Wednesday, 9 February 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 4

to prove patriotism
சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3

கல்வித் துறையில் - பள்ளிகளில் முஸ்லீம் விரோத போக்கு:
 
முஸ்லீம் விரோத போக்கு கல்வித் துறையில் தொற்றி இருக்கிறது என்பதை நினைக்கும் போது தான் மனம் மிகுந்த வேதனைப்படுகிறது. ஏற்கனவே பள்ளிகளில் வரலாற்று பாடங்களில் முஸ்லீம்களுடைய உண்மையான தேசபக்தியை வெளிகாட்டாமல் விட்டதில் ஆரம்பித்து, பல வரலாற்று நிகழ்வுகளை மறைத்தது வரை முஸ்லீம் விரோத போக்கை நடத்திக் காண்பித்ததை, நடத்திக் கொண்டிருப்பதை அனைவரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. 
பள்ளியில் மாணவர்களுடைய வாழ்க்கையை செதுக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள், அவர்கள் தான் வருங்கால இந்தியாவின் தூண்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு பள்ளியில் fashion show என்ற ஒரு நிகழ்ச்சியில் டாக்டர், வழக்குறைஞர், காவல்துறை அதிகாரி, தீவிரவாதி போன்ற வேஷங்களை குழந்தைகள் அணிய வைத்து அழகு(?) பார்த்தனர். அதில் தீவிரவாதி என்று சொல்லக்கூடிய வேஷத்திற்கு தொப்பியும், தாடியும் வைத்து முஸ்லீம்கள் மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியது முஸ்லீம் விரோத போக்கின் உச்சகட்டம். 

ஆக ஒரு முஸ்லீமோ அல்லது முஸ்லீம் இயக்கமோ தங்களின் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவதை விட்டும் இதைப் போன்று சம்பவங்கள் எங்கு நடக்கின்றது என்று பார்த்துக் கொண்டும் அதற்கு கண்டனம் தெரிவித்து கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு மாற்று சமுதாயத்தை மாதிரி-தீவிரவாதியாக காட்டினால் சம்பந்தப்பட்ட சமுதாயம் அறிக்கைகள் விட்டுக் கொண்டும், கண்டனப் பேரணி நடத்திக் கொண்டும் இருக்காது என்பது உலகறிந்ததே. யாரையும் எந்த சமூகத்தையும் இப்படி சித்தரிக்க கூடாது என்பது எமது நோக்கம். 

உதாரணத்திற்கு கடந்த செப்டம்பரில் டெல்லியில் நடந்த மாநில டிஜிபிக்கள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காவி தீவிரவாதம் குறித்து பேசியதையும், பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளதையும் அனைவரும் அறிவர். இந்த இருவரும் இவ்வாறு வெளியிட்டவுடன் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்புகளும், அதன் பிறகு இருவரும் தங்களுடைய கருத்திலிருந்து பின்வாங்கியதையும் அனைவரும் அறிவர். 

குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதால் நடுநிலையான இந்துக்களும், கிருத்தவர்களும், இன்னும் மாற்றுமத சகோதரர்களும் இஸ்லாத்தின் மீது, முஸ்லீம்களின் மீது இயற்கையாகவே ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. இதனால் சகோதரத்துவம் பேனும் இந்தியர்கள் மத்தியில் வெறுப்புணர்வு / காழ்ப்புணர்ச்சி உண்டாகிறது. ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, இரத்த தான சேவை, விபத்து போன்ற பேராபத்துகளில் களப்பணி/ சுனாமி போன்ற இயற்கை சீற்றம் ஏற்பட்ட போது செய்த களப்பணி போன்ற மனிதநேய செயல்களில் முஸ்லீம் இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தங்கள் மேல் திட்டமிட்டே நடத்தும் முஸ்லீம் விரோத போக்கை களைய அடிக்கடி போராட்டம் / கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்காது என்பதை பதிவு செய்கிறேன். 

முடிவுரை: 

இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் தலையிட்டு ஊடகங்களில் வெளியிடும் செய்திகளுக்கு தனிக்கை செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும். முஸ்லீம்களும் பெருமளவில் ஊடகத்துறையில் கால் பதித்து உண்மைகளை உலகுக்குணர்த்த முயற்சி செய்ய வேண்டும். இனையதளங்கள், காட்சி ஊடகம், செய்தி ஊடகம் போன்றவற்றில் முஸ்லீம்கள் கவனம் செலுத்தி ஒரு நீதியான செய்தியை தரும் செய்தியாளார்களாக, உண்மை பத்திரிக்கையாளர்களாக உருவாக வேண்டும். அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் அசாஞ்சே போன்ற பத்திரிக்கைகாரர்களை ஆதரிக்க வேண்டும். ஒரு தலைப்பட்சமாக செய்திகளை வெளியிடும் காட்சி / செய்தி ஊடகங்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். 

சமீபத்தில் ஒரு வழக்கை பற்றி மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் கூறுகையில், ஏழையான, எதுவும் செய்யவியலாத, நிரபராதிகளான நூற்றுக்கணககான முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக விசாரணையே இல்லாமல் பொய்வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் வாடுகின்றனர். இதற்கு காரணம், இந்தியாவின் போலீஸ் துறையும், உளவுத்துறையும் வகுப்புவாத மயமாக்கப்பட்டதுதான். இதற்கு ஒரே வழி, உயர் மட்டக்கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டு, இவ்வழக்குகளை பரிசீலித்து போலியாக சுமத்தப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை தள்ளுபடிச் செய்யவேண்டும். மேலும், தீவிரவாதிகள் எனக்கூறி கைதுச் செய்யப்படும் நபர்கள் நிரபராதிகள் என தெரிந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும்." எனத் தெரிவித்தார். இதையும் அரசு கவனத்தில் கொள்வது நல்லது. 

ஆக்கத்தில் உதவியது : பாலைவனத் தூது

டிஸ்கி: இந்த நான்கு தொடர்களிலும் செய்திகளை சேகரிப்பதற்கு சில தளங்களை நான் உபயோகித்திருக்கிறேன். என் நினைவில் உள்ள இணையதள முகவரிகளை குறிப்பிட்டுக்கிறேன். சில இணையதள முகவரிகள் குறிப்பிடப்படாமல் இருந்தால் தயவு கூர்ந்து மன்னித்து எனக்காக துஆ செய்யுங்கள்.

படம்: கூகிள்

முற்றும்.

தோழமையுடன்
அபு நிஹான்




No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template