Tuesday 7 June 2011

சாலை மறியல் - பிரச்சனைக்கான தீர்வல்ல

சாலை மறியல் (sample)

சாலை மறியல் பண்ணுவது என்பது இப்போது மிகவும் பிரபலமாகி(?) விட்டது. 

மின்சாரம் தடையா – உடனே சாலை மறியல் 

வெள்ள / மழை நிவாரனம் கிடைக்கவில்லையா – உடனே சாலை மறியல் 

கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லையா / தண்ணீர் லாரி வரவில்லையா – உடனே சாலை மறியல் 

தொலைபேசி இணைப்பு துண்டிப்பா – உடனே சாலை மறியல் 

சாலை விபத்தா, காவல் துறை கண்டுகொள்ளவில்லையா? – உடனே சாலை மறியல் 

பஸ் ஸ்டாப்ல பஸ் நிக்கலையா – உடனே சாலை மறியல் 

கொலை நடந்துவிட்டதா, விசாரணை தேவையா? – உடனே சாலை மறியல் 


என்று எல்லாவற்றிற்கும் சாலை மறியல் செய்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட நாகப்பட்டிணத்தில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் நேரடியாக ஒளிபரப்பப்படும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் சாலை மறியலில் இளைஞர்கள் ஈடுட்பட்டு அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் இளைஞர்களை அமைதிபடுத்தினார். பெரும்பாலான மக்களுக்கு சாலை மறியல் என்பது சட்டத்துக்கு புறம்பானது என்பதே தெரியா வண்ணம் சாலை மறியலில் கலந்து கொள்கின்றனர். 

சாலை மறியல் செய்தால் தான் தங்களுடைய கோரிக்கை ஆட்சியாளர்களிடத்திலும், மக்களிடத்திலும் போய் சேரும் என்பது தவறான எண்ணம். போராட்டம் நடத்தலாம், அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தால் அதிகாரிகளின் போக்கில் மெத்தனம் காணப்பட்டால், நீதி கிடைக்காமல் போனால், அரசின் பல்வேறு துறைகள் வேண்டுமென்றே மக்களை புறக்கணித்தால், அரசாங்கம் / அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்தால் ஜனநாயக முறைப்படி அதை எதிர் கொள்ளுங்கள். போராட்டம் நடத்துங்கள், அதன் மூலம் மக்களை திரட்டி ஆட்சியாளர்களிடத்திலும், அதிகாரிகளிடத்திலும் நீதி கேளுங்கள். நீங்கள் செய்யும் சாலை மறியல் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக இருக்கலாம், ஆனால் அதனால் மக்களில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் சாலை மறியலுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். 

அதாவது நீங்கள் மக்களின் பிரச்சனைக்காக சாலை மறியலில் ஈடுபடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்,

அப்போது ஒரு பெண்மணிக்கு பிரசவ நேரமாக இருந்தால், உங்கள் சாலை மறியல் இருவரின் உயிரையும் கேள்விக்குரியாக்கிவிடும், 
  • ஒருவன் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்ல இருக்கிறான், அப்போது நீங்கள் சாலை மறியல் செய்த காரணத்தால் உங்களால் அவன் நேர்முகத் தேர்வுக்கு செல்ல முடியாமல் போய்விடும், 
  • ஒருவன் வெளிநாடு செல்ல ஆயத்தமான நிலையில் உங்கள் சாலை மறியலால் அவன் போக முடியாமல் போனால், அவனுடைய வாழ்வாதரமே கேள்விக்குரியாகி விடும். 
  • உடல் முடியாத நோயினால் பாதிக்கப்பட்ட உறவினர்களை / நண்பர்களை காண ஒருவன் கிளம்பி வரும் வழியில் உங்கள் சாலை மறியலில் அவன் சிக்கிக் கொண்டால் … 
  • விபத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவரை / அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரை அவசர சிகிச்சைக்காக அழைத்து செல்லும் போது சாலை மறியலில் அவர்கள் சிக்கிக் கொண்டால் …. 
திருமண / இறப்பு காரியங்களுக்கு, இன்னும் எவ்வளவோ அவசர தேவைக்கு செல்வோரை தடுத்து அவர்களின் வேலையை தடுத்து அதனால் ஏற்படும் மன உலைச்சலுக்கு ஆளாகி அதன் பிரகு மக்களுக்கு நல்லது கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால், சகோதர சகோதரிகளே, அது முற்றிலும் மக்களுக்கு எதிராக செய்யப்பட்ட போரட்டம் என்றே நினைக்கத் தோன்றும். இதை நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் தான் விளங்கிக் கொள்வீர்கள். இதில் சில இஸ்லாமிய இயக்கங்களும் சளைத்தவர்களில்லை என்ற கூற்று மனதிற்கு வேதனை தருகிறது. 

