Saturday 28 March 2015

நேர்மையின் பரிசு என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்க ஒரு அரசாங்க வேலையுல இருக்கீங்க, பெயர் வேணாம். நல்ல நேர்மையான அதிகாரியா இருக்கீங்க, தனியாளா இருந்த உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாய்ங்க. இது வரை இருந்த நேர்மைக்கு லைட்டா சோதனை வருது. மனைவி லேசா ஆரம்பிக்கிறாங்க, அவுங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறீங்க. ஊர் உலகத்துல இல்லாததானு சொல்றாங்க, அப்படியும் அவுங்க கிட்ட சொல்லி அவுங்க மனச மாத்துறீங்க. இலஞ்சம் வாங்காததால மிரட்டல் வருது. லைட்டா பயமா இருந்தாலும் சமாளிக்குறீங்க. பின்ன குழந்தை பொறக்குது. அந்த குழந்தைக்காகவாவது மாறுங்கன்னு சொல்றாங்க குடும்பத்தினர். எப்படிம்மா தப்ப சரினு இவுங்களால சொல்ல முடியுதுனு அம்மாகிட்ட அழுது புலம்புரீங்க. பொழைக்க தெரியாதவனா இருக்கியப்பா, இந்த காலத்துலையும் பிள்ளையை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சிருக்க என்று ஏச்சுகளும், பேச்சுகளும் வருது. இருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியா இருக்கீங்க. இதுவெல்லாவற்றையும் தாண்டி இலஞ்சம் வாங்காததால ஊர் மாற்றம் பணி மாற்றம்னு ஊர் ஊரா சுத்துறீங்க. யார் வாய அடைச்சாலும் மனைவியும், பிள்ளையும் ஊர் ஊரா மாறி / நாறி போறத விரும்பாம தினம் தினம் கரிச்சு கொட்டுறாங்க. 

பிள்ளைக்கு என்ன கஷ்டம்னு கேட்குறீங்களா, சில சமயம முழுஆண்டு பரிட்சை முடிஞ்ச உடனே மாற்றுதலுக்கான ஆணை வரும், பல சமயங்களில் காலாண்டு, அரையாண்டு பரிட்சைக்கு தயாராகும் போதே மாறுதல் வந்து விடும். புதிய இடத்துக்கு பிள்ளையை அழைத்து கொண்டு சென்றால் படிப்பு பாழாகி விடும்னு நினைச்சு தனியா வீடு எடுத்து ஹோட்டல்ல சாப்புடுறிங்க. இப்படித்தான் நேர்மையான அதிகாரிகள் தினம் தினம் செத்து செத்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்படி பிடி கொடுக்காததற்கு காரணம் என்ன? ஆமா பெரிய காரணம் இதுலாம் பார்த்தா உலகத்துல வாழ முடியுமா சார்னு நீங்க கேட்குறது புரியுது. இப்படித்தான் வாழ வேண்டும்னு சிலரும், எப்படியாவது வாழலாம்னு பலரும் நினைக்கறதுனால தான் மனுஷன் கடைசி வரைக்கும் தனக்கு புடிச்சா மாதிரி வாழவே முடியாம போய்டும், இவன் தப்பா நினைச்சுக்குவான், அவன் பொழைக்க தெரியாதவன்னு சொல்லுவாய்ங்கனு நினைச்சு கடைசி வரைக்கும் உலகத்தோட ஒத்து போறேன்னு சொல்லியே நமக்கு புடிச்ச வாழ்க்கையை வாழ முடியாமையே போயிடுறோம்.

