சொல்லி மற்றவர்களையும் கூறுவோம்.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.
மரம் வெட்டப்படுவதை தடுப்போம்.
விவசாய நிலம் இருந்தால் விவசாயம் செய்வோம் அல்லது விவசாயம் செய்பவர்களிடத்தில் நிலத்தை கொடுத்து விவசாயம் செய்ய சொல்வோம்.

மரம் நடுவது சம்பந்தமாக இஸ்லாம் சொன்னது:
 
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல் : புகாரி 
 
டிஸ்கி : சென்னையை பற்றி குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். நானும் சென்னையில் தங்கி இருந்தவன் என்ற வகையில் சென்னையில் எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் சென்னையும் தமிழ் நாட்டில் இருக்கிறது என்பதை சொல்லவே இந்த பதிவு.

தோழமையுடன்
அபு நிஹான்

8 comments:

  1. சென்னையிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் நாளை முதல் இரண்டு மணி நேரம் பவர் கட்டாம் சார்!

    ReplyDelete
  2. புதிய தகவல்களுக்கு நன்றி....

    EllameyTamil.Com

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மாஷா அல்லாஹ் நல்லதொரு பதிவு. முதல் படம் பார்த்து செம சிரிப்பு :-)

    ReplyDelete
  4. ஸலாம்

    நல்ல பதிவு ...

    ReplyDelete
  5. // சென்னையை பற்றி குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். நானும் சென்னையில் தங்கி இருந்தவன் என்ற வகையில் சென்னையில் எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்ற //

    இல்லை சகோ.. சென்னைக்கு மின்சாரம் கொடுக்க ஏதோ காரணம் இருக்கு.. நான் யோசித்த வரை எல்லா அலுவகங்களின் தலைமையும் சென்னையில் தான் இருக்கு.. ஆட்சி சீராக நடக்க அவற்றின் செயல்பாடுகள் இன்றியமையாதது என்றே தோன்றுகிறது... அதே போல் பண்ணாட்டு கம்பனிகள் ஒப்பந்தம் போடும் பொழுதே தடை இல்லா மின்சாரம் தர வேண்டும் என்றே போடுவார்கள்... ப்ளஸ் ஒப்பந்தம் போட்டாச்சே இனி மீறுவோம் என்றும் மீற முடியாது.. அப்படி செய்தால் வர இருக்கும் புது கம்பெனிகள் வராமலே போய்விடும்.. நமது மாநிலத்திற்க்கு கெட்ட பெயர் வந்துவிடும்... சென்னைக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது நாம் பிட்ஸா, பர்கர் சாப்பிட ஆசைப்பட்டதின் விளைவேயாகும் என்பது என் கருத்து... அதாவது முதலாளித்துவ கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டதற்க்கான பரிசாகவே காண வேண்டும்...

    ReplyDelete
  6. சென்னையில் முதல்வர் இருக்காங்கோ! மந்திரிகள் இருக்காங்கோ! வெளி நாட்டு நிறுவனம் இருக்குங்கோ!
    இவர்களும் மற்றவைகளும் உங்கள் ஊரில் இருந்தாங்கன்னா உங்க ஊரிலும் மின்சாரம் கிடைக்குங்கோ!!
    மக்கள் பாண்டிசேரிக்கும் மற்றும் காரைக்காலுக்கும் போறாங்கோ 'தண்ணீ 'அருந்த அல்ல அங்கே மின்சாரம் கிடைக்குதாம்.
    உங்களுக்கும் நமக்கும் ஒரு ஆசை சென்னையில் பத்து நாட்கள் மின்சாரம் கிடைக்காமலும் மற்றும் மின்சாரம் சேமித்து தரும் சாதனங்கள் வேலை செய்யாமலும் போக வேண்டும் . அப்பொழுது தமிழ்நாடு மக்கள் படும் துயரம் தெரியும்.

    ReplyDelete
  7. //இல்லை சகோ.. சென்னைக்கு மின்சாரம் கொடுக்க ஏதோ காரணம் இருக்கு.. நான் யோசித்த வரை எல்லா அலுவகங்களின் தலைமையும் சென்னையில் தான் இருக்கு.. //

    சிராஜ் சென்னை வாசி என்பதால் ஆதரவு தெரிவிப்பதற்கு கண்டனம் :-)

    ReplyDelete
  8. தங்களின் சமூகத்தின் ஜாலி அவதி அலசல் நல்லாத்தான் இருக்கு ..

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...