இதை பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது: 

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்”என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘சாலையின் உரிமை என்ன? இறைத்தூதர் அவர்களே!” என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்,சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். ஆதார நூல்: புகாரி 6229,அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள். 

சாலையில் அமர்ந்திருக்கும் போதே எதை போன்ற ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த மார்க்கத்தில் சாலை மறியலில் ஈடுபட எப்படி அனுமதி இருக்கும். இன்று இருக்கும் சூழ்நிலையில் போராடாமல் எதுவும் கிடைக்கபோவதில்லை. ஆகவே பல இஸ்லாமிய இயக்கங்களும் உங்களை போராட அழைக்கிறது. போராட்டத்திற்கான காரணத்தையும், போராட்டம் எந்த வடிவில் இருக்கிறது என்பதை அறிந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவராகவும் இருக்கலாம், ஆனால் உங்கள் இயக்கமோ அல்லது வேறு இயக்கமோ சாலை மறியலில் ஈடுபட அழைத்தால் மட்டும் தயவு செய்து அது எவ்வளவு பெரிய பிரச்சனைக்காக இருந்தாலும் போகதீர்கள். இதனால் நம்முடைய போராட்டத்தை பற்றி இழிவாக பேசுபவர்கள் ஒருபுறம் இருக்கட்டும், மறுபுறம் நம்முடைய மார்க்கத்தை பற்றியும் தரக்குறைவாக பேசுவார்கள் என்பதை நினைவில் கொள்க.

தோழமையுடன்
அபு நிஹான்

5 comments:

  1. ஆம் சாலையை மறிப்பதால் யாருக்கு என்ன பயன்? பயனுள்ள பதிவு....

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அபுநிஹான்,
    மிகவும் அருமயான ஒரு விழிப்புணர்வை ஊட்டி எழுதியுள்ளீர்கள்.
    இந்த சாலை மறியலால் கிட்டத்தட்ட அனைவருமே தனிப்பட்ட முறையில்
    பாதிக்கப்பட்டு இருப்பர். சாலை மறியல் செய்வோர் அதை ஒரு பெருங்குற்றமாக உணர வேண்டும். நன்றி சகோ.

    ReplyDelete
  3. சரியாக சொன்னீர்கள் சகோ அதிரடி ஹாஜா.

    வருகைக்கும், தங்களின் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. அதை உணர வைப்பதில் நம் அரசுக்கு எவ்வளவு கடமை இருக்கிறதோ அதை போல பல மடங்கு கடமை சாலை மறியலில் ஈடுபட மக்களை அழைக்கும் தலைவர்களுக்கும் இருக்க வேண்டும்.

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ ஆஷிக்.

    ReplyDelete
  5. அழுத குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும்னு சொல்ற மாதிரி, தம் நீண்ட நாள் கோரிக்கைகள் உடனே நிறைவேற மக்கள் கடைபிடிப்பது இந்த சாலை மறியல். ஆனா, தம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு அதனால எவ்வள்வு பாதிப்புன்னு உணர மாட்டேங்கிறாங்க.

    வேணும்னா, இனி ”கால வரையற்ற உண்ணாவிரதம்” முயற்சித்துப் பார்க்கலாம். (கிண்டல் அல்ல; நல்ல சில சாத்வீக போராட்ட முறைகள் சிலரால் இந்நிலைக்கு ஆளாகின்றன)

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...