நேர்மை - இதை தள்ளி இருந்து பார்த்தால் இணிக்கும், ஆனால் நமக்கென்று வரும்போது தான் இதன் வலி புரியும். ட்ரான்ஸ்ஃபர் என்று சொல்ல கூடிய பணிமாற்றம் / இட மாற்றம் நமக்கு தெரியும், ஆனால் அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை பற்றி நமக்கு தெரியுமா? இட மாற்றத்தால் அதிகாரிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பல. பிள்ளைகளுக்கு பள்ளி மாற்றம், அப்போது தான் அந்த ஊர் மற்றும் மக்களின் பழக்கம் கிடைத்து இருக்கும், அப்போது தான் வாழ்க்கை செட்டிலாகி ஓடி கொண்டிருக்கும். அந்த நேரத்தில் பணி மாற்றம் / இட மாற்றம் வந்தால் மறுபடியும் புதிய ஊரில் அ, ஆ என்று ஆரம்பிக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க பலருக்கு ஊர் கடைக்கோடியில் போஸ்டிங் கொடுத்து பள்ளிக்கு போக வேண்டுமென்றாலே பல கிலோமீட்டர்கள் கடந்து செல்ல வேண்டிய நிலைமை.

இது உணர்த்தும் பாடம் ஒன்று தான் ஒத்துப்போ இல்லையானால் ஒழிந்து போவாய். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாமல் எத்துனை தடவை இடமாற்றம் / பனி மாற்றம் செய்தாலும் அஞ்ச மாட்டோம் என்று சொல்லக்கூடிய “சகாயம்”கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு சகாயம் நமக்கு கண்ணுக்கு தெரிகிறார். பல “சகாயம்”கள், தெரியாமல் இருந்து கொண்டு அழுது கொண்டு, புலம்பி கொண்டு, மனைவி மக்களிடம் பிழைக்க தெரியாதவன் என்ற பெயரை வாங்கி கொண்டு, உற்றார் உறவினர்களிடம் ஏச்சு பேச்சுக்களை வாங்கி கொண்டு இறுதி வரைக்கும் இப்படியே இருக்க வேண்டும் இறைவா என்று இறைஞ்சி கொண்டிருப்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். இங்கு நாம் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறார்களா? நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.

சரி நம்மால என்ன செய்ய முடியும்னு யோசிக்கிறீங்களா? உங்களுக்கு தான் இந்த பதிவு.

இலஞ்சம் நீங்கள் நினைத்தாலும் நான் நினைத்தாலும் ஒழிக்க முடியாது ஆனால் நாம் நினைத்தால் தடுக்கவாவது முடியும். அரசாங்க வேலையாக சென்றால் முடியும் வரை (முடியும் வரை என்பது உங்களின் நேர்மையான மனசாட்சியை பொறுத்தது) நேரான வழியில் சென்று குறுக்கு வழியை தேடாமல் அலைச்சலுக்கு அலுப்பு படாமல் சிபாரிசுக்கு ஆள் தேடாமல் (சிபாரிசும் இலஞ்சமே) நேர்மையாக நடப்போம். அப்படி நடந்து அடுத்தவர்களுக்கும் அதை சொல்லி புரிய வைப்போம். வாழும் வரை நேர்மையாக நடந்தோம் என்ற ஒரு நிம்மதியாவது நமக்கு கிடைக்கும். இந்த சமுதாயம் கெட்டு, சீரழிந்து மேலும் சீரழிய நாமும் காரணமில்லை என்ற நம்பிக்கையோடு இந்த உலகை பிரிவோம்.

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)


தோழமையுடன் 
அபு நிஹான்

4 comments:

  1. நல்ல சிந்தனை

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை, தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  3. நேர்மையாக இருப்பது சவால் தான், ஆனாலும் சுவையானது ...

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை. நேர்மைக்காக அலைக்கழிக்கப்படும் ஊழியர்கள் நிலை மிகப் பரிதாபம்.

    அதேபோல, தமக்கு ஒத்துழைக்காத ஊழியர்களைப் பழி வாங்க, சம்பவங்களை உருவாக்கி, அவர்களின்மீது களங்கம் ஏற்படுத்துவதும் இன்று நடைமுறையில் உள்ளது. தேவையற்ற வழக்குகள் போடுவதும் அதில் ஒன்று.

    அதனாலேயே அரசு வேலையைவிட தனியார் வேலை அல்லது வெளிநாட்டு வேலைகளை நாடி விடுகின்றனர் சிலர்.

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...